பக்கி பார்ன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கி பார்ன்சு
கேப்டன் அமெரிக்கா உடன் பக்கி.
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபக்கியாக:
கேப்டன் அமெரிக்கா #1 (மார்ச் 1941)
விண்டேர் சோல்டயராக:
கேப்டன் அமெரிக்கா' #1 (சனவரி 2005)
கேப்டன் அமெரிக்காவாக:
கேப்டன் அமெரிக்கா #34 (சனவரி 2008)
உருவாக்கப்பட்டதுஜோ சைமன்
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஜேம்ஸ் புக்கானன் பார்ன்சு
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பங்காளர்கள்கேப்டன் அமெரிக்கா
பால்கன்
பிளாக் விடோவ்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்பக்கி, விண்டேர் சோல்டயர், கேப்டன் அமெரிக்கா
திறன்கள்
  • கைகோர்த்து போராடும் திறன் & தற்காப்பு கலைஞர்
  • திறமையான துப்பாக்கி சுடும் வீரர்
  • இராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், கத்திகளை வீசுவதிலும் வல்லவர்
  • திறமையான கொலையாளி மற்றும் உளவாளி

இரும்பு கை வழியாக:

  • மனிதாபிமானமற்ற வலிமை
  • ஆற்றல் திட்டம்

இன்பினிட்டி பார்முலா வழியாக:

  • மேம்பட்ட உயிர்ச்சக்தி
  • மேம்பட்ட வலிமை, வேகம், சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் காயத்தை எதிர்க்கும் தன்மை

ஜேம்சு புக்கானன் பார்ன்சு (ஆங்கில மொழி: James Buchanan "Bucky" Barnes Jr.) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும்.

இந்த கதாப்பாத்திரத்தை ஜோ சைமன் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் மார்ச் 1941 இல் வெளியான 'கேப்டன் அமெரிக்கா #1' என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவரை 'விண்டர் சோல்ஜர்' என்றும் அழைக்கப்படுகின்றது, ஏனெனில் மூளைச் சலவை செய்யப்பட்ட பிறகு இவரை கொலையாளி சைபோர்க் என கூறப்படுகின்றது. அத்துடன் இறப்பிலிருந்து இவரின் கதாபாத்திரம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இவரின் நண்பரான இசுடீவ் ரோஜர்சு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டபோது அவர் தற்காலிகமாக "கேப்டன் அமெரிக்கா" பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். 2011 இல் இவருக்கு இன்பினிட்டி பார்முலாவை உட்செலுத்தினார்கள், இது கேப்டன் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட சூப்பர்-சோல்ஜர் சீரம் போன்றது (ஆனால் அதை விட குறைவான சக்தி) இது இயற்கையான உயிர் மற்றும் உடல் பண்புகளை அதிகரித்து பலத்தை கொடுக்கின்றது.

இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் செபாஸ்டியன் இஸ்டான் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), பிளாக் பான்தர் (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018),[1] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[2] போன்ற படங்களிலும் மற்றும் பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாட் இப்...? (2021) என்ற இயங்குபடத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கி_பார்ன்சு&oldid=3328310" இருந்து மீள்விக்கப்பட்டது