எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற்

எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற்
இயக்கம்பிறையன் சிங்கர்
தயாரிப்புலாரன் ஷல்லர் டோனர், சைமன் கின்பெர்க், ப்ரையன் சிங்கர், ஹட்ச் பார்க்கர்
திரைக்கதைசைமன் கின்பெர்க்
இசைஜான் ஓட்மேன்
நடிப்புஹக் ஜேக்மேன்
ஜேம்ஸ் மெக்காவே
மைக்கேல் பாஸ்பேண்தே
ஜெனிபர் லாரன்ஸ்
ஹாலே பெர்ரி
நிக்கோலசு ஹோல்ட்
எலன் பேஜ்
சான் ஆஷ்மோர்
பீட்டர் டின்க்லகே
இயன் மெக்கெல்லன்
பேட்ரிக் ஸ்டீவர்ட்
ஓமர் சி
டேனியல் கிட்மோரே
பூபூ ஸ்டீவர்ட்
பேன் பின்க்பிங்
ஆடன் கண்டோ
இவான் பீட்டர்ஸ்
ஜோஷ் ஹெல்மன்
லூகாஸ் டில்
படத்தொகுப்புஜான் ஓட்மேன்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடு23-05-2014 (அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$732,957,859

எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற் (ஆங்கிலம்: X-men Days of Future Past, தமிழ்: எக்ஸ்-மென்: கடந்த காலத்தின் எதிர்காலம்) 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம். இது எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் வரும் 7வது பகுதி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிறையன் சிங்கர் இயக்குகின்றார். இவர் ஏற்கனவே வெளிவந்த எக்ஸ் மேன்-பர்ஸ்ட் கிளாஸ் என்ற படத்தை இயக்கியவர். இந்த திரைப்படத்தில் ஹக் ஜேக்மேன், ஜேம்ஸ் மெக்காவே, மைக்கேல் பாஸ்பேண்தே, ஜெனிபர் லாரன்ஸ், ஹாலே பெர்ரி, நிக்கோலசு ஹோல்ட், எலன் பேஜ், சான் ஆஷ்மோர், பீட்டர் டின்க்லகே, இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஓமர் சி, டேனியல் கிட்மோரே, பூபூ ஸ்டீவர்ட், பேன் பின்க்பிங், ஆடன் கண்டோ, இவான் பீட்டர்ஸ், ஜோஷ் ஹெல்மன் மற்றும் லூகாஸ் டில் நடித்துள்ளார்கள். இந்த படம் 3D & 2D இல், 2014 மே 23ம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

நடிகர்களின் நடிப்பு[தொகு]

வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக் ஜேக்மேன், முந்தைய எக்ஸ் மென் படங்களில் நடித்திருப்பதுபோல் இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய கம்பீரமான தோற்றம் மிரட்டலாக இருக்கிறது.

மிஸ்டிக் கதாபாத்திரத்தில் வரும் ஜெனிபர் லாரன்ஸ் ஊதா நிறத்திலான தோற்றத்துடன் பயமுறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவரை மையப்படுத்தியே கதை நகர்வதால் இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு அதிகம். அதை அவர் கவனமாகவும், திறமையாகவும் செய்திருக்கிறார்.

50 வருடங்களுக்கு முந்தைய பேராசியரியராக வரும் ஜேம்ஸ் மெக்காவே, வில்லனாக வரும் மைக்கேல் பாஸ்பேண்தே ரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு[தொகு]

இந்த திரைப்படம் மொண்ட்ரியால் எடுக்கப்பட்டது.

  • ஒலிம்பிக் ஸ்டேடியம்
  • மாண்ட்ரீல் சிட்டி ஹால்
  • மெக்கில் பல்கலைக்கழகம்

வெளியீடு[தொகு]

இதன் முதன்மை புகைப்படம் மாண்ட்ரீல், கனடாவில் ஏப்ரல் 2013 ல் தொடங்கிய ஆகஸ்ட் 2013 ல் முடிந்தது. இந்த படம் 3D & 2D இல், 2014 மே 23ம் திகதி வெளியானது.

இசை[தொகு]

இந்த திரைப்படத்துக்கு ஜான் ஓட்மேன் இசை அமைகிற்றார், இவர் முன்னதாக எக்ஸ்-மென் 2 திரைப்படத்துக்கு இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தொழிற்நுட்பங்களின் 3D கலவை எக்ஸ் மென் ரீலிஸ்". Jayate.com.
  2. "23ஆம் தேதி எக்ஸ் மென் புதிய பாகம் ரிலீஸ்". Dinamani.

வெளி இணைப்புகள்[தொகு]