தோர்: த டார்க் வேர்ல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோர்: இருண்ட உலகம்
இயக்கம்ஆலன் டெய்லர்
தயாரிப்புகேவின் பிகே
இசைபிரையன் டைலர்
நடிப்புகிறிஸ் ஹோம்ஸ்வோர்த்,நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு2013.10.22 லண்டன், 2013.11.08 அமெரிக்கா
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170 மில்லியன்
மொத்த வருவாய்$554,562,000

தோர்: இருண்ட உலகம் இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கன் சூப்பர் ஹீரோ திரைப்படம். இந்த திரைபடத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தோர் என்ற காமிக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து, 2011ல், ஒரு படம் எடுக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இப்போது, அதே கேரக்டரை மையமாக வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆலன் டெய்லர் இயக்கியுள்ள இந்த படத்தில், கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஹீரோவாக நடித்துள்ளார்.

அமெ‌ரிக்காவில் வெளியாகும் முன் சென்ற வாரம் 36 வெளிநாடுகளில் தோர் - தி டார்க் வேர்ல்ட் வெளியானது. மார்வெலின் காமிக் கதாபாத்திரமான தோர் வெளியான மூன்றே நாள்களில் 109 மில்லியன் டாலர்களை வசூல் செய்து டிஸ்னிக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

இந்த திரைப்படம் தமிழ்மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது.

கதை சுருக்கம்[தொகு]

ஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா? அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான்? சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான்? தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை.

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பில்[தொகு]

முதன்மை புகைப்பட பார்ன் வூட், சர்ரே செப்டம்பர் 10, 2012 அன்று தொடங்கியது. ஒரு சில வாரங்கள் கழித்து, கிளைவ் ரஸ்ஸல் நடித்தார். மாத இறுதியில், Jaimie மழை நடைபயிற்சி போது அவர் வழுக்கி பின்னர் அலெக்சாண்டர், லண்டன் படப்பிடிப்பு காயமடைந்தார். படப்பிடிப்பு நடந்தது ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை.

பாக்ஸ் ஆபிஸில்[தொகு]

நவம்பர் 28, 2013, தோர் போல்: டார்க் உலக $ 554,562,000 ஒரு உலகளாவிய மொத்த வட அமெரிக்காவில் $ 173,562,000 மற்றும் பிற நாடுகளில் உள்ள $ 381,000,000 பெற்றார். இது வெளியான 19 நாட்களுக்குள் அதன் முன்னோடி முறியடிக்கப்பட்டுள்ளது.

2011ல் தோ‌ரின் முதல் பாகம் வெளியானது. உலக அளவில் 450 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இரண்டாவது பாகமான தோர் - தி டார்க் வேர்ல்ட் அதைவிட அதிகம் வசூலிக்கும் என்பதை படத்தின் ஓபனிங் நிரூபித்திருக்கிறது. மூன்றே தினங்களில் 109 மில்லியன் டாலர்கள்.

யுகே-யில் இப்படம் 3 தினங்களில் 13.4 மில்லியன் டாலர்களும், ஃப்ரான்சில் 9.4 மில்லியன் டாலர்களும், மெக்சிகோவில் 8.2 மில்லியன் டாலர்களும், பிரெசிலில் 8.1 மில்லியன் டாலர்களும், ஜெர்மனியில் 7.9 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. மேலும் பல நாடுகளில் படம் வெளியாகும் போது - குறிப்பாக ‌சீனா - படத்தின் வெளிநாடு வசூல் இன்னும் பல மடங்கு அதிக‌ரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் தமிழ்மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. தோர் 2 தமிழ் முன்னோட்டம்
  2. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த தோர்

வெளி இணைப்புகள்[தொகு]