குரூட் (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரூட்
I am Groot - 15220731575.jpg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'டலஸ் டு அஸ்டோனிஷ்' #13 (நவம்பர் 1960)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
லாரி லிபர்
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
இனங்கள்ஃப்ளோரா கோலோஸஸ்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
நிக் ப்யூரி
நோவா கார்ப்ஸ்
பங்காளர்கள்ராக்கெட் ரக்கூன்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்மரம்
திறன்கள்
  • கடினமான மற்றும் சக்திவாய்ந்த மரம்
  • அமானுஷ்ய வலிமை, சகிப்புத்தன்மை, ஆயுள் மற்றும் உணர்வுகள்
  • அழியாத்தன்மை
  • மீளுருவாக்கம் குணப்படுத்தல்
  • தாவர கட்டுப்பாடு மற்றும் கையாளுதல்
  • உடனடி உயிரணு மீளுருவாக்கம் மற்றும் அபாயகரமான காயம் ஏற்பட்டால் குடியிருப்பில் இருந்து மீண்டும் வளரும்

குரூட் (ஆங்கில மொழி: Groot)[1] என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர்கள் ஸ்டான் லீ, லாரி லிபர் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினர்கள்.[2] இவரின் முதல் தோற்றம் நவம்பர் 1960 இல் வெளியான 'டலஸ் டு அஸ்டோனிஷ்' #13 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு வேற்று கிரக உணர்வுள்ள மரம் போன்ற உயிரினம் ஆகும்.

இந்த கதாபாத்திரம் 2006 இல் ஒரு வீரனவராக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 'அண்ணிகிளாடின்: காணியூஸ்ட்' என்ற கதையில் தோன்றியது.[3] அதை தொடர்ந்து கிளைக்கதை தொடரான கார்டியன்சு ஒப் த கலக்சி என்ற அணி வரைகதையில் இதே பெயரில் நடித்தார்.

இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் வின் டீசல் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Deen, Sarah (November 27, 2014). "13 intriguing facts you might not know about Guardians of the Galaxy". மூல முகவரியிலிருந்து May 17, 2019 அன்று பரணிடப்பட்டது.
  2. Christiansen, Jeff (March 10, 2011). "Groot". Appendix to the Handbook of the Marvel Universe. மூல முகவரியிலிருந்து November 13, 2013 அன்று பரணிடப்பட்டது.
  3. Loveness, Jeff (w), Kesinger, Brian (p), Kesinger, Brian (i). Groot 6 (January 2016)

வெளியிணைப்புகள்[தொகு]

  • Groot at the Comic Book DB
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூட்_(வரைகதை)&oldid=3328358" இருந்து மீள்விக்கப்பட்டது