மென் இன் பிளாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென் இன் பிளாக்
இயக்கம்பாரி சோனென்ஃபெல்டு
தயாரிப்பு
  • வால்டர் எஃப். பார்க்சு
  • லாரி மெக்டொனால்டு
மூலக்கதைமென் இன் பிளாக்
படைத்தவர் லோவல் கன்னிங்காம்
திரைக்கதைஎட் சாலமன்
இசைடேனி எல்ப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுடொனால்டு பீட்டர்மேன்
படத்தொகுப்புஜிம் மில்லர்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசூலை 2, 1997 (1997-07-02)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90 மில்லியன்
மொத்த வருவாய்$589.4 மில்லியன்[1]

மென் இன் பிளாக் (Men in Black) என்பது 1997 ஆம் ஆண்டு இயக்குனர் பாரி சோனென்ஃபெல்டு இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதையை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ் உடன் இணைந்து ஆம்ப்ளின் என்டர்டெயின்மென்ட்டு மற்றும் பார்க்சு/மெக்டொனால்ட் புரொடக்சன்சு போன்ற நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

வால்டர் எஃப். பார்க்சு மற்றும் லாரி மெக்டொனால்டு ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் டொமி லீ ஜோன்சு, வில் சிமித்,[2] லிண்டா பியோரெண்டினோ, வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ மற்றும் ரிப் டோன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் டொமி லீ ஜோன்சு மற்றும் வில் சிமித் ஆகியோர் மென் இன் பிளாக் என்ற இரகசிய அமைப்பில் இரண்டு முகவர்களாக நடித்துள்ளனர், அவர்கள் பூமியில் வாழும் வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கை முறைகளை மேற்பார்வையிட்டு, சாதாரண மனிதர்களிடமிருந்து அவர்களை பற்றிய இருப்பை மறைக்கிறார்கள்.

மென் இன் பிளாக் படம் ஜூலை 2, 1997 அன்று அமெரிக்காவில் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் $589.3 மில்லியனுக்கும் மேல் வசூலித்து, இந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படமானது சிறந்த கலை இயக்கம், சிறந்த அசல் இசை மற்றும் சிறந்த ஒப்பனை போன்றவற்றுக்கான மூன்று அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைகளை பெற்றது.[3]

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மென் இன் பிளாக் 2 (2002), மென் இன் பிளாக் 3 (2012) மற்றும் மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் (2019) போன்ற படங்கள் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Men in Black (1997)". Box Office Mojo. May 13, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Summer Movie Preview". Entertainment Weekly. May 16, 1997. Archived from the original on அக்டோபர் 14, 2007. https://web.archive.org/web/20071014234550/http://www.ew.com/ew/article/0,,287928,00.html. 
  3. "Men in Black (1997) – Awards and Nominations". Yahoo!. 2008-01-18 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-09-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்_இன்_பிளாக்&oldid=3309285" இருந்து மீள்விக்கப்பட்டது