தி மார்வெல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி மார்வெல்ஸ்
இயக்கம்நியா டகோஸ்டா[1]
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
திரைக்கதைமேகன் மெக்டோனல்
நடிப்பு
ஒளிப்பதிவுசீன் பாபிட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 11, 2022 (2022-11-11)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி மார்வெல்ஸ் (The Marvels)[2] என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேப்டன் மார்வெல் / கரோல் டான்வர்ஸ் போன்ற கற்பனை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான மிஸ். மார்வெல் என்ற டிஸ்னி+ தொடரின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்தி ஒன்றாம் திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை நியா டகோஸ்டா[3] என்பவர் இயக்க, கேவின் பிகே[4] தயாரிப்பில் பிரி லார்சன், தியோனா பாரிஸ்[5] மற்றும் இமான் வேலனி[6] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மார்வெல் ஸ்டுடியோஸ்[7] ஜூலை 2019 இல் கேப்டன் மார்வெலின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது, மேலும் 2020 ஜனவரியில் மெக்டோனல் திரைக்கதையாளராக இணைந்தார், பிரி லார்சன் மீண்டும் இதில் நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.[8] ஆகஸ்டில் நியா டகோஸ்டா பணியமர்த்தப்பட்டார், நடிகைகளான இமான் வேலனி மற்றும் தியோனா பாரிஸ் டிசம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 2021 ஏப்ரல் நடுப்பகுதியில் நியூ செர்சியில் தொடங்கியது, இப்படத்தின் தலைப்பு மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுத்தல் 2021 மே மாத இறுதியில் இலண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ செர்சி மற்றும் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் வளாகத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[9]

தி மார்வெல்ஸ் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 11, 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vary, Adam B. (August 5, 2020). "'Captain Marvel 2' Lands Nia DaCosta as Director". மூல முகவரியிலிருந்து August 6, 2020 அன்று பரணிடப்பட்டது.
  2. Hood, Cooper (July 20, 2019). "Captain Marvel 2 Confirmed By Marvel Studios At SDCC 2019". மூல முகவரியிலிருந்து July 21, 2019 அன்று பரணிடப்பட்டது.
  3. Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". மூல முகவரியிலிருந்து August 6, 2020 அன்று பரணிடப்பட்டது.
  4. Osborn, Alex (May 12, 2018). "Feige: MCU Has 'Plans' to Introduce Ms. Marvel After Captain Marvel". மூல முகவரியிலிருந்து April 8, 2019 அன்று பரணிடப்பட்டது.
  5. Lawrence, Gregory (February 23, 2021). "Teyonah Parris Teases the Powers Monica Rambeau Could Reveal Next on 'WandaVision'". மூல முகவரியிலிருந்து March 6, 2021 அன்று பரணிடப்பட்டது.
  6. Kroll, Justin (September 30, 2020). "Newcomer Iman Vellani To Play Title Role In Marvel's 'Ms. Marvel' Series For Disney Plus". மூல முகவரியிலிருந்து September 30, 2020 அன்று பரணிடப்பட்டது.
  7. Hough, Q.V. (March 3, 2019). "Exclusive: Captain Marvel 2 Ideas "Pretty Amazing" Says Marvel Studios Boss Kevin Feige". மூல முகவரியிலிருந்து April 8, 2019 அன்று பரணிடப்பட்டது.
  8. Aguilar, Matthew (February 14, 2019). "'Captain Marvel's Brie Larson Wants Ms. Marvel In The Sequel". மூல முகவரியிலிருந்து August 18, 2019 அன்று பரணிடப்பட்டது.
  9. "Captain Marvel 2 production will begin end of May" (April 8, 2021). மூல முகவரியிலிருந்து April 8, 2021 அன்று பரணிடப்பட்டது.
  10. Miller, Liz Shannon (December 10, 2020). "'Captain Marvel 2' Reveals New Release Date, Roles for Ms. Marvel and Monica Rambeau". மூல முகவரியிலிருந்து December 11, 2020 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மார்வெல்ஸ்&oldid=3144938" இருந்து மீள்விக்கப்பட்டது