உள்ளடக்கத்துக்குச் செல்

மோனிகா ராம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனிகா ராம்போ
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுகேப்டன் மார்வெல்:
தி அமேசிங் இசுபைடர் மேன் அணுவில் #16 (அக்டோபர் 1982)
போட்டான்:
அவெஞ்சர்ஸ் அன்ப்ளக்டு #5 (ஜூன் 1996)
பல்சர்:
நியூ தண்டர்போல்ட்சு #9 (ஆகஸ்ட் 2005)
ஸ்பெக்ட்ரம்:
மைட்டி அவெஞ்சர்ஸ் #1 (நவம்பர் 2013)
உருவாக்கப்பட்டதுரோஜர் ஸ்டெர்ன்
ஜான் ரோமிதா ஜூனியர்
கதை தகவல்கள்
முழுப் பெயர்மோனிகா ராம்போ
குழு இணைப்புஅவெஞ்சர்ஸ்
திறன்கள்
  • ஆற்றல் சக்தி உறிஞ்சுதல் மற்றும் கையாளுதல்
  • அவரது ஆற்றல் வடிவத்தில் இருக்கும்போது ஒளியின் வேகம் வரை வேகத்தில் பயணிக்கும் திறன், மின்காந்த நிறமாலைக்குள் தனது உடலை எந்த வகையான ஆற்றலாகவும் மாற்றும் மற்றும் விண்வெளியின் பயணிக்கும் திறன்

மோனிகா ராம்போ (ஆங்கில மொழி: Monica Rambeau) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு பெண் மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ரோஜர் ஸ்டெர்ன் மற்றும் ஜான் ரோமிதா ஜூனியர் ஆகியோரால், அக்டோபர் 1982 இல் வெளியான தி அமேசிங் இசுபைடர் மேன் அணுவில் #16 என்ற கதையின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.[1] இவர் ஆரம்பத்தில் இரண்டாவது கேப்டன் மார்வெலாக அறிமுகப்படுத்தப்பட்டார், பின்னர் ஆற்றல் சீர்குலைக்கும் ஆயுதத்தால் உற்பத்தி செய்யப்பட்ட கூடுதல் ஆற்றல் மூலம் குண்டுவீசப்பட்ட பின்னர் அவர் சூப்பர் சக்திகளைப் பெற்றார். இவர் இறுதியில் அவெஞ்சர்ஸ் குழுவின் தலைவர் ஆனார். அதை தொடர்ந்து இவர் நெக்ஸ்ட்வேவ் மற்றும் சமீபத்திய அல்டிமேட்ஸ் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவரை போட்டான், பல்சர் மற்றும் 2013 இல் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் என்றும் அழைக்கப்படுகிறார்.

அகிரா அக்பர்[2] மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் மார்வெல் (2019) இல் இளம் மோனிகா ராம்பியூவாக நடித்தார். பின்னர் நடிகை டெயோனா பாரிசு என்பவர் வாண்டாவிஷன்[3][4] (2021) என்ற தொலைக்காட்சி குறுந்தொடரில் ராம்போவின் வயது வந்தோருக்கான பதிப்பை சித்தரிக்கிறார் அதைத்தொடர்ந்து தி மார்வெல்ஸ் (2023) என்ற படத்திலும் தோன்றுவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan; Bray, Adam (2019). The Marvel Encyclopedia. DK Publishing. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-7890-0.
  2. Lussier, Germain (February 1, 2019). "A New Captain Marvel TV Spot Gives Us Hope for Marvel's Next Generation". Gizmodo. Archived from the original on February 1, 2019. பார்க்கப்பட்ட நாள் February 1, 2019.
  3. Nolan, L.D. (July 20, 2019). "WandaVision Casts Mad Men Alum As Its Adult Monica Rambeau". CBR. Comic Book Resources. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  4. Trenholm, Richard; E. Solsman, Joan (November 12, 2020). "Marvel's WandaVision will stream on Disney Plus starting Jan. 15". CNET. Archived from the original on November 12, 2020. பார்க்கப்பட்ட நாள் November 12, 2020.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_ராம்போ&oldid=3849468" இலிருந்து மீள்விக்கப்பட்டது