ராக்கெட் ரக்கூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராக்கெட் ரக்கூன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'மார்வெல் பிரிவியூ' #7 (கோடை 1976)
உருவாக்கப்பட்டதுபில் மான்ட்லோ
கீத் கிஃபென்
கதை தகவல்கள்
இனங்கள்ரக்கூன் அரை உலகம்
பிறப்பிடம்அரை உலகம்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
நோவா கார்ப்ஸ்
பங்காளர்கள்குரூட்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்ராக்கி ரக்கூன், ரேஞ்சர் ராக்கெட்
திறன்கள்
  • சிறந்த தந்திரவாதி மற்றும் கள தளபதி
  • திறமையான போராளி
  • மேதை அளவிலான புத்தி
  • பூமியின் ரக்கூனின் இயல்பான-உடல் பண்புக்கூறுகள்

ராக்கெட் ரக்கூன் (ஆங்கில மொழி: Rocket Raccoon) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர்கள் பில் மான்ட்லோ மற்றும் கீத் கிஃபென் ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] இவரின் முதல் தோற்றம் கோடை 1976 இல் வெளியான 'மார்வெல் பிரிவியூ' #7 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[2] இவர் ஒரு புத்திசாலி, சிறந்த தந்திரவாதி, கள தளபதி மற்றும் ஆயுத நிபுணர் ஆவார்.

இவரது பெயரும் மற்றும் கதாபாத்திரத்தின் அம்சங்களும் 'தி பீட்டில்ஸின் 1968' பாடலான "ராக்கி ரக்கூன்" க்கு ஒப்புதல் அளிக்கிறது.[3] ராக்கெட் ரக்கூன் 2008 ஆம் ஆண்டு வெளியான மீநாயகன் அணியான கார்டியன்சு ஒப் த கலக்சியின் மறுதொடக்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக தோற்றுவிக்கப்பட்டது.

இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பிராட்லி கூப்பர் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுக்க, சீன் கன் என்னவர் இயங்குப்பட தோற்றத்தில் நடித்து இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mazza, Ed (August 5, 2014). "Bill Mantlo, Rocket Raccoon Co-Creator, Gets Private Guardians Screening In Care Facility". The Huffington Post. August 7, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  2. Mantlo, Bill (w), Giffen, Keith (p), Giffen, Keith (i). "The Sword in the Star!: Stave 2: Witchworld!" Marvel Preview 7 (Summer 1976)
  3. Reed, Bill (ஜூன் 12, 2007). "365 Reasons to Love Comics #163". Comic Book Resources. செப்டெம்பர் 10, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 10, 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கெட்_ரக்கூன்&oldid=3425275" இருந்து மீள்விக்கப்பட்டது