ஹல்க் (கதாப்பாத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹல்க் என்பது மார்வெல் காமிக்ஸ் என்ற படக்கதையில் உள்ள வீரதீர நாயகன் ஆவான். இந்த கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ, ஜாக் கிர்பி ஆகியோர் உருவாகினர். தி இன்கிரடிபிள் ஹல்க் 1 என்ற கதையில் இவன் அறிமுகமானான். இந்த படக்கதை முழுவதும், இவன் பெரிய உருவமும், பச்சை நிறமுள்ள மனிதனாகவும், அதீத பலம் மிகுந்தவனாகவும் காணப்படுகிறான். கோபப்படுகையில் அதிக ஆற்றல் பெறுகிறான். தனிமையில் வாழும் புருஸ் பன்னர் என்ற அறிவியலாளர் மன அழுத்தத்தின் காரணமாக ஹல்க் என்னும் இராட்சத மனிதனாக மாறுகிறார். ஹல்க்காக மாறியபின், தனது மெய் உருவமான பன்னரை வெறுக்கிறான். இந்தக் கதாப்பாத்திரத்தை நாயகனாகக் கொண்ட திரைப்படங்களும், அசைவூட்டத் தொடர்களும் வெளிவந்துள்ளன.