ஸ்கார்லட் விட்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கார்லட் விட்ச்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅன்கேனி எக்ஸ்-மென் #4 (மார்ச் 1964)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புவாண்டா மரியா மாக்சிமோப்
வாண்டா பிராங்க்
இனங்கள்ஒரு மனித விகாரி
பிறப்பிடம்டிரான்சியா
குழு இணைப்பு
பங்காளர்கள்குவிக்சில்வர்
விஷன்
அகதா ஹர்க்னஸ்
திறன்கள்
 • விஞ்ஞான ரீதியாக மேம்படுத்தப்பட்ட மந்திர திறன்கள்[2]
 • நிகழ்தகவு கையாளுதல்
 • நிகழ்தகவு கையாளுதல்
 • நேர கையாளுதல்
 • தொடர்பு கொள்ளும் திறன்

ஸ்கார்லட் விட்ச் (சூனியக்காரி) (ஆங்கில மொழி: Scarlet Witch) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு பெண் மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினர். இவரின் முதல் தோற்றம் மார்ச் 1964 இல் அன்கேனி எக்ஸ்-மென் #4 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இவர் குவிக்சில்வரின் இரட்டை சகோதரியாக சூப்பர்வில்லனாக சித்திரைக்கப்பட்டது. பெரும்பாலான சித்தரிப்புகளில் இவர் ஒரு விகாரி யாகவும் மனிதநேயமற்ற திறன்களுடன் பிறந்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார், மேலும் மக்னெட்டோவின் மகளாகவும் கருதப்பட்டார்.[3]

ஸ்கார்லெட் விட்ச் குறிப்பிடப்படாத வழிகளில் யதார்த்தத்தை மாற்றுவதற்கான திறன்களைக் கொண்டவராகவும் மற்றும் ஒரு சக்திவாய்ந்த சூனியக்காரி ஆகும். ஸ்கார்லெட் விட்ச் பின்னர் அவென்ஜர்ஸ் மீநாயகன் அணியின் வழக்கமான உறுப்பினராக சித்தரிக்கப்படுகிறார். இவர் சக மீநாயகன் மற்றும் அணி வீரர் விஷனின் மனைவியும் ஆவார். இவர்களுக்கு தாமஸ் மற்றும் வில்லியம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் பாத்திரம் இயங்குபடம் செய்யப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆர்கேட் மற்றும் நிகழ்பட ஆட்டம் மற்றும் மார்வெல் தொடர்பான பிற வணிகப் பொருட்களிலும் சித்தரிக்கப்பட்டார். மார்வெல் திரைப் பிரபஞ்சம்[4] உரிமையில் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[5] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7]

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lee, Stan (w), Kirby, Jack (p), Dick Ayers (i). "The Old Order Changeth" Avengers 16 (May 1965)
 2. Scarlet Witch (2016) Issue 08
 3. Acuna, Kirsten (April 30, 2015). "Why these two characters are allowed to appear in both the X-Men and Avengers movies". Business Insider. Archived from the original on August 17, 2016. பார்க்கப்பட்ட நாள் April 27, 2016.
 4. Milly, Jenna (March 14, 2014). "Captain America: The Winter Soldier premiere: Crossover is the word". Entertainment Weekly. Archived from the original on March 17, 2014. பார்க்கப்பட்ட நாள் March 17, 2014.
 5. Johnson, Zach (April 23, 2015). "Elizabeth Olsen Will Star in Captain America: Civil War!". E! Online. Archived from the original on September 27, 2016.
 6. "Official: Elizabeth Olsen & Aaron Taylor-Johnson Join Avengers: Age of Ultron". Marvel. November 25, 2013. Archived from the original on March 17, 2014. பார்க்கப்பட்ட நாள் November 25, 2013.
 7. Goldberg, Matt (May 5, 2014). "Avengers 2: Aaron Taylor Johnson & Elizabeth Olsen Talk Quicksilver & Scarlet Witch". IGN. Archived from the original on November 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 27, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கார்லட்_விட்ச்&oldid=3331251" இலிருந்து மீள்விக்கப்பட்டது