இசுடார் லோர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுடார் லோர்டு
Star Lord.jpg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'மார்வெல் பிரிவியூ' #4 (ஜனவரி 1976)
உருவாக்கப்பட்டதுஇசுடீவ் எங்லெஹார்டு
இசு டீவ் கான்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புபீட்டர் ஜேசன் குயில்
இனங்கள்மனிதன் /வேற்று கிரகவாசி (இசுபார்டோய்) கலப்பு
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
இன்பினிட்டி வாட்ச்
ராவேஜர்ஸ்
அண்ணிகிளாடின்
நோவா கார்ப்சு
திறன்கள்
  • மனிதன் மற்றும் இசுபார்டோய் கலப்பினம், உடலியல் அவருக்கு அதிக வலிமை மற்றும் நீண்ட ஆயுளை அளிக்கிறது.
  • சிறந்த தந்திரவாதி மற்றும் கள தளபதி.
  • நிபுணர், போராளி மற்றும் சிறந்த தற்காப்புக் கலைஞர்.
  • திறமையாக துப்பாக்கி சூடுபவர் .
  • பல்வேறு வகையான அன்னிய தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களின் நிபுணர் மற்றும் பயனர்.
  • சிறந்த விமானி .
  • பூமி மற்றும் வேற்றுகிரகத்தில் உயிர்வாழ தலைக்கவசம் பயன்படுத்துதல், முன்பு அவரது கழுத்தில் ஒரு உலகளாவிய மொழிபெயர்ப்பு இருந்தது.

இசுடார் லோர்டு அல்லது ஸ்டார்-லோர்ட் (ஆங்கில மொழி: Star Lord) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும்.[1] இப்பாத்திரம் எழுத்தாளர் இசுடீவ் எங்லெஹார்டு மற்றும் இசு டீவ் கான் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இவரின் முதல் தோற்றம் சனவரி 1976 இல் வெளியான 'மார்வெல் பிரிவியூ' #4' என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவர் ஒரு மனித தாயுக்கும் வேற்றுக்கிரவாசியான இசுபார்டாய் ஜே'சன் என்பவருக்கும் பிறந்தவர். இவரின் இயற்பெயர் 'பீட்டர் ஜேசன் குயில்' ஆகும். இவர் ஒரு கிரகக் காவலர் ஆவார்.

இந்த கதாபாத்திரம் 'அண்ணிகிளாடின்' (2006), 'அண்ணிகிளாடின்: காணியூஸ்ட்' (2007), 'வார் ஆஃப் கிங்ஸ்' (2008), மற்றும் 'தனோஸ் இம்பிரேடிவ்' (2009) ஆகிய வரைகதை புத்தகக் கதைகளில் முக்கியப் பாத்திரங்களில் தோன்றின. இதே பெயரில் 2008 ஆம் ஆண்டு வெளியான வரைகதையின் மறு வெளியீட்டில் விண்வெளி அடிப்படையிலான மீநாயகன் அணியான கார்டியன்சு ஒப் த கலக்சியின் தலைவனாக சித்தரிக்கப்பட்டார்.

இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டகங்கள், பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் சட்விக் போஸ்மேன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Englehart, Steve (n.d.). "Star-Lord". SteveEnglehart.com. October 16, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 26, 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடார்_லோர்டு&oldid=3328360" இருந்து மீள்விக்கப்பட்டது