கேப்டன் மார்வெல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் மார்வெல்
இயக்கம்அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்
தயாரிப்புகேவின் பிகே[1]
மூலக்கதைகேப்டன் மார்வெல் (ஸ்டான் லீ)
கரோல் டான்வர்ஸ் (ராய் தாமஸ், ஜீன் கோலன்)
திரைக்கதை

கதை

இசைபினார் தொப்ராக்
நடிப்பு
ஒளிப்பதிவுபென் டேவிஸ்
படத்தொகுப்புஎலியட் கிரகாம்
தெப்பி பெர்மன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 27, 2019 (2019-02-27)(லண்டன்)
மார்ச்சு 8, 2019 (அமெரிக்கா)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$152–175 மில்லியன்
மொத்த வருவாய்$1.128 பில்லியன்[3]

கேப்டன் மார்வெல் (ஆங்கில மொழி: Captain Marvel) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு பெண்[4] மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேரோல் டான்வெர்ஸ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ்[5] என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஒன்றாவது திரைப்படமும் ஆகும். இப்படம் கேவின் பிகே[6][7] என்பவர் தயாரிப்பில் அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[8] ஆகியோர் இயக்கத்தில் பிரி லார்சன், சாமுவேல் எல். ஜாக்சன், பென் மெண்டல்சோன், திஜிமோன் கவுன்சோ, லீ பேஸ், இலக்‌சனா இலிஞ்சு, ஜெம்மா சான், அன்னெட் பெனிங், கிளார்க் கிரெக் மற்றும் ஜூட் லோ ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி கேப்டன் மார்வெல் என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.

இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஐக்கிய அமெரிக்காவில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான மீநாயகன் படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக[9] அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக லார்சனின் நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தி மார்வெல்ஸ் என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதைக்களம்[தொகு]

இந்த திரைப்படத்தின் கதை ஹலா என்ற கிரகத்தில் வசிக்கும் கெரோல் டென்வெர்ஸ் (பிரி லார்சன்) என்பவருக்கு அவரது கடந்தகாலம் பற்றிய எந்த நினைவும் இல்லை. அடிக்கடி கனவுகளில் தன் கடந்தகாலம் பற்றிய அரைகுறை நினைவுகளை மட்டுமே காண்கிறார். அதே கிரகத்தில் வசிக்கும் கிரீ என்ற இனத்தின் உயரதிகாரியான யோன்-ரோக் என்பவர் சக்திகளை கட்டுப்படுத்துவது குறித்து வெர்ஸுக்கு பயிற்சி அளிக்கிறார்.

கிரீ இனத்தின் முதன்மை எதிரிகளான இஸ்க்ரல் என்ற இனத்தினரை தாக்க யோன்-ரோக் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது. அதில் வெர்ஸும் அடங்கும். அந்த தாக்குதலில் இஸ்க்ரல்கள் வெர்ஸை கடத்தி சென்று விடுகிறனர். அவருடைய கடந்தகால நினைவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட முயற்சிக்கும் இஸ்க்ரல்களிடமிருந்து தப்பிச்சு ஒரு சிறிய விண்கலத்தை பிடித்து வெர்ஸ் பூமிக்கு வருகிறார். பின்னர் அங்கு ஷில்ட் ஏஜண்ட் குழுவில் பணிபுரியும் நிக் ப்யூரி (சாமுவேல் எல். ஜாக்சன்) என்பவரை சந்திக்கும் வெர்ஸ் தன்னை ஏன் இஸ்க்ரல் இனம் துரத்துகிறது? தன்னுடைய கடந்த காலத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? தனக்கு மீநாயகன் சக்தி எப்படி கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் வெர்ஸ் தேடும் விடைதான் கேப்டன் மார்வெல் என்ற திரைப்படம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • பிரி லார்சன்[10] - கெரோல் டென்வெர்ஸ் / கேப்டன் மார்வெல்
    • ஐக்கிய அமெரிக்க வான்படை போராளி, ஒரு விபத்து காரணமாக பச்சை இனத்தை சேர்த்த பெண் மூலம் அதி சக்தி கிடைக்கின்றது. இந்த சக்தி மூலம் விண்வெளியில் எந்த ஒரு கவசமும் இல்லாமல் பயணம் செய்வது, நெருப்பு கதிர் விச்சு சக்தி, பராக்கு சக்தி மற்றும் மிக வலிமையானவர். இவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்கின்றார்.

இசை[தொகு]

பினார் தொப்ராக் என்பவர் ஜூன் 2018 இல் இந்த படத்தின் இசையமைப்பாளராக கையெழுத்திட்டார். இவர் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் வரலாற்றில் இசை அமைக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brown, Tracy (June 29, 2015). "Kevin Feige on how Marvel's new Spider-Man will be different, and missing Comic-Con". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/herocomplex/la-et-hc-kevin-feige-spider-man-civil-war-20150629-story.html. 
  2. Watercutter, Angela (July 10, 2015). "Writing Captain Marvel Is Much Harder Than Penning Guardians of the Galaxy". Wired. https://www.wired.com/2015/07/nicole-perlman-captain-marvel/. 
  3. "Captain Marvel (2019)". https://www.boxofficemojo.com/movies/?id=marvel2018a.htm. 
  4. Goldberg, Matt (October 8, 2015). "'Captain Marvel' Co-Writer Meg LeFauve on Approaching a Powerful Female Superhero". https://collider.com/captain-marvel-movie-writer-talks-superhero-challenges/. 
  5. Dinh, Christine (March 26, 2018). "Production Underway on Marvel Studios' 'Captain Marvel'". https://news.marvel.com/movies/86686/production-underway-marvel-studios-captain-marvel/. 
  6. Starnes, Joshua (July 24, 2016). "Comic-Con: Kevin Feige, Directors and Stars on the Marvel Cinematic Universe". https://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1. 
  7. Schwartz, Terri (October 12, 2016). "Why Hiring A Female Director For Captain Marvel Is Important To Kevin Feige". https://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige. 
  8. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (Exclusive)". Variety. https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/. 
  9. Coogan, Devan (September 18, 2018). "First Captain Marvel trailer introduces Brie Larson's high-flying hero". Entertainment Weekly. https://ew.com/movies/2018/09/18/captain-marvel-trailer/. 
  10. Buchanan, Kyle (October 21, 2016). "Kevin Feige Says Brie Larson's Captain Marvel Will Be the Strongest Superhero Yet". Vulture. https://www.vulture.com/2016/10/captain-marvel-movie-director-kevin-feige.html. 
  11. Ramos, Dino-Ray (October 24, 2017). "Ben Mendelsohn in Negotiations For Villain Role In 'Captain Marvel'". https://deadline.com/2017/10/ben-mendelsohn-captain-marvel-skrulls-villain-marvel-cinematic-universe-mcu-brie-larson-1202194192/. 
  12. Kroll, Justin (October 24, 2017). "Ben Mendelsohn Eyed for Villain Role in 'Captain Marvel' (Exclusive)". Variety. https://variety.com/2017/film/news/ben-mendelsohn-captain-marvel-villain-1202598360/. 
  13. Galuppo, Mia (March 16, 2018). "Lashana Lynch Replacing DeWanda Wise in 'Captain Marvel' (Exclusive)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/captain-marvel-lashana-lynch-replacing-dewanda-wise-1094066. 

வெளி இணைப்புகள்[தொகு]