மார்வெல் திரைப் பிரபஞ்சம்: முதலாம் கட்டம்
முதலாம் கட்டம் | |
---|---|
தயாரிப்பு | |
மூலக்கதை | மார்வெல் வரைகதை |
நடிப்பு | கீழே பார் |
கலையகம் | மார்வெல் இசுடியோசு |
விநியோகம் |
|
வெளியீடு | 2008–2012 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | மொத்தம் (6 படங்கள்): $1 பில்லியன் |
மொத்த வருவாய் | மொத்தம் (6 படங்கள்): $3.813 பில்லியன் |
மார்வெல் திரைப் பிரபஞ்சம்: முதலாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும்.
இந்த கட்டம் 2008 இல் அயன் மேன் திரைப்பட வெளியீட்டில் தொடங்கி 2012 இல் தி அவேஞ்சர்ஸ் வெளியீட்டில் முடிந்தது. அயன் மேன் மற்றும் த இன்கிரிடிபில் ஹல்க் திரைப்படங்களில் அவி ஆராட் உடன் இணைந்து கேவின் பிகே என்பவர் ஒவ்வொரு படத்தையும் தயாரிக்க, அத்துடன் கலே அன்னே கார்டு என்பவர் ஹல்க் 2 தயாரித்துள்ளார். இந்த முதல் கட்டத்தில் ஆறு படங்கள் வெளியாகி உலகளாவில் வசூல் ரீதியாக $3.8 பில்லியனுக்கும் மேல் வசூலித்து, நேர்மறையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன் என்பவர் ஐந்து படங்களில் நடித்தார் அல்லது கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அதே சமயம் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மார்வெல் இசுடியோசு அவர்களின் மார்வெல் 'ஒன்-சாட்சு' திட்டத்திற்காக மார்வெல் திரைப் பிரபஞ்சத்தை விரிவுபடுத்த மூன்று குறும்படங்களை உருவாக்கியது, அதே நேரத்தில் ஒவ்வொரு திரைப்படமும் டை-இன் அல்லது வரைகதை புத்தகங்கள் மற்றும் நிகழ்பட ஆட்டங்களில் இருந்து தழுவல் பெற்றன. இந்த மார்வெல் திரைப் பிரபஞ்சம்: முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் ஆகியவை தி இன்பினிட்டி சாகாவாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி[தொகு]
நவம்பர் 2005 இல் நியூ லைன் சினிமாவிலிருந்து அயர்ன் மேனின் திரைப்பட உரிமையை மார்வெல் பெற்றது. பின்னர் பிப்ரவரி 2006 இல் யுனிவர்சல் இசுடியோசில் இருந்து ஹல்க்கின் திரைப்பட உரிமையைப் பெற்றதாக அறிவித்தது. அதற்கு ஈடாக த இன்கிரிடிபில் ஹல்க்கின் விநியோக உரிமையை யுனிவர்சல் இசுடியோசு என்ற நிறுவனம் உரிமையாக்க அனுமதித்தது.[1]
ஏப்ரல் 2006 இல் தோர் திரைப்படத்தை மார்வெல் இசுடியோசு தயாரிப்பாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்திடமிருந்து பிளாக் விடோவ் உரிமையையும் பெறப்பட்டது.[2]
கேவின் பிகே என்பவர் மார்ச்சு 2007 இல் அயன் மேன் திரைப்பட படப்பிடிப்பின் போது மார்வெல் இசுடியோசின் தயாரிப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். மே 2008 இல் அயன் மேன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து அயர்ன் மேன் 2[3] 7 மே 2010 அன்று வெளியிடப்படும் என்று மார்வெல் அறிவித்தது, அதைத் தொடர்ந்து தோர் (6 மே 2011),[4] கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்[5] (22 ஜூலை 2011) மற்றும் அயர்ன் மேன், தி ஹல்க், கேப்டன் அமெரிக்கா மற்றும் தோர் ஆகியவற்றைக் கொண்ட தி அவேஞ்சர்ஸ் என்ற குழு படம் 4 மே 2012 இல் வெளியானது.
திரைப்படங்கள்[தொகு]
திரைப்படம் [6] | வெளியான திகதி | இயக்குனர் | திரைக்கதை | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|
அயன்-மேன் | 2 மே 2008 | ஜான் பெவ்ரோ[7] | மார்க் பெர்கஸ், ஹாக் ஆஸ்ட்பி, ஆர்ட் மார்கம், மாட் ஹோலோவே | அவி ஆராட், கேவின் பிகே |
த இன்கிரிடிபுள் ஹல்க் | 13 ஜூன் 2008 | லூயிஸ் லெட்டரியர்[8] | ஜாக் பென் | அவி ஆராட், கலே அன்னே கார்டு, கேவின் பிகே |
அயர்ன் மேன் 2 | 7 மே 2010 | ஜான் பெவ்ரோ[9] | ஜஸ்டின் தெரூக்சு | கேவின் பிகே |
தோர் | 6 மே 2011 | கென்னத் பிரனா[10] | ஆஷ்லே மில்லர், சாக் இசுடென்ட்சு, டான் பெய்ன் | |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | 22 ஜூலை 2011 | ஜோ ஜான்ஸ்டன்[11] | கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி | |
மார்வெல்:தி அவேஞ்சர்ஸ் | 4 மே 2012 | ஜோஸ் வேடன்[12] | ஜோஸ் வேடன் |
நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்[தொகு]
கதாபாத்திரம் | அயன்-மேன் (2008) |
த இன்கிரிடிபுள் ஹல்க் (2008) |
அயர்ன் மேன் 2 (2010) |
தோர் (2011) |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011) |
மார்வெல்:தி அவேஞ்சர்ஸ் (2012) |
---|---|---|---|---|---|---|
புரூஸ் பேனர் ஹல்க் |
எட்வர்டு நார்டன் லூ ஃபெரிக்னோ |
மார்க் ருஃப்பால்லோ | ||||
கிளின்ட் பார்டன் ஹாக்ஐ |
ஜெரமி ரெனர் | ஜெரமி ரெனர் | ||||
பில் கோல்சன் | கிளார்க் கிரெக் | கிளார்க் கிரெக் | கிளார்க் கிரெக் | |||
நிக் ப்யூரி | சாமுவேல் எல். ஜாக்சன் | சாமுவேல் எல். ஜாக்சன் | சாமுவேல் எல். ஜாக்சன் | சாமுவேல் எல். ஜாக்சன் | ||
லோகி | டாம் ஹிடில்ஸ்டன் | டாம் ஹிடில்ஸ்டன் | ||||
பேப்பர் போட்ஸ் | கிவ்வினெத் பேல்ட்ரோ | கிவ்வினெத் பேல்ட்ரோ | கிவ்வினெத் பேல்ட்ரோ | |||
ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ் வார் மெஷின் |
டெரன்ஸ் ஹோவர்ட் | டான் செடில் | ||||
இசுடீவ் ரோஜர்சு கேப்டன் அமெரிக்கா |
கிறிஸ் எவன்ஸ் | |||||
நடாஷா ரோமானோஃப் பிளாக் விடோவ் |
ஸ்கார்லெட் ஜோஹான்சன் | ஸ்கார்லெட் ஜோஹான்சன் | ||||
எரிக் செல்விக் | ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் | ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் | ||||
ஹோவர்ட் இஸ்டார்க் | ஜெரார்ட் சாண்டர்ஸ் | ஜான் ஸ்லேட்டரி | டோமினிக் கூப்பர் | |||
டோனி இஸ்டார்க் அயன் மேன் |
ராபர்ட் டவுனி ஜூனியர் | ராபர்ட் டவுனி ஜூனியர் | ராபர்ட் டவுனி ஜூனியர் | ராபர்ட் டவுனி ஜூனியர் | ||
தோர் | கிறிஸ் ஹெம்ஸ்வர்த் | கிறிஸ் ஹெம்ஸ்வர்த் |
படத்தின் வருவாய்[தொகு]
திரைப்படங்கள் | வெளியீட்டு தேதி | மொத்த வருவாய் | அனைத்து நேர தரவரிசை | ஆக்கச்செலவு | |||
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்கா மற்றும் கனடா | பிற பிரதேசங்கள் | உலகளவில் | அமெரிக்கா மற்றும் கனடா | உலகளவில் | |||
அயன் மேன் 1 | மே 2, 2008 | $318,412,101 | $266,762,121 | $585,174,222 | 74 | 170 | $140 மில்லியன் |
த இன்கிரிடிபுள் ஹல்க் | ஜூன் 13, 2008 | $134,806,913 | $128,620,638 | $263,427,551 | 454 | 573 | $150 மில்லியன் |
அயன் மேன் 2 | மே 7, 2010 | $312,433,331 | $311,500,000 | $623,933,331 | 80 | 151 | $200 மில்லியன் |
தோர் | மே 6, 2011 | $181,030,624 | $268,295,994 | $449,326,618 | 257 | 246 | $150 மில்லியன் |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | ஜூலை 22, 2011 | $176,654,505 | $193,915,269 | $370,569,774 | 273 | 348 | $140 மில்லியன் |
தி அவேஞ்சர்ஸ் | மே 4, 2012 | $623,357,910 | $895,455,078 | $1,518,812,988 | 8 | 8 | $220 மில்லியன் |
விமர்சனம் மற்றும் பொதுமக்களின் கருத்து[தொகு]
திரைப்படம் | விமர்சனம் | பொதுமக்கள் | |
---|---|---|---|
அழுகிய தக்காளிகள் | மெட்டாக்ரிடிக் | சினிமாஸ்கோர்[13] | |
அயன் மேன் 1 | 94% (281 மதிப்புரைகள்) | 79 (38 மதிப்புரைகள்) | ஏ |
த இன்கிரிடிபுள் ஹல்க் | 67% (238 மதிப்புரைகள்)[14] | 61 (38 மதிப்புரைகள்)[15] | ஏ− |
அயன் மேன் 2 | 72% (304 மதிப்புரைகள்) | 57 (40 மதிப்புரைகள்)[16] | ஏ |
தோர் | 77% (291 மதிப்புரைகள்) | 57 (40 மதிப்புரைகள்)[17] | பி+ |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | 80% (274 மதிப்புரைகள்)[18] | 66 (43 மதிப்புரைகள்)[19] | ஏ− |
தி அவேஞ்சர்ஸ் | 91% (362 மதிப்புரைகள்) | 69 (43 மதிப்புரைகள்) | ஏ+ |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hughes, Mark (June 19, 2015). "Details Of Marvel's 'Hulk' Film Rights - Fans Can Relax About Sequel". Forbes. https://www.forbes.com/sites/markhughes/2015/06/19/details-of-marvels-hulk-film-rights-fans-can-relax-about-sequel/#1ae30deb1916.
- ↑ "The Word on Black Widow". IGN. June 5, 2006. March 2, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 30, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Iron Man 2, other Marvel movies set". Entertainment Weekly. May 6, 2008. December 9, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 4, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McClintock, Pamela (January 6, 2010). "'Thor' set to bow May 6, 2011". Variety. March 2, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 4, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Goldberg, Matt (April 14, 2010). "Hayley Atwell to Play the Love Interest in Captain America: The First Avenger". Collider. January 9, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 4, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Trumbore, Dave (May 1, 2018). "MCU Timeline Explained: From Infinity Stones to Infinity War and Beyond". Collider. from the original on July 5, 2018. Retrieved July 5, 2018.
- ↑ McClintock, Pamela (April 27, 2006). "Marvel Making Deals for Title Wave". Variety. Archived from the original on May 1, 2011. https://www.webcitation.org/5yMj0t8bu?url=http://www.variety.com/article/VR1117942193. பார்த்த நாள்: March 1, 2008.
- ↑ Cairns, Bryan (October 3, 2011). "Director Louis Leterrier Talks Incredible Hulk". Newsarama.com. Archived from the original on February 23, 2013. http://www.newsarama.com/film/080602-hulk-leterrier.html. பார்த்த நாள்: February 23, 2013.
- ↑ Finke, Nikki (July 9, 2008). "So What Was All The Fuss About? Marvel Locks in Jon Favreau For 'Iron Man 2′". Archived from the original on August 21, 2012. http://www.deadline.com/2008/07/marvel-locks-in-jon-favreau-for-iron-man-2/. பார்த்த நாள்: August 3, 2012.
- ↑ Fleming, Michael (September 28, 2008). "Branagh in talks to direct 'Thor'". Archived from the original on April 18, 2015. https://web.archive.org/web/20150418163819/http://variety.com/2008/film/markets-festivals/branagh-in-talks-to-direct-thor-1117993032/. பார்த்த நாள்: September 29, 2008.
- ↑ Kit, Borys (November 9, 2008). "'Captain America' recruits director". Archived from the original on July 2, 2011. http://www.hollywoodreporter.com/news/captain-america-recruits-director-122606. பார்த்த நாள்: November 10, 2008.
- ↑ . April 13, 2010. Archived from the original on April 25, 2011. http://www.variety.com/article/VR1118017689.html. பார்த்த நாள்: April 14, 2010.
- ↑ "CinemaScore". CinemaScore. August 9, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 27, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Incredible Hulk (2008)". Rotten Tomatoes. Fandango.
- ↑ "The Incredible Hulk Reviews". Metacritic. CBS Interactive. May 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Iron Man 2 Reviews". Metacritic. CBS Interactive. May 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thor Reviews". Metacritic. CBS Interactive. May 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Captain America: The First Avenger (2011)". Rotten Tomatoes. Fandango.
- ↑ "Captain America: The First Avenger Reviews". Metacritic. CBS Interactive. May 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.