தோர் (வரைகதை)
தோர் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 (ஆகஸ்ட் 1962) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ லாரி லிபர் ஜாக் கிர்பி |
கதை தகவல்கள் | |
முழுப் பெயர் | தோர் ஒடின்சன் |
பிறப்பிடம் | அஸ்கார்ட் |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் வாரியர்ஸ் மூன்று தோர் கார்ப்ஸ் சிகுர்ட் ஜார்ல்சன் எரிக் மாஸ்டர்சன் அவென்ஜர்ஸ் யூனிட்டி ஸ்குவாட் |
திறன்கள் |
|
தோர் (இடி அரசன்) (ஆங்கில மொழி: Thor) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த பாத்திரம் 'தோர்' என்ற பெயரில் உள்ள அஸ்கார்டியன் நாட்டு தெய்வமான இடியின் கடவுளை பற்றியது. இவர் சுத்தியலை கொண்டு இடியை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர் மற்றும் வானில் பறக்கும் திறமை உடையவன்.
இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் – பதிப்பாசிரியர் ஸ்டான் லீ, எழுத்தாளர் - லாரி லிபர் மற்றும் எழுத்தாளர் - கலைஞர் - ஆசிரியர் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினார்கள். தோரின் முதல் தோற்றம் ஆகஸ்ட் 1962 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இவர் பல தொடர்களில் நடித்துள்ளார் மேலும் அவென்ஜர்ஸ் என்ற மீநாயகன் அணியின் நிறுவன உறுப்பினராக உள்ளார், அந்த தொடரின் ஒவ்வொரு தொகுதியிலும் தோன்றுவார். இந்த பாத்திரம் இயங்குபடம் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்பட ஆட்டம், ஆடை, பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உள்ளிட்ட தொடர்புடைய மார்வெல் பொருட்களில் தோன்றியுள்ளது.[1][2]
1988 ஆம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படமான 'தி இன்க்ரெடிபிள் ஹல்க் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் எரிக் ஆலன் கிராமர் இந்த பாத்திரத்தை முதன்முதலில் திரைப்பட வடிவமாக சித்தரித்தார். தோர் என்ற பாத்திரத்திற்கு நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் என்பவர் உயிர் கொடுத்தார். இவர் தோர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் (2015), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சிறப்பு தோற்றம் (2016), தோர்: ரக்னராக் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற பல திரைப்படங்களில் தோர் ஒடின்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 வரைகதை புத்தக மீநாயகன்கள் " பட்டியலில் தோர் 14 வது இடத்தையும்,[3] 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் முதலிடத்தையும் பெற்றார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Fleming, Mike (June 30, 2011). "Marvel And Disney Setting 'Thor 2' For Summer 2013; Chris Hemsworth's Back But Kenneth Branagh Won't Return" இம் மூலத்தில் இருந்து July 6, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zxsm5vBY?url=http://www.deadline.com/2011/06/marvel-and-disney-sets-thor-2-for-summer-2013-kenneth-branagh-wont-return/. பார்த்த நாள்: July 1, 2011.
- ↑ "Marvel's Agents of S.H.I.E.L.D. Season 1, Ep. 8 – Clip 1". யூடியூப். November 18, 2013 இம் மூலத்தில் இருந்து January 31, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6W08FcuQN?url=https://www.youtube.com/watch?v=yrlr6OrSkLA. பார்த்த நாள்: February 1, 2015.
- ↑ "IGN's Top 100 Comic Book Heroes of All Time". IGN இம் மூலத்தில் இருந்து October 30, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141030003343/http://www.ign.com/top/comic-book-heroes/14. பார்த்த நாள்: May 13, 2014.
- ↑ "The Top 50 Avengers". IGN. April 30, 2012 இம் மூலத்தில் இருந்து October 3, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151003175228/http://www.ign.com/top/avengers/1. பார்த்த நாள்: July 28, 2015.
வெளியிணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Thor_(Thor_Odinson) at the Marvel Universe wiki
- Larry Lieber interview in Alter Ego vol. 3, #2 (Fall 1999)