மார்க் ருஃப்பால்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் ருஃப்பால்லோ
பிறப்புமார்க் ஆலன் ருஃப்பால்லோ
நவம்பர் 22, 1967 ( 1967 -11-22) (அகவை 56)
விஸ்கான்சின், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
சன்ரைஸ் கோய்க்னி (2000–அறிமுகம்)
பிள்ளைகள்3

மார்க் ஆலன் ருஃப்பால்லோ (ஆங்கில மொழி: Mark Alan Ruffalo) (பிறப்பு: நவம்பர் 22, 1967) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1990 களின் முற்பகுதியில் நடிக்கத் தொடங்கினார். கென்னத் லோனெர்கனின் மேடை நாடகமான திஸ் இஸ் எவர் யூத் (1998) மற்றும் யூ கேன் கவுண்ட் ஆன் மீ (2000) போன்ற நாடகங்களின் மூலம் இவருக்கு முதன் முதலில் நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அதை தொடர்ந்து ஜஸ்ட் லைக் ஹெவன் (2005), ஷட்டர் ஐஸ்லாந்து (2010), போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), தோர்: ரக்னராக்[1] (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் டோனி புரூஸ் பேனர் / ஹல்க்[2] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ருஃப்பால்லோ&oldid=3190000" இருந்து மீள்விக்கப்பட்டது