உள்ளடக்கத்துக்குச் செல்

வாஸ்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாஸ்ப்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுடேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #44 (ஜூன் 1963)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
எர்னி ஹார்ட்
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஜேனட் வான் டைன்
இனங்கள்மனித விகாரி
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
விசித்திரமான அவென்ஜர்ஸ்
வகாண்டாவின் முகவர்கள்
பங்காளர்கள்ஹாங்க் பிம்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்யாரையும் வெல்லும் குளவி
திறன்கள்
  • அளவு கையாளுதல்
  • குளவி இறக்கைகள் வழியாக பறத்தல்
  • வாயிலிருந்து கொண்டு போடுதல்
  • பூச்சிகளை கட்டுப்படுத்தல்

வாஸ்ப் (குளவி) (ஆங்கிலம்: Wasp) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கற்பனை மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். ஸ்டான் லீ, ஜாக் கிர்பி, எர்னி ஹார்ட் ஆகியோரால் இந்தக் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. வாஸ்ப்பின் முதல் தோற்றம் ஜூன் 1963 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #44 என்ற கதையில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. மார்வெலின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சக்திவாய்ந்த பெண் நாயகர்களில் ஒருவராக குளவி விவரிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5]

அவரது கதாபாத்திரம் குளவி இறக்கை கொண்டு அதிக உயரம் பறக்கக்கூடியவராகவும், பூச்சிக் கொல்லி குண்டை வாய் மூலம் துப்பி எதிரிகளை கொள்ளக்கூடிய சக்தி படைத்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர் அவென்ஜர்ஸ் நிறுவன உறுப்பினராகவும், அணியின் நீண்டகால தலைவராகவும் உள்ளார். இவர் ஹாங்க் பிம்மின் முன்னாள் மனைவியும், நதியா வான் டைனின் மாற்றாந்தாயும் ஆவார்.

இந்த பாத்திரம் 2015 ஆம் ஆண்டு ஆண்ட்-மேன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றிவிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த பாத்திரத்தை நடிகை மிச்செல் பைபர் மூலம் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சித்தரித்தனர்.

2011 இல் வாஸ்ப் கதாபாத்திரம் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 காமிக் புத்தக ஹீரோக்களில்" 99 வது இடத்தைப் பிடித்தது.[6] 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 26 வது இடமும் பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The 50 Most Important Superheroes, Ranked". GameSpot (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-26.
  2. George Marston (2022-08-11). "Best Avengers members of all time". gamesradar (in ஆங்கிலம்). Retrieved 2022-11-26.
  3. "Every Member Of The Avengers, Ranked". Gizmodo (in ஆங்கிலம்). 2015-02-26. Retrieved 2022-11-26.
  4. Wyatt, Liz (2020-03-26). "Marvel: The 15 Most Powerful Female Avengers". Screen Rant (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-26.
  5. Raguparan, RaguVarman (2021-07-28). "Marvel: 10 Strongest Pym Particle Users, Ranked". Comic Book Resources (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-26.
  6. "Wasp is number 99". IGN. Archived from the original on நவம்பர் 24, 2016. Retrieved May 5, 2011.
  7. "The Top 50 Avengers". IGN. April 30, 2012. Archived from the original on அக்டோபர் 16, 2016. Retrieved July 28, 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்ப்&oldid=4282328" இலிருந்து மீள்விக்கப்பட்டது