ஸ்டான் லீ
ஸ்டான் லீ | |
---|---|
2014 இல் லீ | |
பிறப்பு | ஸ்டான்லி மார்ட்டின் லிபெர் திசம்பர் 28, 1922 நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | நவம்பர் 12, 2018 கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 95)
துறை (கள்) | படப்புத்தக (காமிக் புத்தகம்) எழுத்தாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் |
விருதுகள் | |
கையெழுத்து | |
ஸ்டான்லி மார்ட்டின் லிபர் (ஆங்கில மொழி: Stanley Martin Lieber) (28 திசம்பர் 1922 - 12 நவம்பர் 2018) என்ற இயற்பெயரை உடைய ஸ்டான் லீ[1] என்பவர் ஒரு அமெரிக்க வரைகதை புத்தக எழுத்தாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் காமிக்சு என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனத்தின் முதன்மை படைப்பாற்றல் தலைவராக இவர் இருந்தார். ஒரு சிறிய பதிப்பகமாக இருந்த இந்நிறுவனம் வரைகலை துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பல்லூடக நிறுவனமாக விரிவடைய இவர் பெரும்பங்களித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஸ்டான்லி மார்ட்டின் லிபர் 1922 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 28 நியூயார்க் நகரத்தின் மன்காட்டனில் பிறந்தார் [2]. ருமேனிய நாட்டைச் சேர்ந்த செலியா மற்றும் யாக் லிபர் ஆகியோர் இவரது பெற்றொர்களாவர். மன்காட்டனில் மேற்கு 98 வது தெருவில் இவர்கள் வசித்தனர் [3] [4]. இவர் மனைவி பெயர் ஜான் பூகாக்[5] என்பதாகும். 1947 இல் இவர்கள் திருமணம் நடந்தது[6][7]. 2 குழந்தைகள். மனைவி 2017ஆம் ஆண்டு உயிர் நீத்தார்
வேலை
[தொகு]மார்வெல் நிறுவனத்தில் மற்றவர்களுடன்-குறிப்பாக இணை எழுத்தாளர் / கலைஞர்கள் ஜாக் கிர்பி மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோருடன் இணைந்து, மீநாயகர்களான ஸ்பைடர் மேன், எக்ஸ்-மென், அயன் மேன், தோர், ஹல்க், பிளாக் விடோவ், பென்டாஸ்டிக் போர், பிளாக் பாந்தர், டேர்டெவில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்கார்லட் விட்ச் மற்றும் ஆன்ட் மேன் ஆகிய பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
1960 களில் மீநாயகன் வரைகதை எழுதுவதற்கு மிகவும் இயல்பான அணுகுமுறையை அவர் முன்னெடுத்தார், 1970 களில் அவர் வரைகதை கோட் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு சவால்விடும் செயல்முறைகளின் மூலம், மறைமுகமாக அதன் கொள்கைகளில் மாற்றங்களுக்கு வழிவகுத்தார். 1990 களில் மார்வெலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்நிறுவனத்தின் பொது முகமாக இருந்தார். மேலும் மார்வெல் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேமியோ எனப்படும் குறு பாத்திரங்களில் அடிக்கடி தோன்றி மக்களின் அன்பைப் பெற்றார். தொடர்ந்து, 2018 இல் இறக்கும் வரை தன்னுடைய சுயாதீனமான படைப்பு முயற்சிகளைத் தொடர்ந்தார்.
மிகுந்த நகைச்சுவை உணர்வும் தேடலும் உடையவரான ஸ்டான் லீ எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதை சிறுவயதில் இருந்து இலக்காகக் கொண்டிருந்தார். 1939ல் தன் மாமாவின் உதவியினால் டைம்லி காமிக்ஸ் ல் உதவியாளராக சேர்ந்து பணிபுரிந்தாா். பின்னர் 1960களில் இந்நிறுவனம் மார்வெல் காமிக்ஸ் ஆக மாற்றம் பெற்றது. ஆரம்ப நாட்களில், மை புட்டியில் இருந்து தொட்டு வரையும் மையினை நிரப்புவது, மதிய உணவு வாங்கி வருவது, முடிக்கப்பட்ட படக்கதையின் பென்சில் கோடுகளை அழிப்பது போன்ற சிறு வேலைகளையே செய்து வந்தார். 1941 மே மாதத்தல் வெளிவந்த கேப்டன் அமெரிக்கா படக்கதை புத்தகத்தின் பக்கத்தை நிரப்பும் பொருட்டு தன் முதல் படைப்பை புனைபெயரில் வெளியிட்டார். காமிக் புத்தகங்களின் சமூக மதிப்பு குறைவாக இருந்த காரணத்தினால், பின்னாட்களில் தான் அமெரிககாவின் மிகச்சிறந்த நாவலை எழுதும்போது தான் காமிக்ஸ் புத்தகத்தில் எழுதியவனாக அறியப்படுவதை தவிர்க்க தன் சொந்த பெயரை விடுத்து புனைப்பெயரில் எழுதியதாக சுயசரிதைப் புத்தகத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அந்த புனைப்பெயரையே சட்டப்பூர்வமாக தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
வரைகதை புத்தகத்தின் ஆசிரியராக பதவி வகித்தபோது, தொடர்ந்து வாசகருடன் இணைப்பில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். படக்கதை புத்தகத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி அடுத்து வரும் கதையின் முன்னாேட்டம், செய்திகள் போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டார். ரசிகர்களுக்கு எழுதும் பத்தியில் மிக இயல்பான நண்பருடன் பேசும் அரட்டை போன்ற நடையினை கையாண்டார். படக்கதையினை உருவாக்குபவர்களும், ரசிகர்களும் ஒரு குழுவாக சமூகமாக இருப்பதை உறுதி செய்தார்.
விருதுகள்
[தொகு]1994 ஆம் ஆண்டில் காமிக் புத்தகத் துறையின் வில் ஈஸ்னர் விருது ஹால் மற்றும் 1995 இல் ஜாக் கிர்பி ஹால் ஆஃப் ஃபேமில் லீ சேர்க்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் அவர் NEA இன் நேஷனல் மெடல் ஆப் ஆர்ட்ஸ் ஐப் பெற்றார்.
இறப்பு
[தொகு]நவம்பர் 2018 ல் உடல்நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee & Mair 2002, p. 27
- ↑ Miller, John Jackson (June 10, 2005). "Comics Industry Birthdays". Comics Buyer's Guide. Iola, Wisconsin. Archived from the original on October 30, 2010.
- ↑ Lee & Mair 2002, p. 5
- ↑ Almanac, World (September 1986). The Celebrity Who's Who – World Almanac. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-345-33990-4. பார்க்கப்பட்ட நாள் August 13, 2013.
- ↑ Johnson, Ian (December 2, 2018). "Watch Marvel Comics legend Stan Lee impersonate his wife's Geordie accent" (in English). Chronicle (Newcastle: Chronicle Live). https://www.chroniclelive.co.uk/news/north-east-news/stan-lee-marvel-wife-geordie-15492109.
- ↑ "Stan & Joan Lee's Love Story". Daily Entertainment News. http://dailyentertainmentnews.com/movies/joan-clayton-lee-is-lee-stan-lee-wife/.
- ↑ Lee, Mair, p. 69
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஸ்டான் லீ குர்லியில்
- Stan Lee at the Unofficial Handbook of Marvel Comics Creators
- ஸ்டான் லீ at the Comic Book DB
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்டான் லீ
- Stan Lee
- The Last Word – Video (05:26) (த நியூயார்க் டைம்ஸ்; November 12, 2018)
- 1922 பிறப்புகள்
- 2018 இறப்புகள்
- அமெரிக்க வரைகதை எழுத்தாளர்கள்
- வரைகதை புத்தக படத்தொகுப்பாளர்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- அமெரிக்க அறியொணாமையியலாளர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- மார்வெல் வரைகதை
- அமெரிக்க யூதர்கள்
- மார்வெல் மகிழ்கலை
- வரைகதை உருவாக்கியவர்கள்