அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
இயக்கம்ரூசோ சகோதரர்கள்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅவெஞ்சர்ஸ் ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
இசைஆலன் சில்வேஸ்ட்ரி
நடிப்பு
ஒளிப்பதிவுட்ரெண்ட் ஓப்பலொக்
படத்தொகுப்பு
  • ஜெஃப்ரி ஃபோர்டு
  • மத்தேயு ஷ்மிட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 23, 2018 (2018-04-23)(டால்பி தியேட்டர்)
ஏப்ரல் 27, 2018 (அமெரிக்கா)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$316–400 மில்லியன்
மொத்த வருவாய்$2.048 பில்லியன்[1]

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) என்பது 2018ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரைப்படத்தை அடுத்து மூன்றாவதாக வெளிவந்தது. இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் மூலம் ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், பெனடிக்ட் கம்பர்பேட்ச், டான் செடில், டாம் ஹாலண்ட், சட்விக் போஸ்மேன், பவுல் பெட்டனி, எலிசபெத் ஓல்சென், அந்தோனி மேக்கி, செபாஸ்டியன் ஸ்டான், டானாய் குரைரா, லெட்டிடியா ரைட், டேவ் பாடிஸ்டா, ஜோ சால்டா, ஜோஷ் ப்ரோலின், கிறிஸ் பிராட் உள்ளிட்ட பலர் நடிக்க, இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளார்கள். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச். அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) வெளியானது

இந்த திரைப்படம் முந்தைய திரைப்படங்களில் இடம்பெற்ற நவரத்தின கற்கள் என்ற சக்திவாய்ந்த கற்களை தானோஸ் கைப்பற்ற முயற்சிப்பதையும் அந்த முயற்சியை தடுக்க அவெஞ்சர்ஸ் மற்றும் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி என்ற விண்வெளி சூப்பர் ஹீரோ அமைப்புடன் இணைந்து போராடுவதை கதையாக கொண்டுள்ளது.

கதை சுருக்கம்[தொகு]

நேரம், சக்தி, ஆன்மா, உண்மை, விண்வெளி மற்றும் மனம் உள்ளிட்ட ஆறு அதியசயக் கற்களும் விண்வெளியில் ஆறு வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கற்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது என்ற நியதிப்படி இவை பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு கற்களையும் தன் வசப்படுத்தி உலகத்தையே ஆட்டிப் படைத்து அழிக்க நினைக்கிறார் தானோஸ். இந்த நவரத்தின கற்கள் உலகத்தில் இருக்கும் மக்கள் மட்டும் அல்லாது எல்லா கிரகத்திலும் இருக்கும் மக்கள் தொகையில் பாதி பேரை காணாமல் போகவைக்கும் வல்லமை உடையது. இந்த கற்களை அடையும் முயற்சியில் தானோஸ் விண்வெளியில் உள்ள எல்லா கிரகத்தையும் அழிக்கிறான். அந்த போரில் தோரின் விண்கப்பலும் தாக்கப்படுகின்றது. விண்வெளியில் உயிருக்கு போராடிக்கொன்று இருக்கும் தோரை கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி அமைப்பினரால் காப்பாற்றப்படுகிறான். விண்வெளியிலிருந்து தப்பித்து வந்த ப்ருஸ் பேனர் பூமியில் வைத்தியர். ஸ்டிரெஞ்ச் மற்றும் அயன் மேன் குழுவினரை சந்தித்து எச்சரிக்கிறார்.

அதே தருணம் தானோஸின் படையை சேர்ந்தவர்கள் பூமிக்கு வந்து தாக்கப்படும்போது வைத்தியர். ஸ்டிரெஞ்ச், அயன் மேன், ஸ்பைடர் மேன் ஆகியோர் தானோஸின் கிரகமான டைடன் செல்லும் விண்கப்பலில் மாட்டிக்கொள்கின்றனர். இந்தநிலையில் மனதில் கல்லை வைத்திருக்கும் விஷனை வகாண்டாவுக்கு அழைத்து சென்று அந்த அதிசயக் கல் கிடைக்க முடியாதபடி அழிக்க முடிவு செய்கின்றனர். தோர் தானோஸை வெல்ல சக்திவாய்ந்த ஒரு ஆயுத்தை உருவாக்க கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி அமைப்பை சேர்ந்த க்ரூட் மற்றும் ராக்கெட் ராக்கூன் உதவியுடன் நேட்விலார் கிரகத்துக்கு செல்கிறார் அங்கே தோரின் சக்திகளை ஒருங்கிணைக்கும் ஒரு ஆயுதத்தை உருவாக்குகிறார்

கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸியின் முயற்சி தானோஸ் ஆல் முறியடிக்கப்பட்டு ஸ்டார் லார்ட் நேசிக்கும் தானோஸின் மகள் கமோரா ஆன்மா கல் அடையும் முயற்சியில் கமோரா கொல்லப்படுகிறார். கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி மற்றும் அயன் மேன் குழுவினரால் தானோஸ்ஸை தோற்கடிக்கப்படவில்லை. நான்கு நவரத்தின கற்களின் உதவியுடன் அயன்மேன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அயன் மேனை காப்பாற்ற டாக்டர் ஸ்டிரெஞ்ச் காலத்தை கட்டுப்படுத்தும் நேர கல்லை கொடுக்கிறார்.

நேர கல் உதவியுடன் கேப்டன் அமெரிக்கா மற்றும் ப்ளாக் பாந்தர் குழுவினரை தோற்கடித்து அழிக்கப்பட்ட 6 வது நவரத்தின கற்கள்களை அடைகிறார், அவைகளின் சக்திகளுடன் எல்லா கிரகத்திலும் இருக்கும் பாதி மக்கள் தொகையை மறையவைக்கிறார். ஸ்டிரெஞ்ச், ஸ்பைடர் மேன் போன்று சக்திவாய்ந்த மனிதர்களில் குறிப்பிட்ட சிலரும் மறைந்துபோகின்றனர் , மக்கள் தொகையில் பாதி பேர் மறைந்து போகின்றனர்.

நடிகர்கள்[தொகு]

அடுத்த பாகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Avengers: Infinity War (2018)". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து April 21, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 14, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]