தி அவேஞ்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி அவேஞ்சர்ஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜோஸ் வேடன்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅவென்ஜர்ஸ்
(ஸ்டான் லீ
ஜாக் கிர்பி)
திரைக்கதைஜோஸ் வேடன்
இசைஆலன் சில்வெஸ்டரி
நடிப்புராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
டாம் ஹிடில்ஸ்டன்
கிளார்க் கிரெக்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
கோபி ஸ்மல்டேர்ஸ்
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
லிசா லாசெக்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு4 மே 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$220 மில்லியன்[1]
மொத்த வருவாய்$1.519 பில்லியன்[2]

தி அவேஞ்சர்ஸ் (The Avengers) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இதே பெயரான மார்வெல் காமிக்ஸ் என்ற மீநாயகன்கள் அணியை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ஜோஸ் வேடன் என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் 4 மே 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் விநியோகம் செய்தது. இது மாவல் திரைப் பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படமாகும். ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் அவென்ஜர்ஸ் என்ற குழுவில் முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் டாம் ஹிடில்ஸ்டன், கிளார்க் கிரெக், கோபி ஸ்மல்டேர்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இத் திரைப்படம் மார்வெல் வரைகதையில் வெளியான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர் போன்ற மீநாயகன்கள் படங்களின் நாயகர்கள் அனைவரும் ஒன்றினைந்து 'ஷீல்ட்' எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ப்யூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை.

2017 ஆம் ஆண்டில் எம்பயர் பத்திரிகை வாக்கெடுப்பில் எல்லா காலத்திலும் 100 சிறந்த படங்களில் அவென்ஜர்ஸ் என்ற திரைபபடமும் ஒன்றாக இடம்பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

தோரின் சகோதரனா லோகி தோரை வீழ்த்தி பிரபஞ்சத்தின் தலைவனாக ஆசைப்பட்டு பல கொடுஞ் செயல்களை செய்கின்றான். பூமிக்கு வரும் லோகி 'ஷீல்ட்' குழுவின் பாதுகாப்பில் இருக்கும் பிரபஞ்சத்தை இணைத்து பாலத்தை உருவாக்க வல்ல சக்திகள் உள்ள விண்வெளி கல் அடங்கிய 'டெசராக்ட்டை' கவர்ந்து சென்று விடுகின்றான். இவனின் திண்டம் நிறைவேறினால் பூமிக்கு வேற்று கிரக படைகள் ஊடுருவக்கூடும் ஆபத்தை அறிந்த 'ஷீல்ட்' குழுவின் இயக்குனர் நிக் ப்யூரி பூமியிலுள்ள ஆறு மீநாயகன்கள் அடங்கிய குழுவான அவேஞ்சர்ஸை உருவாக்குகிறார்.

இந்த மீநாயகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோகி உருவாக்கிய இணைப்பின் மூலம் நியூயார்க் நகரத்திற்க்குள் வெளிவந்த மிக வலிமையுள்ள விண் கப்பல்கள் மற்றும் வாகனங்களையும் உடைய வேற்றுக் கிரக எதிரிகளை எதிர்த்து காப்பாற்றுகின்றனர். இறுதியில் லோகி கைது செய்யப்பட்டு ஆஸ்கார்டில் (தோரின் கிரகம்) சிறை வைக்கப்படுகிறார்.

நடிகர்கள்[தொகு]

 • மார்க் ருஃப்பால்லோ - வைத்தியர். ப்ரூஸ் பேனர் & ஹல்க்[5]
  • எவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹல்க்.
 • கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் - தோர்
  • லோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்தவன்; இடி மின்னலை கடத்தும் தன்மை கொண்ட சுத்தியை உடையவனுமானவன் தோர். இந்த சுத்தியை வேறு எவராலும் தூக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா & பிளாக் விடோ
  • மிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண்; பிளாக் விடோ.
 • ஜெர்மி ரேன்நேர் - கிளின்ட் பர்டன்
  • மிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன்' ஹோக்கை.
 • டாம் ஹிடில்ஸ்டன் - லோகி
  • பனி அரக்கர்களின் வாரிசும், தோரின் சகோதரன். இவனின் சக்தி மாய மந்திரம் மற்றும் ஒரு கை கோல்.

தமிழில் குரல் கொடுத்தவர்கள்[தொகு]

சாதனை மற்றும் விருதுகள்[தொகு]

தி அவேஞ்சர்ஸ் நடிகர்கள்

இந்த திரைபபடத்தின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கம், திரைக்கதை, காட்சி விளைவுகள், அதிரடி காட்சிகள் மற்றும் இசை போன்றவற்றிக்கு பலரால் பாராட்டு பெறப்பட்டது. மேலும் காட்சி படுத்தப்பட்ட சாதனைகளுக்காக அகாதமி விருது மற்றும் 'பிரிட்டிஷ் அகாடமி' போன்ற விருதுகளில் ஏராளமான விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றது.

வசூல்[தொகு]

இந்த திரைப்படம் உலகளவில்1.5 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. மற்றும் ஏராளமான வசூல் சாதனைகளை படைத்து எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது. 2012 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் அத்துடன் பற்றுசீட்டு விற்பனையில் 1 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் மார்வெல் தயாரிப்பு படமும் இதுவே ஆகும்.

இதன் தொடர் திரைப்படங்கள்[தொகு]

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்[தொகு]

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்[தொகு]

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Breznican, Anthony (September 30, 2011). "'The Avengers': Your first look at the dream team!". மூல முகவரியிலிருந்து January 17, 2017 அன்று பரணிடப்பட்டது. "At risk is not only the movie's estimated $220 million budget, but also one of the most promising tent pole franchises in Hollywood."
 2. "The Avengers (2012)". Box Office Mojo. மூல முகவரியிலிருந்து November 2, 2012 அன்று பரணிடப்பட்டது.
 3. Marvel.com via Superhero Hype(October 28, 2008). "Downey Jr., Favreau & Cheadle Suit Up for The Avengers". செய்திக் குறிப்பு.
 4. Graser, Marc (March 22, 2010). "Chris Evans to play 'Captain Americaவார்ப்புரு:'-". Variety. மூல முகவரியிலிருந்து April 25, 2011 அன்று பரணிடப்பட்டது.
 5. Jensen, Jeff (July 29, 2010). "வார்ப்புரு:-'Avengers': New Hulk Mark Ruffalo on replacing Edward Norton, plus Oscar buzz for 'The Kids Are All Rightவார்ப்புரு:'-". Entertainment Weekly. https://ew.com/comic-con/2010/07/29/avengers-new-hulk-mark-ruffalo/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அவேஞ்சர்ஸ்&oldid=3086954" இருந்து மீள்விக்கப்பட்டது