கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2
இயக்கம்ஜேம்ஸ் கன்[1]
தயாரிப்புகேவின் பிகே[2]
கதைஜேம்ஸ் கன்
இசைடைலர் பேட்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஹென்றி பிரஹாம்
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2017 (2017-04-10)(தோக்கியோ)
மே 5, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$863.8 பில்லியன்[3]

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (ஆங்கில மொழி: Guardians of the Galaxy Vol. 2) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸின் 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' என்ற வரைகதையை அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் கன்[4] என்பவர் இயக்கியுள்ளார்.[5]

இது மார்வெல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2014 ஆம் ஆண்டு வெளியான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[6] என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் பதினைந்தாவது படமாகும். இப்படத்தை ஜேம்ஸ் கன் என்பவர் எழுதி இயக்க, கிறிஸ் பிராட், ஜோ சால்ட்னா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், மைக்கேல் ரூக்கர், கரேன் கில்லான், போம் க்ளெமென்ட்டிப், எலிசபெத் டெபிக்கி, கிறிஸ் சல்லிவன், சீன் கன், சில்வெஸ்டர் ஸ்டலோன் மற்றும் கர்ட் ரஸ்ஸல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 10 ஏப்ரல் 2017 அன்று தோக்கியோவில் திரையிடப்பட்டது மற்றும் மே 5, 2017 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் $200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு $863 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2017 ஆம் ஆண்டில் எட்டாவது மிக அதிக வசூல் செய்த படமாகும். 90ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த இசை இயக்கம் மற்றும் சிறந்த திரை வண்ணத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியான 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 3' என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

கதைக்களம்[தொகு]

இந்த திரைப்படத்தின் கதை 2014 ல் வெளிவந்த கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி திரைப்படத்தை தொடர்ந்து அமைந்துள்ளது. விண்வெளி கதாநாயகர்களான ஸ்டார் லார்ட் , கமோரா, டிராக்ஸ் , க்ரூட் மற்றும் ராக்கெட் செவரைன் என்ற அமைப்புக்கு உதவி செய்கின்றனர். செவரைன் அமைப்பின் அரசி அய்ஷா அங்கே இருந்த பேட்டரிகள் என்ற சக்திவாய்ந்த சாதனத்தை ராக்கெட் அவரோடு எடுத்து சென்றதால் கார்டியன்ஸ் அமைப்பை துரத்துகிறார்.

இந்த நிலையில் ஸ்டார் லார்ட் , கமோரா மற்றும் டிராக்ஸ் ஆகியோர் தனியாகவும் ராக்கெட் மற்றும் க்ரூட் தனியாகவும் பிரிந்து செல்கின்றனர். ஸ்டார் லார்டை ஈகோ என்ற சக்திவாய்ந்த கிரகத்தின் அரசர் சந்திக்கிறார். மேலும் ஸ்டார் லார்ட் அவருடைய மகன்‌ என்றும் சொல்கிறார். ஸ்டார் லார்ட் குழுவினரை அவருடைய கிரகத்துக்கு‌ அழைத்து செல்கிறார். ராக்கைட் மற்றும் க்ரூட் இப்போது ரேவேஸர்ஸ் அமைப்பின் தலைவரும் ஸ்டார் லார்டின் வளர்ப்பு தந்தையுமான யோன்டு இப்போது அவருடைய சொந்த குழுவினரால் புறக்கணிக்கப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டதை அறிந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியில் ரேவேஜர்ஸ் அமைப்பால் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்ட அந்த அமைப்பின் தலைவர் யாண்டு அவருடைய பறக்கும் அம்பு மூலமாக அவருடைய சொந்த விண்வெளிக்கப்பலை உடைக்கிறார். இப்போது ஸ்டார் லார்டு அவருடைய தந்தையான ஈகோ என்ற உயிர்வாழும் கிரகத்துடன் இருப்பதை அறிந்த பயாண்டு அவருடைய புதிய நண்பர்கள் ராக்கெட் மற்றும் க்ரூட் உதவியுடன் ஸ்டார்லார்டை காப்பாற்ற புறப்புடுகிறார். ஸ்டார் லாரட் அவருடைய தந்தையுடன் நிறைய விஷயங்களை பேசும்போது அவருடைய தந்தை பிரபஞ்ச ஒருங்கிணைப்பு என்ற பல்வேறு கிரகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மோசமான திட்டத்தின் ஒரு பாகமாகவே இவையெல்லாம் செய்ததை அறிகிறார். இந்த திட்டத்தின் ஒரு பாகமாக ஸ்டார்லார்டின் அம்மா கொல்லப்பட்டதை அறிந்ததும் கோபத்துடன் ஈகோவை எதிர்த்து போராடுகிறார். இந்த போராட்டத்தில் கமோரா , டிராக்ஸ் , நெபுலா , யாண்டு, ராக்கெட் மற்றும் க்ரூட் இணைந்து போராடுகின்றனர்.

முன்னதாக எடுக்கப்பட்ட பேட்டரி சாதனங்களுடன் ஈகோ கிரகத்தின் மையத்தை உடைக்க ராக்கெட் மற்றும் க்ரூட் முயற்சிசெய்யும்போது அய்ஷாவின் செவரன் படைகளும் கார்டியன்ஸை எதிர்க்கின்றனர். பெரும் முயற்சியுடன் ஸ்டார்லார்டு எல்லோரையும் தொலைவிலுள்ள பாதுகாப்பான விண்கப்பலுக்கு அனுப்பினாலும் ஸ்டார்லார்டால் விண்கப்பலை சேர முடியவில்லை. யாண்டு வளர்ப்பு மகனான ஸ்டார்லார்டை காப்பாற்ற உயிர் தியாகம் செய்கிறார். அவருடைய இறுதி மரியாதையின்போது ஸ்டார்லார்டிடம் யாண்டுவின் தளபதி ஒரு ஜூன் என்ற இசை-கேட்கும் சாதனத்தை யாண்டுவின் நினைவாக கொடுக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

வரவேற்பு[தொகு]

திரைப்பட வருவாய்[தொகு]

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 அமெரிக்கா மற்றும் கனடாவில் 389.8 மில்லியன் டாலர் மற்றும் மற்ற நாடுகளில் 473.9 மில்லியன் டாலர்கள் என உலகளவில் மொத்தம் 863.8 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. இப்படம் வெளிவந்த நான்காம் வாரத்திற்குப் பிறகு மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் வெளியிட்டில் ஐந்தாவது அதிக வருவாய் ஈட்டிய படமாக இது ஆனது. [9] [10]

தொடர்ச்சியான தொடர்கள்[தொகு]

Lua error in Module:Further at line 31: attempt to call field 'formatPages' (a nil value).

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Graser, Marc (July 25, 2014). "James Gunn to Write, Direct 'Guardians of the Galaxy' Sequel". Variety. July 26, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 26, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Cornet, Roth (August 5, 2014). "Marvel Head Kevin Feige: Guardians Of The Galaxy 2 Will Answer Guardians' Big Question". IGN. August 6, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 6, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Guardians of the Galaxy Vol. 2 (2017)". Box Office Mojo. February 22, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Anderton, Ethan (August 4, 2014). "James Gunn Begins 'Guardians of the Galaxy 2,' Thanks Cast & Crew". Firstshowing.net. August 5, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 5, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. Madison, Charles (July 26, 2014). "James Gunn on Guardians of the Galaxy 2 – the promise of Nebula, Yondu and Peter Quill's father". Film Divider. August 2, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 2, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Plumb, Ali. "James Gunn on Guardians of the Galaxy's Secrets – The Current State of the Sequel". Empire. August 16, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 16, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. Romano, Nick (October 16, 2016). "Exclusive: 'Guardians of the Galaxy 2' Star Vin Diesel Teases "Goofy, Adorable" Baby Groot". Collider. October 17, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. Sullivan, Kevin P. (November 12, 2014). "'Guardians of the Galaxy 2' Leads To More Cosmic Movies, Not 'Avengers 3'". MTV. November 13, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 12, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  9. Tartaglione, Nancy (June 4, 2017). "'Wonder Woman' Lassos $122.5M Offshore, $223M Global Debut – International Box Office". Deadline Hollywood. from the original on June 5, 2017. Retrieved June 5, 2017.
  10. D'Alessandro, Anthony (March 20, 2018). "No. 9 'Guardians of the Galaxy Vol. 2' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]