கோஸ்டு இரைடர் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோஸ்டு இரைடர்: இசுபிரிட்டு ஓப் வெங்கெங்சு
இயக்கம்மார்க் நெவெல்டின் மற்றும் பிரையன் டெய்லர்
தயாரிப்பு
மூலக்கதை
கோஸ்டு இரைடர்
படைத்தவர்
  • ராய் தாமஸ்
  • கேரி ப்ரீட்ரிச்
  • மைக் ப்ளூக்
திரைக்கதை
இசைடேவ் சார்டி
நடிப்பு
  • நிக்கோலஸ் கேஜ்
  • சியாரான் கிண்ட்சு
  • விசாலண்டே பிளாசிடோ
  • ஜானி விட்வொர்த்
  • கிறிஸ்டோபர் லம்பேர்ட்
  • இட்ரிஸ் எல்பா
ஒளிப்பதிவுபிராண்டன் ட்ரோஸ்ட்
படத்தொகுப்புபிரையன் பெர்டன்
கலையகம்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ் (மூலம் சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்)
வெளியீடுதிசம்பர் 11, 2011 (2011-12-11)(பட்-நம்ப்-ஏ-தோன்)
பெப்ரவரி 17, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்95 நிமிடங்கள்[4]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$57-75 மில்லியன் [5]
மொத்த வருவாய்$132.6 மில்லியன்

கோஸ்டு இரைடர்: இசுபிரிட்டு ஓப் வெங்கெங்சு (Ghost Rider: Spirit of Vengeance) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது கோஸ்ட் ரைடர்[6] என்ற மார்வெல் வரைகதையில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இசுகாட் எம். ஜிம்பிள், சேத் ஹாஃப்மேன் மற்றும் டேவிட் எஸ். கோயர் ஆகியோரின் திரைக்கதையில் மார்க் நெவெல்டின் மற்றும் பிரையன் டெய்லர் ஆகியோர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம்உலகம் முழுவதும் விநியோகம் செய்தது.

இது 2007 ஆம் ஆண்டு வெளியான கோஸ்டு இரைடர்[7] என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக நிக்கோலஸ் கேஜ், சியாரான் கிண்ட்சு, விசாலண்டே பிளாசிடோ, ஜானி விட்வொர்த், கிறிஸ்டோபர் லம்பேர்ட் மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோரின் நடிப்பில் வெளியானது.

கோஸ்டு இரைடர்: இசுபிரிட்டு ஓப் வெங்கெங்சு படம் டிசம்பர் 11, 2011 அன்று ஒரு சிறப்பு இரவு காட்சியாக வெளியானது. பின்னர் பிப்ரவரி 17, 2012 அன்று 2டியில் உலகளவில் வெளியாகி விமர்சகர்களிடம் மோசமான விமர்சன வரவேற்பை பெற்று $132 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது.

இப்படத்தின் நடிகரான நிக்கோலஸ் கேஜ் கூறுகையில் கோஸ்டு இரைடர் படங்கள் முடிந்தது என்றும் திட்டமிட்ட தொடர்ச்சி ரத்து செய்யப்பட்டது எனவும் அறிவித்தார்.[8] இதனால் இந்த கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமைகள் மார்வெல் ஸ்டுடியோவிற்கு மாற்றப்பட்டு கோஸ்டு இரைடரின் 'ராபி ரெய்ஸ்' பதிப்பு ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் என்ற தொடரில் தோன்றியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஸ்டு_இரைடர்_2&oldid=3302384" இருந்து மீள்விக்கப்பட்டது