தி அமேசிங் இசுபைடர்-மேன் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி அமேசிங் இசுபைடர்-மேன் 2
Spider-Man upside down on the side of the OsCorp tower with the film's title, credits and release date below.
Theatrical release poster
இயக்கம்மார்க் வெப்
தயாரிப்பு
திரைக்கதை
  • அலெக்ஸ் குர்ட்ஸ்மேன்
  • ராபர்டோ ஓர்சி
  • ஜெஃப் பிங்க்னர்
இசை
  • ஹான்ஸ் சிம்மர்
  • பாரல் வில்லியம்ஸ்
  • ஜான்னி மார்
  • மைக் ஐன்சிகர்
  • ஜன்கி எக்ஸ்எல்
  • ஸ்டீவ் மஸ்ஸாரோ
  • ஆண்ட்ரூ கவ்சின்ஸ்கி
நடிப்பு
ஒளிப்பதிவுடான் மைண்டெல்
படத்தொகுப்புபியட்ரோ ஸ்காலியா
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுஏப்ரல் 18, 2014 (2014-04-18)(மெக்சிக்கோ)
மே 2, 2014 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்141 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200–293 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$709 மில்லியன்[4]

தி அமேசிங் இசுபைடர்-மேன் 2 (The Amazing Spider-Man 2)[5] என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது இசுபைடர் மேன் என்ற மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

இது 2012 ஆம் ஆண்டு வெளி வந்த தி அமேசிங் இசுபைடர்-மேன் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியானது.[6] இந்த படத்தை மார்க் வெப் என்பவர் இயக்கியுள்ளார், அலெக்ஸ் குர்ட்ஸ்மேன், ராபர்டோ ஓர்சி மற்றும் ஜெஃப் பிங்க்னர் அகியோரின் திரைக்கதையில் ஆண்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், ஜேமி போஸ், டேன் டிஹான், காம்ப்பெல் ஸ்காட், எம்பேத் டேவிட்ஜ், கோல்ம் ஃபியோர், பால் கியாமட்டி மற்றும் சாலி பீல்ட் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த படம் 2டி, 3டி மற்றும் ஐமாக்ஸ் 3டி இல் அமெரிக்காவில் மே 2, 2014 அன்று வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 வரை இரண்டு சர்வதேச வெளியோடு நடைபெற்றன. இப்படமானது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 709 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஒன்பதாவது படமாக அமைந்தது, அதே தருணம் இன்றுவரை மிகக் குறைந்த வசூல் செய்த நேரடி இசுபைடர் மேன் இதுவாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

பீட்டரின் தந்தை ஒரு மருந்தை கண்டு பிடிகிற்றார். இவர் கண்டுபிடித்த அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் தன்னுடைய கண்டுபிடிப்பை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். ஒருவிபத்தில் இறந்தும் போகிறார். இந்நிலையில், பீட்டர், வளர்ந்து பெரியவனாகிறான். ஸ்பைடர்மேனாக மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பீட்டருடைய அப்பா வேலை செய்த ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரானிக் என்ஜினியராக பணியாற்றி வரும் மேக்ஸ், தவறுதலாக அங்கிருந்த ஒரு ஆராய்ச்சி நீர்த்தொட்டிக்குள் விழுந்து விடுகிறார். இதனால் அவர் ஒரு மின்சார மனிதனாக உருவெடுக்கிறார்.

இந்த நிலையில் பீட்டரின் சிறுவயது நண்பன் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரின் மகனுமான டேன் டிஹான் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். இதற்கு மாற்று மருந்தாக பீட்டருடைய அப்பா, ஆராய்ச்சி செய்து வைத்திருந்த மருந்து பற்றி கேள்விப்படுகிறான். அது மர்மமான இடத்தில் மறைக்கப்பட்டிருப்பதை அறியும் அவன், அதை மேக்ஸின் உதவியுடன் கைப்பற்றுகிறான். அந்த மருந்தை தன் உடம்பில் ஏற்றிக்கொள்ளும் ஆராய்ச்சி மைய தலைவரின் மகன் வித்தியாசமான தோற்றத்துடன் உருவெடுக்கிறான். இருவரும் சேர்ந்து ஸ்பைடர் மேனை கொல்ல முடிவெடுக்கின்றனர். இதற்காக இவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை ஸ்பைடர் மேன் முறியடித்து மக்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கிறார். இறுதி கண்டயுத்தத்தில் பீட்டரின் காதலி எம்மா ஸ்டோன் இறக்க, வில்லனான டேன் டிஹான் கைது செய்யப்படுகின்றான்.

நடிகர்கள்[தொகு]

நடிகர்களின் நடிப்பு[தொகு]

ஸ்பைடர் மேனாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ கார்பீல்டு துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எதிரிகளிடம் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி எம்மா ஸ்டோன் நாயகனுடன் காதல் செய்யும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் திறமையாக நடித்திருக்கிறார். நண்பர் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் டேன் டிஹான் தனது கதாபாத்திரத்தை நன்றாக நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]