அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் | |
---|---|
இயக்கம் | ரூசோ சகோதரர்கள்[1] |
தயாரிப்பு | கேவின் பிகே[2] |
மூலக்கதை | அவெஞ்சர்ஸ் (ஸ்டான் லீ ஜாக் கிர்பி) |
இசை | ஆலன் சில்வெஸ்டரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரெண்ட் ஓபலோச் |
படத்தொகுப்பு | |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 23, 2018(டால்பி திரையரங்கம்) ஏப்ரல் 27, 2018 (அமெரிக்கா) |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $325–400 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $2.048 பில்லியன்[4] |
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (ஆங்கில மொழி: Avengers: Infinity War) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். ஆகும். இது மார்வெல் வரைகதை குழுவான அவெஞ்சர்ஸ் என்ற குழுவை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியான தி அவெஞ்சர்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பத்தொன்பதாவது திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், பெனடிக்ட் கம்பர்பேட்ச், டான் செடில், டாம் ஹாலண்ட், சட்விக் போஸ்மேன், பவுல் பெட்டனி, எலிசபெத் ஓல்சென், அந்தோணி மேக்கி, செபாஸ்டியன் இஸ்டான், டானாய் குரைரா, லெட்டிடியா ரைட், டேவ் பாடிஸ்டா, ஜோ சல்டனா, ஜோஷ் புரோலின், கிறிஸ் பிராட் உள்ளிட்ட பலர் நடிக்க, இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளார்கள்.[5] ஆலன் சில்வெஸ்டரி[6] இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரெண்ட் ஓபலோச் செய்துள்ளார். அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) வெளியானது.[7]
இந்த திரைப்படம் முந்தைய திரைப்படங்களில் இடம்பெற்ற நவரத்தின கற்கள் என்ற சக்திவாய்ந்த கற்களை தானோஸ் கைப்பற்ற முயற்சிப்பதையும் அந்த முயற்சியை தடுக்க அவெஞ்சர்ஸ் மற்றும் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி என்ற விண்வெளி சூப்பர் ஹீரோ அமைப்புடன் இணைந்து போராடுவதை கதையாக கொண்டுள்ளது.
இந்த படம் உலகளவில் $2 பில்லியன் டாலர்களை வசூலித்தது. இது அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நான்காவது இடமும் மீ நாயகன் திரைப்படத்தில் முதல் இடத்தை பிடித்து பல வசூல் சாதனைகளை முறியடித்தது, மேலும் 2018 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் படமாகவும், உலகெங்கிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த நான்காவது படமாகவும் உள்ளது.
கதை சுருக்கம்[தொகு]
அண்டம் உருவாகிய பின் "காலம், ஆற்றல், ஆன்மா, உண்மை, விண்வெளி மற்றும் புத்தி" என ஆறு முடிவிலி கற்கள் உருவாகின. " இரண்டு கற்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது" என்ற நியதிப் படி, விண்வெளியில் ஆறு வெவ்வேறு இடங்களில் இவை சிதறி வைக்கப்பட்டன. ஆறு கற்களையும் ஒருசேர பயன்படுத்துபவன் கேட்கும் வரம் கிடைக்கும். ஆனால், மனிதன் போன்ற சாதாரண உயிரினங்கள், ஒரு முடிவிலி கல்லின் ஆற்றலை பயன்படுத்துவதே உயிருக்கு மிக ஆபத்தானது. "டைடன் இனத்தின் கடைசி உயிர்" தனோஸ் 6 முடிவிலி கற்கள் அனைத்தையும் சேர்த்து பயன்படுத்த விரும்பி, பல ஆண்டுகளாக தன் பெரும் படையுடன், அண்டத்தில் சேர்ந்து தேடி வந்தான்.
- 2018
"க்சாண்டர்" கிரகத்தின் தலைநகரில் "ஆற்றல் முடிவிலி கல்" உள்ளதென்பததை தனோஸ் அறிந்து, அந்த கிரகத்தை கைப்பற்றி, அங்குள்ள பாதி மக்களை கொன்று, சக்தி முடிவிலி கல்லை கைப்பற்றுகிறான். அந்த முடிவிலி கல்லை அவனின் முடிவிலி கையுறையில் சேர்த்துக்கொள்கிறான். அஸ்கர்டின் அழிவை தெரிந்துகொண்டு, அஸ்கர்டியர்கள் செல்லும் விண்கலத்தை தாக்குகிறது தனோசின் படை. வால்கிரி தலைமையில் பாதி அஸ்கர்டியர்கள், தப்பிக்கும் களங்களில் பூமிக்கு அவசரமாக செல்கின்றனர். சண்டை நிகழ்கிறது. அஸ்கர்டின் பாதுகாப்பு தகர்க்கப்பட்டு, அஸ்கர்ட் அரசன் தோர் (மின்னல் கடவுள்), லோகி, ஹைம்டால் ஆகியோர் சிறைபிடிக்கப்படின்றனர்.
- விண்வெளியில்
மறைந்திருந்து தாக்கும் ஹல்க்கை தனோஸ் தோற்கடிக்கிறான். ஆனால்,ஹைம்டால் ஹல்க்கை பூமிக்கு அனுப்பிவிடுகிறான். ஹெய்ம்டாலை தனோஸ் கொன்றுவிடுகிறான். லோகி தனோஸிற்கு "விண்வெளி முடிவிலி கல்" இருக்கும் டெஸெராக்ட் கனசதுரத்தை கொடுக்கிறான். கனசதுரத்தை உடைத்து, விண்வெளி முடிவிலி கல்லை தனோஸ் அவனின் முடிவிலி கையுறையில் சேர்த்துக்கொள்கிறான். தனோசை கொலை செய்ய முயலும் லோகி, தனோஸால் கொல்லப்படுகிறான். தனோசின் ஏவுகணையால் அஸ்கர்டியர்களின் விண்கலம் வெடித்து சிதறுகிறது. தோர் உயிருடன் விண்வெளியில் வீசப்படுகிறான்.
- நியூயார்க்
பூமியில் டாக்டர் ஸ்டிரேன்ஜ் மற்றும் வோங் இருக்கும் வீட்டில் விழும் ஹல்க், ப்ரூஸ் பேனராக உரு மாறுகிறான். இவர்கள் மூவரும் பிரச்னையை உணர்ந்து "அயர்ன் மேன்" டோனி ஸ்டார்க்கையும் தங்களுடன் சேர்க்கின்றனர். உடனே தனோசின் படைகள் நியூயார்க் நகரத்தை தாக்குகின்றன. ப்ரூஸுக்குள் இருக்கும் ஹல்க் சண்டையிட வெளியே வர மறுத்து விடுகிறான். எனவே டோனியும் (நானோ அயர்ன் மேன் உடுப்புடன்), ஸ்டிரேன்ஜும் (மாந்த்ரீக சக்தி) தனோசின் 2 தளபதிகளுடன் சண்டையிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் டோனிக்கு உதவ "ஸ்பைடர்மேன்" பீட்டர் பார்க்கரும் வந்து சேர்கிறார். ஸ்டிரேன்ஜின் "கால முடிவிலி கல்லை" கைப்பற்ற முடியாமல், ஸ்டிரேன்ஜை கடத்தி, விண்வெளிக்கு தப்பி செல்கிறது அந்த படை. டோனி ஸ்டார்க்கும் ஸ்பைடர் மேனும் அந்த விண்கலத்தில் ரகசியமாக ஏறுகின்றனர். ஸ்பைடர் மேன் விண்வெளியில் சண்டை போட அயர்ன் ஸ்பைடர் உடுப்பும் பெறுகிறார். பூமியில் இருக்கும் ப்ருஸ் பேனர் உதவிக்கு "கேப்டன் அமெரிக்காவை" அலைபேசியில் அழைக்கிறார்.
- கிளாஸ்கோ 2018 (அதே நாள்)
ரகசிய ஓய்வில் இருக்கும் வாண்டா மாக்ஸிமோப் மற்றும் விஷன் தனோஸ் மற்றொரு சிறு படையால் தாக்கப்படுகின்றனர். வித்யாசமான ஆயுதத்தால் குத்துப்படும் விஷன் தனது சக்திகளை பயன்படுத்த முடியாமல் திணறுகிறான். இந்த நேரத்தில் "கேப்டன் அமெரிக்கா (ஸ்டிவ் ரோஜர்ஸ்), பிளாக் விடோ (நடாஷா ரொமான்ஆஃ), மற்றும் பால்கான் (சாம் வில்சன்)" ஆகியோர் வந்து இந்த இருவரை காப்பாற்றுகின்றனர். சண்டையில் தனோசின் தளபதிகளில் ஒருவனை நடாஷா கொலை செய்துவிடுகிறாள். மீதியுள்ள தனோஸ் படை விண்வெளிக்கு தப்பிச்செல்ல, அவென்ஜர்ஸ் தலைமையகத்திற்கு இந்த ஐவர் குழு "கிவுஞ்செட் விமானத்தில்" செல்கிறது. அங்கு தனோசை பற்றி ஹல்க் மற்றும் வார் மெஷின் "ஜேம்ஸ் ரோட்ஸ்" ஆகியோர் சொல்கின்றனர். விஷன் தன் தலையில் இருக்கும் "புத்தி முடிவிலி கல்லை" வெடிக்கவைக்க வாண்டாவை கெஞ்சுகிறான். அதன் மூலம் தனோசின் திட்டதை நிரந்தரமாக தடுக்கலாம் என கூறுகிறான் விஷன். அச்செயலுடன் அத்துடன், விஷனும் அழிந்துவிடுவான் என்பதால் மற்றோர் இதை முற்றிலும் நிராகரிக்கின்றனர். முடிவிலி கல்லை விஷனிடமிருந்து பாதுகாப்பாய் பிரிக்க, பேனர் மற்றும் ஸ்டீவ் ரோஜர்ஸ் அறிவுரைப்படி மொத்த குழுவும் வகாண்டா செல்கிறது. வகாண்டாவில் அரச படைகளும், ஓய்வில் இருக்கும் "விண்டேர் சோல்ஜர்" பக்கி பார்ன்ஸ் ஆகியோர் சண்டைக்கு வரவிருக்கும் தயார் ஆகின்றனர்.
- விண்வெளியி (அதே நாள்)
விண்வெளியில் மிதக்கும் தோரை "காலக்சி கார்டியன் குழு" மீட்கிறது. நடந்த சம்பவங்களை தோர் விவரிக்கிறான். தனோசை கொள்ள தனக்கு தேவையான புது ஆயுதத்தை செய்ய, கார்டியன் குழுவின் ஒரு சிறு விண்கலத்தை எடுத்துக்கொண்டு, தோர் நிவிடெல்லியிர் செல்கிறான். அவனுடன் க்ரூட் மற்றும் ராக்கெட் செல்கின்றன. அதே நேரம், "உண்மை முடிவிலி கல்லை" எடுக்க தனோஸ் "நோ-வெர்" செல்வதை அறியும் "காலக்சி கார்டியன் குழு" ,தனோசை கொல்ல அங்கு விரைகிறது. ஆனால், தனோஸ் அவர்களுக்கு முன்பே அங்கு வந்து, அவ்விடத்தை அழித்து, "உண்மை முடிவிலி கல்லை" கையுறையில் சேர்த்ததை அவர்கள் தாமதமாகவே உணர்கின்றனர். "ஆன்மா முடிவிலி கல்லின் உறைவிடத்தை" அறிந்த, காலக்சி கார்டியன் குழுவில் உள்ள தன் மகள் "கமோராவை" தனோஸ் கடத்திக்கொண்டு,மறைந்துவிடுகிறான். மீதமுள்ள பீட்டர் குவில், ட்ராக்ஸ் மற்றும் நெபுலா,தனோசின் டைடன் கிரகத்திற்கு சென்று, பழி வாங்க, தனோஸிற்காக காத்திருக்கின்றனர். அதே நேரம், டைடன் நோக்கி செல்லும் விண்கலத்தில் வைத்து, ஸ்டிரேன்ஜிடம் உள்ள கால முடிவிலி கல்லை பெற தனோசின் தளபதி "எபோனி மா" முயல்கிறான். அயர்ன்மேன் ஸ்பைடர்மேன் கூட்டணி எபோனியை வெற்றுவெளிக்குள் அனுப்பி கொல்கிறது. பின்பு டோனியின் அறிவுரையின்படி தனோசை அவனிடத்தில் வைத்து தோற்கடிக்க இந்த மூவர் குழு அதே விண்கலத்தின் இலக்கில் வந்து இறங்குகிறது. அங்கு ஏற்கனவே இருக்கும் "காலக்சி கார்டியன் குழுவுக்கும்" இவர்களுக்கும் சண்டை ஏற்பட்டு, பின்பு தோர் பற்றிய தகவலால் இறுகுழுக்களும் சமரசமாகி, இணைந்து தனோசை வெல்ல திட்டம் தீட்டுகின்றன. ஸ்டிரேன்ஜ் கால முடிவிலி கல்லை பயன்படுத்து வரவிற்கும் சண்டையின் அனைத்து விதமான முடிவுகளையும் பார்க்கிறான். 1.4 கோடி நிகழக்கூடிய முடிவுகளில், ஒன்றில் மட்டுமே தனோஸ் தோற்கிறான் என்பதை ஸ்டிரேன்ஜ் அனைவருக்கும் கூறுகிறான்.
வகாண்டாவில் விஷனின் தலையில் இருக்கும் கல்லை இளவரசி ஸூரி பிரித்து எடுக்க துவங்குகிறாள். அதே நேரம், தானோஸின் பெரும்படை வகாண்டாவின் தலைநகரை தாக்குகிறது. வாகண்டா அரசன் டீ'சாலா (பிளாக் பாந்தர்), கேப்டன் அமெரிக்கா (ஸ்டிவ் ரோஜர்ஸ்), விண்டர் சோல்ஜர் (பக்கி பார்ன்ஸ்), வார் மெஷின் (ஜேம்ஸ் ரோட்ஸ்), பால்கான் (சாம் வில்சன்), டோரா மிலேஜே படை, "ஹல்க் பஸ்டர் அயெர்ன் மேன்" உடுப்பில் ப்ருஸ் பேனர், பிளாக் விடோ( நடாஷா ரோமன்ஆப்) மற்றும் வகாண்டாவின் அனைத்து படைகளும் சண்டைக்கு செல்கின்றன. வாண்டா மட்டும் விஷனின் அருகில் கல்லை அழிக்க இருக்கிறாள். சண்டை செல்ல செல்ல, தனோஸ் படைகளின் கை ஓங்குகிறது. அதே நேரம், வாண்டா சண்டைக்குள் வந்து, தனோசின் ஒரு தளபதியை கொள்கிறாள். விண்வெளியில், தோர் தனக்கு தேவையான "ஸ்ட்ரோம் பிரேக்கர்" கோடரியை, குள்ளன் ஏத்திரி உதவியுடன், கடும் முயற்சியால் உருவாக்கி, காயங்களால் மயங்குகிறான். க்ரூட் தனது வலது கையை கோடரிக்கு கைப்பிடியாக உருமாற்றி கோடரியை செய்து முடிகின்றது. உடனே அந்த கோடரி தோரின் கைக்கு சென்று, தோர் முழு பலத்துடன் எழுகிறான். உடனே "ஸ்ட்ரோம் பிரேக்கர்" கோடரியை பயன்படுத்தி, பைபிரோஸ்ட் மூலம் வாகாண்டா பொற்காலத்திற்குள் வருகிறது தோரின் குழு. வாகண்டாவில் நடக்கும் போரின் போக்கை மாற்றி, வாகண்டாவிற்கு வெற்றி கிட்ட செய்கிறான் தோர். ஆராய்ச்சி கூடத்தில் விஷன் மீண்டும் தாக்கப்பட்டு, காட்டிற்குள் தள்ளப்படுகிறான். அங்கு வரும் ப்ருஸ் பேனர், தனோசின் ஒரு தளபதியை கொல்கிறான். கேப்டன் அமெரிக்காவை தனோசின் இன்னொரு தளபதி கொல்ல முயலும்போது, விஷன் அவனை கொன்று கேப்டனை காக்கிறான்.
தனோஸ் கமோராவின் இளைய சகோதரி நெபுலாவை கமோராவின் முன் வைத்து கொடுமை செய்கிறான். இதை தாங்காமல் கமெரா, "ஆன்மா முடிவிலி கல்" வொர்மியர் கிரகத்தில் உள்ள உண்மையை கூறுகிறாள். அவளை அழைத்துக்கொண்டு தனோஸ் "விண்வெளி முடிவிலி கல்லை" பயன்படுத்தி வொர்மியர் செல்கிறான். அங்கு " ஒருவன் தான் மிகுந்த அன்பு வைத்துள்ள உயிரை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி பலி குடுத்தால் மட்டுமே கல் கிடைக்கும்" என கல்லின் பாதுகாவலன் ரெட் ஸ்கல் கூறுகின்றான். தன் வளர்ப்பு மகளான கமோராவை சோகத்துடன் பலி,குடுத்துவிட்டு, ஆன்மா கல்லை கைப்பற்றுகிறான் தனோஸ். பின்பு, டைடன் கிரகத்திற்கு "விண்வெளி முடிவிலி கல்லை" பயன்படுத்தி தனோஸ் செல்கிறான். டைடன் கிரகத்திற்கு வரும் தனோஸ், அவென்ஜர்ஸ்-கார்டியன்ஸ் கூட்டுபடையால் தாக்கப்படுகிறான். தனோசின் இளைய மகள் நெபுலாவும் அங்கு வந்து தனோசை தங்குகிறாள். ஒரு கட்டத்தில், தனோசை அனைவரும் பிடிக்குள் கொண்டுவந்து, அவனின் முடிவிலி கையுறையை கழட்ட துவங்குகின்றனர். அப்போது நெபுலா மூலம் கமெராவின் மரணத்தை அறியும் பீட்டர், தனோஸ் தோற்கும் நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்கிறான். சுதாரித்து மீண்டெழும் தனோஸ், அனைவரையும் தோற்கடித்து, டோனி ஸ்டார்க்கை கத்தியால் குத்துகிறான். டோனியின் உயிரை காக்க, "கால முடிவிலி கல்லை" தனோஸிடம் ஸ்டிரேன்ஜ் ஒப்படைக்கிறான். "கால முடிவிலி கல்லை" தன் முடிவிலி கையுறையில் சேர்த்துக்கொண்டு, மீதமுள்ள கடைசி கல்லை எடுக்க "வின்வெளி முடிவிலி கல்லை" உபயோகித்து பூமிக்கு சென்றுவிடுகிறான் தனோஸ். டோனி மற்றும் சகாக்கள் மனம் உடைந்து பொய் டைடன் கிரகத்தில் இருக்கின்றனர்.
வாகாண்டாவில் போர் முடியும் சமயத்தில், அங்கு வரும் தனோஸ் முடிவிலி கையுறையில் இருக்கும் 5 முடிவிலி கற்களை பயண்படுத்தி, அவென்ஜர்ஸ் அனைவரையும் எளிதில் தோற்கடிக்கிறான். ஆனால், வாண்டா " புத்தி முடிவிலி கல்லை" விஷன் தலையிலேயே வைத்து அழித்து விடுகிறாள். விஷனும் இறந்துவிடுகிறான். வாண்டாவின் தியாக செயலை பாராட்டும் தனோஸ், "கால முடிவிலி கல்லை" பயன்படுத்தி காலத்தை 2 நிமிடம் பின்னோக்கி திரும்புகிறான். தனோஸ் வாண்டாவை தாக்கிவிட்டு, "புத்தி முடிவிலி கல்லை" விஷன் தலையிலிருந்து பிரித்து எடுக்கிறான் . விஷன் மீண்டும் இறந்துவிடுகிறான். ஆறாவது கல்லையும் தன் முடிவிலி கையுறையில் சேர்க்கும் தனோஸ், பிரபஞ்சத்தில் மிகவும் ஆற்றல் மிக்கவனாகிவிடுறான். ஆனால்,தோர் தனோசின் நெஞ்சில் தன் "ஸ்டார்ம்பிரெக்கார்" கோடரியால் தாக்கி, பெரும் காயத்தை உண்டாக்குகிறான். அதையும் தாண்டி தனோஸ் 6 முடிவிலி கற்களையும் ஒருசேர பயன்படுத்த சொடக்கு போடுகிறான். தனோசின் கையுறை சொடக்கு போட்ட உடனே கருகிவிடுகிறது. "விண்வெளி முடிவிலி கல்லை" பயன்படுத்தி தனோஸ் தப்பி செலகிறான். தனோசின் விருப்பம்போல, பிரபஞ்சத்தில் சரிபாதி நடமாடும் உயிர்கள் காற்றில் கரைந்து இறந்து விடுகின்றன. வாகாண்டா அரசன் பிளாக் பாந்தர், வின்டர் சோல்ஜர், பால்கான், வாண்டா, இளவரசி ஸூரி, க்ரூட், நிக் பியூரி, மரியா ஹில், டைட்டன் கிரகத்திலுள்ள பீட்டர் கிவில், டிராக்ஸ், மென்டிஸ், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்டிரேன்ஜ் ஆகியோரும் காற்றில் கரைந்து மறைந்து போகின்றனர்.தனோஸ் தான் முன்பே தேர்ந்தெடுத்த சிறு கிரகத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறான். உயிர் தப்பிய அனைத்து கிரகவாசிகளும் அதிர்ச்சியில் ஆழ்த்தப்படுகின்றனர்.
நடிகர்கள்[தொகு]
- ராபர்ட் டவுனி ஜூனியர்[8] - டோனி ஸ்டார்க் / அயன் மேன்
- அவெஞ்சர்ஸ் குழுவில் மிக பணக்கார மற்றும் மாபெரும் அறிவியல் அறிஞர். தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியலாளர். இவரின் சக்தி உலோகத்தால் ஆனா திறனுள்ள பாதுகாப்புக் கவசம்.
- கிறிஸ் இவான்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் / கேப்டன் அமெரிக்கா
- உலகப்போரில் போராடிய ஒரு இராணுவ வீரர். முதலாவது அவெஞ்சர் இவர் தான். தனது போர் குண புத்தியால் அவெஞ்சர்ஸ் குழுவை வழிநடுத்துபவன். இவரே அனைத்து அவெஞ்சர்களுக்கும் தலைவர் (கேப்டன்).
- மார்க் ருஃப்பால்லோ - வைத்தியர். ப்ரூஸ் பேனர் / ஹல்க்
- ஒரு காம்மா கதிர் விஞ்சானி, இக் கதிர் பாதிப்பால் பச்சை நிறமுள்ள கோவப்பான அரக்கனாய் மாறும் சக்தி உடையவன். எவருக்கும் அடங்காத இவன் நடாஷா சொல்லும் அடங்குவான்.
- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்[9][10] - தோர்
- இடி மின்னல்களின் கடவுள்; ஆஸ்கார்ட் அரசன்; ஓடினின் மகன் ஆவார். இவரது ஆயுதம் ஸ்டோம்பிரேக்கர் (கோடாரி) மற்றும் சுத்தியல் ஆகும். இவற்றின் மூலம் இடி மின்னலை கட்டுப்படுத்துவதால். இவரே அவெஞ்சர்ஸ்களில் சக்திவாய்ந்தவர்.
- ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா / பிளாக் விடோவ்
- ஷீல்ட் குழுவின் உயர்தர பயிற்சிபெற்ற உழவாளி. ப்ரூஸ் பேனர் இன் காதலி. கிளின்ட் இன் நெருங்கிய தோழி.
- பெனடிக்ட் கம்பர்பேட்ச் - வைத்தியர். ஸ்ட்ரேஞ்ச்
- டான் செடில் - ஜேம்ஸ் (போர் இயந்திரம்)
- டாம் ஹாலண்ட் - பீட்டர் பார்க்கர் & ஸ்பைடர் மேன்
- சட்விக் போஸ்மேன் - ப்ளாக் பேந்தர்
- பவுல் பெட்டனி - ஸ்காட் லாங் ஆண்ட்-மேன்
- எலிசபெத் ஓல்சென் - வாண்டா & ஸ்கார்லெட் விட்ச்
- அந்தோணி மேக்கி - சாம் வில்சன் & பால்கான்
- செபாஸ்டியன் இஸ்டான்[11] - பக்கி பார்ன்ஸ் & வின்டர் சோல்ஜர்
- டானாய் குரைரா - ஒகோயே
- லெட்டிடியா ரைட் - சூரி
- டேவ் பாடிஸ்டா
- ஜோ சல்டனா[12] - கமோரா
- ஜோஷ் புரோலின் - பீட்டர் குயில் & ஸ்டார்-லார்ட்
- கரேன் கில்லன் - நெபுலா
- தானோஸின் வளர்ப்பு மகள், பாதி மனிதன் பாதி இயந்திரம். காமோராவின் சகோதரி.
- பிராட்லி கூப்பர் - ராக்கெட் ரக்கூன்
- கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸ் திரைப்படத்தின் உறுப்பினர். இவர் ரக்கூன் என்ற மிருகத்தின் தோற்றம் உடையவன். சிறந்த பழுது திருத்தும் பொறியாலாளர். இவரின் காதாபாத்திரம் நகைசுவை சேர்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
- ஜோஷ் புரோலின் - தானோஸ்
- ஆறு நவரத்தின கற்களை கைப்பற்றி எல்லா விண்வெளியையும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு எல்லோரையும் அளிக்கின்ற குணம் கொண்ட கெட்டவன். நெபுலா மற்றும் காமோராவின் வளர்ப்பு தந்தை.
- கிவ்வினெத் பேல்ட்ரோ - பெப்பர் பொட்சு
- ஸ்டார்க்கின் மனைவி மற்றும் ஸ்டார்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
- கிறிஸ் பிராட் - பீட்டர் குயில் /& ஸ்டார்-லார்ட்
அடுத்த பாகம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Strom, Marc (April 7, 2015). "Joe & Anthony Russo to Direct 2-Part Marvel's 'Avengers: Infinity War' Event". Marvel.com. April 7, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sciretta, Peter (October 28, 2014). "Watch: All Of Your Marvel Phase 3 Questions Answered By Marvel Head Kevin Feige". Film. October 30, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Waters, Lowenna (January 8, 2017). "Avengers: Infinity War, the new £400m Marvel blockbuster, will be filmed in Edinburgh and Glasgow". The Daily Telegraph. January 9, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 5, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Avengers: Infinity War (2018)". பாக்சு ஆபிசு மோசோ. ஏப்ரல் 21, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜனவரி 14, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kit, Borys; Siegemund-Broka, Austin (March 23, 2015). "Russo Brothers to Direct 'Avengers: Infinity War' Parts 1 and 2". The Hollywood Reporter. March 23, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Burlingame, Russ (June 6, 2016). "Avengers Composer Alan Silvestri To Return For Infinity War". Comicbook.com. June 7, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 6, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Keyes, Rob (October 28, 2014). "'Avengers: Infinity War' Announced For 2018–19 in Two Parts". Screen Rant. October 29, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 2, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Robert Downey Jr. To Return As Marvel's Iron Man". Marvel.com. June 20, 2013. June 20, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 20, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chitwood, Adam (April 14, 2015). "Chris Hemsworth Reveals the 3 Marvel Movies Left on His Contract". Collider. April 15, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 15, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Davis, Brandon (April 10, 2016). "Russo Brothers Confirm Star-Lord And Thor in Avengers: Infinity War". ComicBook.com. April 11, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 10, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kit, Borys (August 9, 2016). "'Captain America' Actor Sebastian Stan to Star in Thriller 'We Have Always Lived in the Castle' (Exclusive)". The Hollywood Reporter. August 10, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 10, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Leadbeater, Alex (January 9, 2017). "Gamora Confirmed for Avengers: Infinity War". Screen Rant. January 10, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- 2018 திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அவெஞ்சர்ஸ் (திரைப்படத் தொடர்)
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- 2018 ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்
- அமெரிக்க அறிவியல் புனைகதை போர் திரைப்படங்கள்
- அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்
- அமெரிக்க சாகச திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம்