பிளேடு (வரைகதை)
பிளேடு | |
---|---|
![]() | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோன்றியது | 'தி டோம்ப் ஆஃப் டிராகுலா' #10 (ஜூலை 1973) |
உருவாக்கப்பட்டது | மார்வ் வோல்ஃப்மேன் ஜீன் கோலன் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | எரிக் புரூக்சு |
இனங்கள் | தம்பீர் |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் நைட்ஸ்டாக்கர்கள் |
திறன்கள் |
|
பிளேட் அல்லது பிளேடு (ஆங்கில மொழி: Blade) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் மார்வ் வோல்ஃப்மேன் மற்றும் ஜீன் கோலன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். பிளாட்டின் முதல் தோற்றம் ஜூலை 1973 இல் வெளியான 'தி டோம்ப் ஆஃப் டிராகுலா #10' என்ற கதையில் துணை கதாபாத்திரமாக தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த கதைக்களத்துடன் தோற்றுவிக்கப்பட்டது.
இவர் காட்டேரிகளை வேட்டையாடுபவராக தனது தனித்துவமான திறமை மூலம் அனைத்து காட்டேரிகளையும் இவ் உலகைகில் இருந்து ஒழிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிளேடு என்ற பாத்திரத்திற்கு நடிகர் வெச்லி சினைப்சு என்பவர் உயிர் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டு முதல் பிளேடு, பிளேடு 2 மற்றும் பிளேடு 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்ச பின்னணியில் உருவாகி வரும் பிளேடு படத்தில் நடிகர் 'மஹர்ஷலா அலி' என்பவர் பிளேடு என்ற வேடத்தில் நடிக்க உள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- Blade at Marvel.com