இசுபைடர்-மேன் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுபைடர்-மேன் 3
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாம் ரைமி
தயாரிப்புஅவி ஆராட்
லாரா ஜிஸ்கின்
கிராண்ட் கர்டிஸ்
மூலக்கதை
இசுபைடர்-மேன்
படைத்தவர்
திரைக்கதைஆல்வின் சார்ஜென்ட்
சாம் ரைமி
இவான் ரைமி
இசைகிறிஸ்டோபர் யங்
நடிப்பு
  • தோபி மக்குயர்
  • கிர்ஸ்டன் டன்ஸ்
  • ஜேம்ஸ் பிரான்கோ
  • தாமஸ் ஹேடன் சர்ச்
  • டோபர் கிரேஸ்
  • பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்
  • ஜேம்ஸ் குரோம்வெல்
  • ரோஸ்மேரி ஹாரிஸ்
  • ஜே.கே சிம்மன்ஸ்
ஒளிப்பதிவுபில் போப்
படத்தொகுப்புபாப் முராவ்ஸ்கி
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுஏப்ரல் 16, 2007 (2007-04-16)(ரோப்போங்கி
ஹில்ஸ் மோரி டவர்)

மே 4, 2007 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்139 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$258–350 மில்லியன்[3][4][5]
மொத்த வருவாய்$895 மில்லியன்

இசுபைடர்-மேன் 3 (Spider-Man 3) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ், லாரா ஜிஸ்கின் புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை ஆகியவை இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இந்த திரைப்படத்தை அவி ஆராட், இவான் ரைமி மற்றும் லாரா ஜிஸ்கின் ஆகியோர் தயாரிக்க ஆல்வின் சார்ஜென்ட், சாம் ரைமி மற்றும் இவான் ரைமி போன்றோர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் தோபி மக்குயர், கிர்ஸ்டன் டன்ஸ், ஜேம்ஸ் பிரான்கோ, தாமஸ் ஹேடன் சர்ச், டோபர் கிரேஸ், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், ஜேம்ஸ் குரோம்வெல், ரோஸ்மேரி ஹாரிஸ் மற்றும் ஜே.கே சிம்மன்ஸ் போன்ற பல நடித்துள்ளார்கள்.

இசுபைடர்-மேன் 3 படம் ஏப்ரல் 16, 2007 அன்று டோக்கியோவில் திரையிடப்பட்டது, மேலும் அமெரிக்காவில் வழக்கமான மற்றும் ஐமாக்ஸ் திரையரங்குகளில் மே 4, 2007 அன்று வெளியாகி, உலகளவில் 890.9 மில்லியனை வசூலித்தது, இது 2007 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமும் ஆகும்.

இசுபைடர் மேன் திரைப்படத் தொடர் இரண்டு முறை மறு உருவாக்கம் செய்யப்பட்டது; முதலில் தி அமேசிங் இசுபைடர்-மேன் (2012) என்ற பெயரில் மார்க் வெப் இயக்கத்தில் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட் என்பவர் நடித்தார். பின்னர் இயக்குனர் ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்தார். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு புதிய திரைப்படத் தொடராக அமைக்கப்பட்டது. அது இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) என்ற படத்துடன் தொடங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபைடர்-மேன்_3&oldid=3157814" இருந்து மீள்விக்கப்பட்டது