அயன் மேன் (2008 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அயன் மேன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் பெவ்ரோ
தயாரிப்பு
மூலக்கதைஅயன் மேன்
(ஸ்டான் லீ
லாரி லிபர்
டான் ஹெக்
ஜாக் கிர்பி)
திரைக்கதைமார்க் பெர்கஸ்
ஹாக் ஆஸ்ட்பி

ஆர்ட் மார்கம்
மாட் ஹோலோவே
இசைரமீன் ஜவாடி
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்புடான் லெபண்டல்
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 2008 (2008-04-14)((சிட்னி பிரீமியர்))
மே 2, 2008 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்126 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்[2]
மொத்த வருவாய்$585.1 மில்லியன்

அயன் மேன் (ஆங்கில மொழி: Iron Man) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கியுள்ளார்.

ராபர்ட் டவுனி ஜூனியர் என்பவர் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப் மற்றும் கிவ்வினெத் பேல்ட்ரோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 14 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாவது படமாகும். இந்த திரைப்படம் 140 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 585 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2008 ஆம் ஆண்டில் எட்டாவது மிக அதிக வசூல் செய்த படமாகும்.

2008 ஆம் ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் 81ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த இசை இயக்கம் மற்றும் சிறந்த திரை வண்ணத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அயன் மேன் 2 (2010) மற்றும் அயன் மேன் 3 (2013) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

கதைச்சுருக்கம்[தொகு]

டோனி ஸ்டார்க் என்பவர் தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியாளராகவும் இருந்தார். அவர் கடத்தப்பட்டு கடத்தல்காரர்களால் அதிகமான பேரழிவு ஆயுதங்களை உருவாக்குமாறு வற்புறுத்தப்பட்ட போது கடுமையான இதயக் காயத்தால் அவதிப்பட்டார். தனது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறைபட்ட நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் திறனுள்ள பாதுகாப்புக் கவச அங்கியை உருவாக்கினார்.

பின்னர் அவர் அயன் மேன் என்ற பாத்திரத்தின் மூலம் உலகத்தைக் காக்க இந்த அங்கியைப் பயன்படுத்திக் கொண்டார். டோனி தனது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்ற பன்னாட்டு நிறுவனமான மூலமாக, இராணுவ ஆயுதங்கள் மற்றும் தனது சொந்த உலோக அங்கியைத் தொழில்நுட்பக் கருவிகளுடன் உருவாக்கி குற்றத்திற்கு எதிராக செயல்பட வைத்தார். பொது உடைமைத் தத்துதுவத்திற்கு எதிரான சண்டை யிட்டு அதில் எப்படி வெற்றி கண்டார் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

 • ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் / அயன் மேன்[3][4][5][6][7][8][9]
  • ஒரு பிரபல தொழிலதிபர், கண்டுபிடிப்பு மேதாவி மற்றும் முழுமையானஒரு காதல் மன்னன். இவர்ஸ்டார்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், யு.எஸ். இராணுவத்திற்கான தலைமை ஆயுத உற்பத்தியாளராகவும் உள்ளார்.
 • டெரன்ஸ் ஹோவர்ட் - ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ்[10][11][12][13]
  • டோனி ஸ்டார்க்கின் சிறந்த நண்பன், ஆயுத மேம்பாட்டில் ஸ்டார்க் நிறுவனம் மற்றும் அமெரிக்க விமானப்படைக்கு இடையிலான தகவல் தொடர்பு செய்பவர்.
 • ஜெப் பிரிட்ஜஸ் - ஒபாடியா ஸ்டேன் / ஐயன் மோன்கர்[14][15][16][17]
  • ஸ்டார்க்குடன் வணிகரீதியான வழிகாட்டி மற்றும் நண்பர், ஸ்டார்க் நிறுவனம் வெற்றிபெற உறுதுணையாக இருந்துள்ளார். இறுதியில் ஸ்டார்க்கை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு மாபெரும் இருப்பு கவசத்தை உருவாக்கி ஸ்டார்க்காய் எதிர்க்கிறார்.
 • ஷான் டௌப் - ஹோ யின்சன்[18]
  • ஸ்டார்க்கின் சக கைதி, ஸ்டார்க்கின் மார்பில் ஒரு மின்காந்தத்தை ஒட்டுகிறார், ஸ்டார்க்கின் முதல் அயர்ன் மேன்கவசத்தை உருவாக்க உதவுகிறார்.
 • கிவ்வினெத் பேல்ட்ரோ - பெப்பர் போட்ஸ்[19]
  • ஸ்டார்க்கின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அவர் மீது காதல் ஆர்வம் கொண்டவர்.
 • பரன் தாஹிர் - ராசா (ரிங்ஸ் குழுவின் தலைவர்)
 • கிளார்க் கிரெக் - பில் கோல்சன்
 • சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி (கௌரவத் தோற்றம்)

தொடர்ச்சியான தொடர்கள்[தொகு]

அயன் மேன் 2[தொகு]

அயன் மேன் 3[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Ambrose, Tom (July 26, 2007). "The Man in the Iron Mask". Empire: 69. 
 2. Hewitt, Chris (April 2008). "Super Fly Guy". Empire: 66–72. 
 3. Roger Ebert (June 1, 2008). "Iron Man (PG-13)". Chicago Sun-Times. http://rogerebert.suntimes.com/apps/pbcs.dll/article?AID=/20080601/REVIEWS/467306179. 
 4. "Iron Man Award Ceremony Narrator". Behind The Voice Actor. மூல முகவரியிலிருந்து June 8, 2014 அன்று பரணிடப்பட்டது.
 5. Carroll, Larry (March 18, 2008). "Iron Man Star Robert Downey Jr. Talks About Incredible Hulk Cameo, Controversial Tropic Thunder Pics". MTV. http://www.mtv.com/news/1583534/iron-man-star-robert-downey-jr-talks-about-incredible-hulk-cameo-controversial-tropic-thunder-pics/. 
 6. "Iron Man Production Notes". SciFi Japan (April 30, 2008). மூல முகவரியிலிருந்து March 28, 2013 அன்று பரணிடப்பட்டது.
 7. Shapiro, Marc (April 2008). "Pumping Iron". Starlog: pp. 47–50. 
 8. Quint (February 9, 2007). "Quint visits the IRON MAN production offices! Art! Favreau speaks about sequels (?!?), casting and more!!!". Ain't It Cool News. http://www.aintitcool.com/node/31525. 
 9. Rolfsen, Bruce (March 21, 2007). "Iron Man pilot to hit big screen". Air Force Times. http://www.airforcetimes.com/news/2007/03/airforce_ironman_070321w/. 
 10. Worley, Rob M. (April 22, 2008). "Iron Man: Terrence Howard lives the dream". Comics2Films. http://www.comics2film.com/index.php?a=story&b=28467. 
 11. Rotten, Ryan (April 1, 2008). "Iron Man: The Set Visit – Terrence Howard". Superhero Hype!. http://www.superherohype.com/news/featuresnews.php?id=7001. 
 12. Adler, Shawn (September 30, 2008). "Iron Man Co-Writers Discuss Their Favorite Deleted Scenes, Plus An Exclusive DVD Bonus Clip". MTV Splash Page. http://splashpage.mtv.com/2008/09/30/iron-man-co-writers-discuss-their-favorite-deleted-scenes-plus-an-exclusive-dvd-bonus-clip/. 
 13. Douglas, Edward (May 1, 2008). "Gwyneth Paltrow Plays Pepper Potts". Superhero Hype!. http://www.superherohype.com/news/topnews.php?id=7150. 
 14. Dave Itzkoff (March 25, 2011). "Modern Marvel". The New York Times. https://www.nytimes.com/2011/03/27/movies/marvel-faces-a-mighty-foe-publishing-world-uncertainties.html. 
 15. "Samuel L. Jackson". மூல முகவரியிலிருந்து September 28, 2007 அன்று பரணிடப்பட்டது.
 16. Goldman, Eric (May 4, 2007). "Stan Lee's Further Superhero Adventures". மூல முகவரியிலிருந்து May 18, 2019 அன்று பரணிடப்பட்டது.
 17. Riesman, Abraham (July 18, 2019). "'In a Cave! With a Box of Scraps!': How an Iconic Marvel Cinematic Insult Came to Be". மூல முகவரியிலிருந்து July 18, 2019 அன்று பரணிடப்பட்டது.
 18. "RAGE AGAINST THE MACHINE Guitarist Faces Iron Man". Roadrunner Records (May 6, 2008). மூல முகவரியிலிருந்து May 10, 2008 அன்று பரணிடப்பட்டது.
 19. Dellaverson, Carlo (May 2, 2008). "Cramer In Iron Man". CNBC. மூல முகவரியிலிருந்து June 12, 2011 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]