உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாக் பாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாக் பாந்தர்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுபென்டாஸ்டிக் போர் #52 (ஜூலை 1966)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
முழுப் பெயர்டி'சல்லா
பிறப்பிடம்வகாண்டா, ஆப்பிரிக்கா
குழு இணைப்பு
பங்காளர்கள்ஸ்டார்ம்
சூரி
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்இறந்த மன்னர்
திரு. ஒகோன்க்வோ
திறன்கள்
  • ஒவ்வொரு முந்தைய பிளாக் பாந்தரின் அறிவு, வேகம், வலிமை மற்றும் அனுபவம்
  • மனித சக்திக்கு அப்பாற்பட்டவன், சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை, ஆயுள் மற்றும் புலன்கள்
  • அதி புத்திசாலி
  • மற்றும் கண்டுபிடிப்பாளர்

பிளாக் பாந்தர் அல்லது பிளாக் பான்தர் (கருஞ்சிறுத்தை) (ஆங்கில மொழி: Black Panther) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர், பதிப்பாசிரியர் ஸ்டான் லீ மற்றும் கலைஞர், ஆசிரியர் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். பிளாக் பாந்தரின் முதல் தோற்றம் ஜூலை 1966 இல் இருந்தது பென்டாஸ்டிக் போர் #52 முதல் தோற்றுவிக்கப்பட்டது. பிளாக் பாந்தரின் உண்மையான பெயர் டி'சல்லா இவர் கற்பனையான ஆப்பிரிக்க தேசமான வகாண்டாவின் அரசன் மற்றும் பாதுகாவலர்.

அந்த நாட்டுக்கு தகுதியான அரசனை நீல நிற பூவின் மூலிகை சாரத்தை குடிக்க வைத்து பழங்கால வகாண்டன் சடங்குகளின் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி தேர்வு செய்யும் அரசனுக்கு போர்களை கை ஆளும் திறன், அறிவியல் திறன்கள் கிடைக்கப்பெறும். அமெரிக்க வரைகதை புத்தகத்தில் இடம் பெறும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதல் மீநாயகன் பிளாக் பாந்தர் ஆகும். அதை தொடர்ந்து மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான பால்கன் (1969), லூக் கேஜ் (1972), பிளேடு (1973) அல்லது டீசீ காமிக்ஸ் கதாபாத்திரமான ஜான் ஸ்டீவர்ட் போன்ற ஆப்பிரிக்க மீநாயகன்கள் உண்டு.

பிளாக் பாந்தர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இயங்குபடம் படங்கள் மற்றும் நிகழ்பட ஆட்டகங்ளில் ஏராளமான தோற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார். மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான பிளாக் பாந்தர் என்ற பாத்திரத்திற்கு நடிகர் சட்விக் போஸ்மேன் என்பவர் உயிர் கொடுத்தார். 2016 ஆம் ஆண்டு முதல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், பிளாக் பான்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 வரைகதை புத்தக மீநாயகன்கள் " பட்டியலில் தோர் 51 வது இடத்தை பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IGN's Top 100 Comic Book Heroes: #51 Black Panther". IGN.

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாக்_பாந்தர்&oldid=3328306" இலிருந்து மீள்விக்கப்பட்டது