மார்வல் திரைப் பிரபஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் -தலைப்பு

மார்வல் திரைப் பிரபஞ்சம் (Marvel Cinematic Universe (MCU)) அல்லது மாவல் சினிமற்றிக்கு இயூனிவேசு என்பது அமெரிக்க ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது மாவல் வரைகதைகளில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் பற்றி மாவல் சுரூடியோசினால் சுயாதீனமாகத் தயாரித்து வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும். மேலதிகமாக, வரைகதைகள், குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்பனவும் இந்நாமத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. மாவல் வரைகதைகளின் பாணியில் பல்வேறு கதாபாத்திரங்கள், கதையமைப்புகள் மற்றும் நடிகர்களைக் கொண்ட படங்களை உள்ளடக்கியதாக இது காணப்படுகிறது. கிளாக்கு கிறேக்கின் நடிப்பில், இத்திரைப்படங்களில் தோன்றும் பில் கோல்சன் கதாபாத்திரம் மாவல் திரைப்பிரபஞ்சத்தினால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாகும்.

2008இல் வெளியான அயன்-மேன் திரைப்படத்துடன் மாவல் திரைப் பிரபஞ்சத்தின் முதற் கட்டப் படங்கள் வெளியிடப்பட்டு 2012இன் மாவலின் அவெஞ்சர்சு திரைப்படத்துக்கு வித்திடப்பட்டது. இரண்டாவது கட்டமானது அயன்-மேன் 3-இனது வெளியீட்டுடன் ஆரம்பமாகி 2015இல் வெளிவரவிருக்கும் ஆன்ட்-மேன் திரைப்படத்துடன் முடிவடைகிறது. மாவல் நிறுவனமானது, 2016இல் வெளிவரவிருக்கும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படத்துடன் தனது மூன்றாவது கட்டத்தைத் தொடங்கவுள்ளது. திரைப்படங்களோடு மட்டும் நின்றுவிடாமல் 2010இல் மேற்குறிப்பிடப்பட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய வரைகதைப் புத்தகங்களின் வெளியீட்டுடன் இது இன்னமும் விரிவுபட்டது. மேலும் 2011 முதல் மாவல் வன்-சாட்டுகள் (Marvel One-shots) என்ற பெயரின்கீழ் குறும்படங்களும் 2013 முதல் மாவல்சு' ஏசன்ற்சு ஒப் சீல்டு (மாவலின் சீல்டு உளவாளிகள்) எனும் பெயருடைய தொலைக்காட்சித் தொடரும் வெளிவருகின்றன.

அமெரிக்காவிலும் உலகளவிலும் வசூலில் முதலிடம் பிடிக்கும் திரைப்படத் தொடர்களைக் கொண்டிருப்பதுடன், வரைகதைக் கதாபத்திர உரிமங்களைக் கொண்டுள்ள பல்வேறு படங்கள் தமது சொந்தப் பிரபஞ்சத்தை அமைப்பதற்கு முன்னோடியாகவும் உள்ளது.