ஆன்ட் மேன் (இசுகாட்காட் லாங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட் மேன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஇசுகாட் லாங்காக :
அவென்ஜர்ஸ் #181 (மார்ச் 1979)
ஆன்ட் மேன்:
மார்வெல் பிரீமியர் #47 (ஏப்ரல் 1979)
உருவாக்கப்பட்டதுடேவிட் மிச்செலினி
பாப் லேடன்
ஜான் பைர்ன்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஇசுகாட்காட் எட்வர்ட் கரிசு லாங்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பென்டாஸ்டிக் போர்
கார்டியன்சு ஒப் த கலக்சி
பங்காளர்கள்ஹாங்க் பிம்
வாஸ்ப்
கசாண்ட்ரா லாங்
நதியா வான் டைன்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்ஆன்ட் மேன்
திறன்கள்
 • சிறு உருவத்திலிருந்து 100 அடி பிரம்மாண்டமாக அளவு மாறுதல்
 • மேதை நிலை அறிவுத்திறன்
 • அவரது அளவை மாற்றும் திறனை மற்ற உயிரினங்கள் மற்றும் பொருட்களுக்கு மாற்றும் திறன்
 • சுருங்கிய நிலையில் இயல்பான அளவு வலிமையை பராமரிக்கிறது
 • எறும்புகளுடன் தொலைத்தொடர்பு
 • அதிமனித வலிமை, சகிப்புத்தன்மை, நீடித்து நிலைப்பு மற்றும் ராட்சத வடிவம்

ஆன்ட் மேன் (இசுகாட்காட் லாங்) (ஆங்கில மொழி: Ant-Man (Scott Lang)) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் டேவிட் மிச்செலினி, பாப் லேடன் மற்றும் ஜான் பைர்ன் ஆகியோரால், மார்ச் 1979 இல் வெளியான அவென்ஜர்ஸ் #181 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஆன்ட் மேன் பெயரைப் பயன்படுத்திய இரண்டாவது மீநாயகன் பாத்திரம் ஆகும்.

இவரின் கதாபாத்திரம் சீர்திருத்த திருடன் மற்றும் மின்னணுவியல் நிபுணராக, அவென்ஜர்ஸ், பென்டாஸ்டிக் போர் மற்றும் கார்டியன்சு ஒப் த கலக்சி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2015 இல் ஆன்ட் மேன் தொடரின் தலைப்புக் கதாபாத்திரமானார்.

இவர் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு முன்னாள் குற்றவாளி மற்றும் இயந்திர நிபுணராவார், தனது மகள் கசாண்ட்ரா "காஸ்ஸி" லாங்கை இதய நோயிலிருந்து இருந்து காப்பாற்ற எறும்பு மனிதன் உடையை திருடிய பிறகு ஆன்ட் மேன் ஆனார். தனது குற்ற வாழ்க்கையிலிருந்து சீர்திருத்தப்பட்ட லாங் என்பவர் காங்க் பிம்மின் உதவியுடன் இரண்டாவது முழுநேர ஆன்ட் மேன் வாழ்க்கையை மேற்கொண்டார்.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பால் ருத் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[1][2][3], ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (2023) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...?[4][5] என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. May 7, 2015. May 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Prepare yourself for Ant-Man & the Wasp" (in en). June 29, 2018. https://www.cnet.com/news/ant-man-and-the-wasp-release-date-cast-plot-and-rumors/. 
 3. Melas, Chloe (June 29, 2018). "Paul Rudd promises 'Ant-Man' is a break from the bleak news cycle". https://edition.cnn.com/2018/06/29/entertainment/paul-rudd-ant-man-and-the-wasp/index.html. 
 4. Hughes, William. "Marvel just released an extremely intriguing cast list for Disney+'s animated What If…?". A.V. Club. 21 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 5. Kit, Borys (November 3, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (EXCLUSIVE)". The Hollywood Reporter (ஆங்கிலம்). November 3, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]