ஜாக் கிர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாக் கிர்பி
Jack-Kirby art-of-jack-kirby wyman-skaar.jpg
பிறப்புஜேக்கப் கர்ட்ஸ்பெர்க்
ஆகத்து 28, 1917(1917-08-28)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா[1]
இறப்புபெப்ரவரி 6, 1994(1994-02-06) (அகவை 76)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கன்
கவனிக்கத் தக்க வேலைகள்கேப்டன் அமெரிக்கா, பென்டாஸ்டிக் போர், தோர், அவென்ஜர்ஸ், அயன் மேன், ஹல்க், பிளாக் பாந்தர், எக்ஸ்-மென்
துணை
ரோஸ் கோல்ட்ஸ்டைன் (தி. 1942)

ஜாக் கிர்பி (ஆகத்து 28, 1917-பெப்ரவரி 6, 1994) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை புத்தக கலைஞர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் ஊடகத்தின் முக்கிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும் அதன் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க படைப்பாளர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறது.

இவர் 1930 களில் வரை கதை துறையில் நுழைந்தார், ஜாக் கர்டிஸ் என்ற புனைப்பெயருடன் பல்வேறு வரை கதை அம்சங்களை வரைந்தார், இறுதியில் ஜாக் கிர்பி என்ற பெயரை தேர்வு செய்தார். 1940 ஆம் ஆண்டில் இவரும் எழுத்தாளர் ஆசிரியர் ஜோ சைமனும் இணைத்து மிகவும் வெற்றிகரமான மீநாயகன் கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்கா என்ற பாத்திரத்தை டைம்லி காமிக்ஸ் என்ற நிறுவனத்திற்காக உருவாகினர். இந்த நிறுவனம் தற்பொழுது மார்வெல் காமிக்ஸ் என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. 1940 களில் கிர்பி மற்றும் சைமனுடன் ஜோடி சேர்ந்தார் ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கினர். பின்னர் டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Evanier, Mark (March 20, 2008). "Jack Kirby Biography". Jack Kirby Museum & Research Center. மூல முகவரியிலிருந்து September 17, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 24, 2012.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_கிர்பி&oldid=3129807" இருந்து மீள்விக்கப்பட்டது