சீன் கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன் கன்
பிறப்புமே 22, 1974 (1974-05-22) (அகவை 49)
செயின்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா
கல்விடீபால் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
நடாஷா ஹாலேவி (தி. 2019)
உறவினர்கள்
 • ஜேம்ஸ் கன் (சகோதரர்)
 • மாட் கன் (சகோதரர்)
 • பிரையன் கன் (சகோதரர்)
 • மார்க் கன் (தந்தைவழி உறவினர்)
கையொப்பம்

சீன் கன் (ஆங்கில மொழி: Sean Gunn) (பிறப்பு: மே 22, 1974) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களில் 'கிராக்லின்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[1] இவர் இயக்குனர் ஜேம்ஸ் கன்னின் தம்பி மற்றும் பெரும்பாலும் அவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சீன் கன் 22 மே 1974 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கன், நடிகரும் அரசியல் எழுத்தாளருமான மாட்கன், திரைக்கதை எழுத்தாளர் பிரையன்கன், தயாரிப்பாளரும் கைவினைஞர் என்டர்டெயின்மென்ட் முன்னாள் நிர்வாக துணைத் தலைவருமான பேட்ரிக் மற்றும் வேலைவாய்ப்பு வழக்கறிஞராக பணிபுரியும் சகோதரியான பெத் ஆகியோரின் சகோதரர் ஆவார்.[2][3][4][5][6]

இவரின் பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஆவார்கள். இவர் 2019 ஆம் நடிகை மற்றும் திருப்பப்பட இயக்குனருமான 'நடாஷா ஹாலேவி' என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. James Gunn in "James Gunn Reveals New Details on Guardians of the Galaxy". Pointless Podcast via ComingSoon.net. February 20, 2014 இம் மூலத்தில் இருந்து March 11, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160311185250/http://www.comingsoon.net/movies/news/115119-james-gunn-reveals-new-details-on-guardians-of-the-galaxy. 
 2. "Sean Gunn". TVGuide.com. https://web.archive.org/web/20170502210203/http://www.tvguide.com/celebrities/sean-gunn/bio/174114/ from the original on May 2, 2017. Retrieved May 2, 2017. {{cite magazine}}: |archive-url= missing title (help)
 3. Gunn, James (July 5, 2015). "My brother Brian's dream about....". Twitter. https://twitter.com/jamesgunn/status/617789201459888128. 
 4. Patrick Gunn profile, qualiacapital.com; accessed December 4, 2014.
 5. Gunn, James (December 21, 2014). "My sister Beth gave me....". Twitter. https://twitter.com/jamesgunn/status/546750656300593152. 
 6. "Beth Gunn | Gunn Coble | California Employment Lawyer" (in en). http://www.gunncoble.com/beth-gunn. 
 7. Strohm, Emily (July 22, 2019). "Gilmore Girls' Sean Gunn Marries Actress Natasha Halevi — Inside Their Picnic Wedding Ceremony!". People.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன்_கன்&oldid=3482437" இருந்து மீள்விக்கப்பட்டது