வால்கெய்ரி (வரைகதை)
வால்கெய்ரி | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோன்றியது | அவென்ஜர்ஸ #83 (டிசம்பர் 1970) |
உருவாக்கப்பட்டது |
|
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | புருன்ஹில்ட் |
இனங்கள் | அஸ்கார்டியன் |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் |
திறன்கள் |
|
வால்கெய்ரி (ஆங்கில மொழி: Valkyrie) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ரோய் தாமசு மற்றும் ஜான் புஸ்செமா ஆகியோரால்,[1] டிசம்பர் 1970 இல் வெளியான அவென்ஜர்ஸ #83 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[2]
இந்த கதாபாத்திரம் டிபென்டர்சு என்று அழைக்கப்படும் மீநாயகன் அணியின் முக்கியத் தூணாகவும், மீநாயகன் தோரின் நெருங்கிய கூட்டாளியாகவும், ஒரு காலத்தில் காதலித்தவராகவும் இருந்தார். வால்கெய்ரியின் அஸ்கார்டியன் பெயர் புருன்ஹில்ட் ஆகும், இவர் ஒடினால் அவரது தனிப்பட்ட கேடயம்-கன்னிப்பெண்களின் பிரிவான வால்கெய்ரியரை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டார். போரில் தனது திறமைக்கு பெயர் பெற்ற வால்கெய்ரி அடிக்கடி தனது பறக்க கூடிய குதிரையுடன் சேர்ந்து எதிரிகளுடன் சண்டையிடுவார். 2010 களில் இவர் சீக்ரெட் அவெஞ்சர்ஸின் நிறுவன உறுப்பினராகவும், மிஸ்டி நைட் உடன் ஃபியர்லெஸ் டிபென்டர்ஸின் இணைத் தலைவராகவும் ஆனார்.
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை டெஸ்சா தாம்ப்சன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்: ரக்னராக் (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roy Thomas (w), Buscema, John (p), Palmer, Tom (i). "Come on in, the Revolution's Fine" The Avengers #83 (December 1970)
- ↑ DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan; Bray, Adam (2019). The Marvel Encyclopedia. DK Publishing. p. 391. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-7890-0.