ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்ட் மேன் மற்றும் தி வாஸ்ப் என்பது மார்வெல் காமிக்ஸ் பாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட ஒரு 2018 அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும்.

மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த இப்படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் விநியோகித்தது. இது 2015ல் வெளிவந்த ஆன்ட்-மேன் படத்தின் தொடர்ச்சியே ஆகும். மார்வெல் சினிமா யுனிவர்ஸ் (MCU) தயாரித்த இருபதாவது படம் இது ஆகும். இந்தப் படம் பேய்டன் ரீட்டால் இயக்கப்பட்டது. கிறிஸ் மெக்கேன்னா,எரிக் சோமர்ஸ், பால் ரூத், ஆண்ட்ரூ பாரேர் மற்றும் கேப்ரியல் ஃபெராரி ஆகியோரின் எழுத்தாளர் குழுக்களால் எழுதப்பட்டது இப்படம். மைக்கேல் பெனா, வால்டன் கோக்கின்ஸ், பாபி கேன்னவேல், ஜூடி கிரீர், டேவிட் டஸ்ட்மல்சியான், ஹன்னா ஜான்-காமென், அப்பி ரைடர் போர்ட்சன், ராண்டல் பார்க், மைக்கேல் பிஃபீர், லாரன்ஸ் ஆகியோருடன் ரூத் லாங்கு எனும் கதாப்பாத்திரத்திலும் எவாங்லைன் லில்லி வான் டெய்ன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

ஆண்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் திரைப்படம் ஜூன் 25, 2018 இல் ஹாலிவுட்டில் உலக அளவில் வெளியிடப்பட்டது. ஜூலை 6, 2018 இல் அமெரிக்காவில் IMAX மற்றும் 3D இல் இப்படம் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதன் நகைச்சுவை மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது, குறிப்பாக ரூத் மற்றும் லில்லி ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. உலகளவில் $622 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது இப்படம்.

வரவேற்பு[தொகு]

திரைப்படத்தின் வசூல்[தொகு]

ஆண்ட் மேன் மற்றும் தி வாஸ்ப் திரைப்படம்  அமெரிக்கா மற்றும் கனடாவில் $216.6 மில்லியன் டாலர்கள் மற்றும் மற்ற பிராந்தியங்களில் $406 மில்லியன் டாலர்கள் என உலகளவில் மொத்தம் $ 622.7 மில்லியன் வசூலித்தது. [1] 2018 ஆம் ஆண்டின் பதினோராவது மிக அதிக வசூலை ஈட்டிய படமாக இது ஆனது. [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. D'Alessandro, Anthony (July 8, 2018). "'Ant-Man And The Wasp' Shrinks A Tick To $76M Opening, But Still 33% Bigger Than Original – Sunday Final". Deadline Hollywood. Archived from the original on July 9, 2018. Retrieved July 9, 2018.
  2. Bonomolo, Cameron (September 9, 2018). "Marvel Cinematic Universe Movies Pass $4 Billion at Box Office in 2018". Comicbook.com. Archived from the original on September 10, 2018. Retrieved September 10, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]