எரிக் செல்விக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் செல்விக்கு
Erik Selvig
மார்வெல் திரைப் பிரபஞ்சம் கதை மாந்தர்
முதல் தோற்றம் தோர் (2011)
உருவாக்கியவர்
வரைந்தவர்(கள்) ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
தகவல்
தொழில்வானியற்பியல்
தலைப்புமருத்துவர்

எரிக் செல்விக் (ஆங்கில மொழி: Erik Selvig) என்பது நடிகர் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் என்பவர் நடித்த ஒரு கற்பனைக் கதாபாத்திரம் ஆகும். இது மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களான தோர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் போன்ற படங்களில் தோன்றியுள்ளது.

இவர் அஸ்கார்டியன் தோர் மற்றும் அரசு அமைப்பான ஷீல்ட் உடன் தொடர்பு கொண்ட ஒரு வானியற்பியல் நிபுணராக சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் பல மார்வெல் திரைப் பிரபஞ்ச டை-இன் வரைகதைகளிலும் காணப்படுகின்றார். அத்துடன் மார்வெல் வரைக்கதையால் வெளியிடப்பட்ட எம்.சி.யு அல்லாத வரைகதைகள் உட்பட பிற ஊடகங்களிலும் இந்த பாத்திரம் தோன்றும். இவர் 2018 டை-இன் உரைநடை நாவலான தி காஸ்மிக் குவெஸ்ட் வால்யூம் டூ: ஆஃப்டர்மாத்தின் முக்கிய கதாநாயகனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கம்[தொகு]

அக்டோபர் 2009 இல், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் என்பவர் தோர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[1] இவரின் கதாபாத்திரம் ஆஷ்லே மில்லர், சாக் இசுடென்ட்சு மற்றும் டான் பெய்ன் ஆகியோரால் எழுதப்பட்டது. அத்துடன் இவர் ஐந்து திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. O'Hara, Helen (October 5, 2009). "Stellan Skarsgard Joins Thor". Empire இம் மூலத்தில் இருந்து November 16, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121116174320/http://www.empireonline.com/news/story.asp?NID=25981. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_செல்விக்கு&oldid=3852973" இலிருந்து மீள்விக்கப்பட்டது