கிறிஸ் எவன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறிஸ் எவன்ஸ்
Chris Evans - Captain America 2 press conference (cropped).jpg
கிறிஸ் எவன்ஸ்- கேப்டன் அமெரிக்கா 2 செய்தியாளர் சந்திப்பில் (2014)
பிறப்புகிறிஸ்டோபர் ராபர்ட் இவான்ஸ்
பிறந்த தேதி மற்றும் வயது 1981-6-13 (32வயது)
ஸட்பெரீ, மாசசூசெட்ஸ், யு.எஸ்.
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–அறிமுகம்
உறவினர்கள்ஸ்காட் எவன்ஸ் (சகோதரன்)
மைக் கேப்னொ (Mike Capuano) (மாமா)

கிறிஸ் எவன்ஸ் (Chris Evans, பிறப்பு: ஜூன் 13, 1981)[1] ஒரு அமெரிக்க நடிகராவார். இவர் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து பிரபலஔமான நடிகரானார். இவர் ஃபெண்டாஸ்டிக் ஃபோர், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2, கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், தி அவேஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கிறிஸ் எவன்ஸ் பாஸ்டன் நகரில் பிறந்து[2] ஸட்பெரீ நகரில் வளர்ந்தார்[3]. அவரது தாயார், லிசா மேரி, (Concord Youth Theater) கான்கார்ட் யூத் தியேட்டரில் ஒரு கலை இயக்குனர்[4][5]. மற்றும் அவரது தந்தை, ஜி ராபர்ட் "பாப்" எவன்ஸ் ஒரு பல் மருத்துவர்[6]. இவருக்கு 2 சகோதரிகள் உண்டு. இவரது தாயார் அரை இத்தாலியர் மற்றும் அரை ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். எவன்ஸ் லிங்கன் ஸட்பெரீ ரீஜனல் உயர்நிலை பள்ளியில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

இவர் 2000ம் ஆண்டு தி நியூ கம்மர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக சினிமாதுறைக்கு அறிமுகமானார். ’நாட் அனதர் டீன் மூவி’ என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ’தி பெர்ஃபெக்ட் ஸ்கோர்’, செல்லுலார், மற்றும் ஃபியர்ஸ் பீப்பிள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

2005ம் ஆண்டு 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் கான்ஸ்டண்டின் ஃபிலிம் மற்றும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, 1492 பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ஒரு சூப்பர் ஹீரோ ஆனார். ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 ம் பாகம் 2007ம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து 'மார்வல் ஸ்டியோஸ்' தயாரித்த கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் மற்றும் தி அவேஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்காவின் 2ம் பாகமான கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி வெளியானது.

இவர் தற்பொழுது 'எ மெனி ஸ்பிளிண்டர்டு திங்' மற்றும் '1:30 டிரெயின்' போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். '1:30 டிரெயின்' என்ற திரைப்படத்தை இவரே இயக்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2004ம் ஆண்டு இருந்து 2006ம் ஆண்டு வரை நடிகை 'ஜெஸ்ஸிகா பைல்' டேட்டிங் இருந்துள்ளார். மற்றும் நடிகை 'மின்கா கெல்லி'யுடனும் டேட்டிங் செய்துள்ளார்[7][8].

இவர் LGBT உரிமைகள் ஆதரவாளரும்[9] புத்த மதத்தைப் பின்பற்றுபவரும்[10] ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

இவர் நடித்த திரைப்படங்கள் சில:

வீடியோ விளையாட்டுகள்[தொகு]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

இவர் கேப்டன் அமெரிக்கா நடித்ததுக்கு பல பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தி அவேஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடித்தற்காக விருதுகளை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Today in History". The Guardian. அசோசியேட்டட் பிரெசு (London). June 13, 2009. Archived from the original on December 26, 2013. http://www.guardian.co.uk/world/feedarticle/8556516. பார்த்த நாள்: January 23, 2008. "Actor Chris Evans is 28." 
  2. Itzkoff, Dave (July 8, 2011). "Chris Evans in 'Captain America: The First Avenger'". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2011/07/10/movies/chris-evans-in-captain-america-the-first-avenger.html. 
  3. Pai, Tanya. "America's Most Wanted". Boston. June 2011. Archived from the original on July 5, 2011. http://www.webcitation.org/5zxBHb81H. பார்த்த நாள்: April 16, 2013. 
  4. Marotta, Terry (July 19, 2007). "Grease is the word". Gatehouse News Service via Wicked Local Sudbury. மூல முகவரியிலிருந்து April 3, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 19, 2010.
  5. Cantrell, Cindy (March 9, 2014). "Chris Evans doesn’t forget his Concord roots". The Boston Globe. http://www.bostonglobe.com/metro/regionals/west/2014/03/09/movie-superhero-chris-evans-doesn-forget-his-roots-concord-youth-theatre/rJ6PF3IYYmZZs9AbASfczO/story.html. பார்த்த நாள்: April 6, 2014. 
  6. Keck, William (September 9, 2004). "Chris Evans' career ready to sizzle". USA Today. Archived from the original on November 6, 2013. http://www.usatoday.com/life/people/2004-09-09-chris-evans_x.htm. பார்த்த நாள்: December 10, 2007. "...Evans' siblings, Scott, Carly and Shanna." 
  7. Johnson, Zach (September 4, 2012). "Chris Evans, Dating Again!". Us Weekly. http://www.usmagazine.com/celebrity-news/news/chris-evans-minka-kelly-dating-again-201249. பார்த்த நாள்: April 16, 2013. 
  8. Johnson, Zach (September 4, 2012). "Exclusive: Chris Evans, Minka Kelly Dating Again!". Us Weekly. http://www.usmagazine.com/celebrity-news/news/chris-evans-minka-kelly-dating-again-201249. பார்த்த நாள்: September 4, 2012. 
  9. Voss, Brandon (January 5, 2009). "A List: Chris Evans". The Advocate. பார்த்த நாள் July 20, 2010.
  10. Sachs, Adam (May 2012). "The Avengers' Chris Evans: Just Your Average Beer-Swilling, Babe-Loving Buddhist". Details (magazine). http://www.details.com/celebrities-entertainment/cover-stars/201205/chris-evans-avengers. பார்த்த நாள்: April 16, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_எவன்ஸ்&oldid=3189761" இருந்து மீள்விக்கப்பட்டது