குவிக்சில்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவிக்சில்வர்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅன்கேனி எக்ஸ்-மென் #4 (மார்ச் 1964)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
முழுப் பெயர்பியட்ரோ ஜாங்கோ மாக்சிமோப்
பிறப்பிடம்செர்பியா
குழு இணைப்பு
பங்காளர்கள்ஸ்கார்லட் விட்ச்
திறன்கள்வேகம்

குவிக்சில்வர் (ஆங்கில மொழி: Quicksilver) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரம் ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. குவிக்சில்வரின் முதல் தோற்றம் மார்ச் 1964 இல் அன்கேனி எக்ஸ்-மென் #4 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் எக்ஸ்-மென் மற்றும் அவென்ஜர்ஸ் போன்ற தொடர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று ரீதியாக அவென்ஜர்ஸ் அணி உறுப்பினராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

குவிக்சில்வர் அதிக வேகத்தில் நகரும் மனிதனுக்கு அப்பாற்பட்ட திறனைக் கொண்டுள்ளது. பெரும்பாலான சித்தரிப்புகளில் இவர் ஒரு மனிதனுக்கும் மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட மீநாயகனுக்கும் பிறந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குவிக்சில்வர் பாத்திரம் எக்ஸ் மெனுடன் தொடர்புடைய புனைகதைகளில் எக்ஸ்-மென் அணியின் எதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிற்கால கதைகளில் இவர் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆனார். பெரும்பாலான சித்தரிப்புகளில் ஸ்கார்லட் விட்ச்சின் இரட்டை சகோதரராகவும், மக்னெட்டோவின் மகனாகவும் மற்றும் போலரிஸின் அரை சகோதரராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காமிக் புத்தகங்களின் வெள்ளி காலத்தில் அறிமுகமான குவிக்சில்வர் பல தசாப்தங்களாக மார்வெல் தொடர் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ளார். இவர் குவிக்சில்வர் என்ற தொடரிலும் மற்றும் அவென்ஜர்ஸ் என்ற மீநாயகன் தொடரிலும் வழக்கமான குழு உறுப்பினராக நடித்தார். 2006 ஆம் ஆண்டில் ஐ.ஜி.என் அவர்களின் "எல்லா நேரத்திலும் சிறந்த 25 எக்ஸ்-மென்" பட்டியலில் குவிக்சில்வர் 23வது இடமும்[1] மற்றும் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 44வது இடமும் பிடித்தார்.[2]

இந்த பாத்திரம் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட தழுவல்களிலும் தோன்றியுள்ளது. குவிக்சில்வரின் பாத்திரம் இரண்டு தனித்தனி நேரடி திரைப்படங்களில் இரண்டு வெவ்வேறு திரைப்பட நிறுவனங்களால் தழுவப்பட்டுள்ளன. நடிகர் ஆரோன் டெய்லர் ஜான்சன் என்பவர் இந்த கதாபாத்திரத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சம் உரிமையில் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) இல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மற்றும் நடிகர் இவான் பீட்டர்ஸ் என்பவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் உரிமையில் எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016) எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) மற்றும் சிறப்பு தோற்றம் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldstein, Hilary; George, Richard (May 15, 2006). "The Top 25 X-Men". IGN. பார்க்கப்பட்ட நாள் March 17, 2010.
  2. "The Top 50 Avengers". IGN. April 30, 2012. Archived from the original on நவம்பர் 18, 2016. பார்க்கப்பட்ட நாள் July 28, 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிக்சில்வர்&oldid=3685957" இலிருந்து மீள்விக்கப்பட்டது