மென் இன் பிளாக் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மென் இன் பிளாக் 2
இயக்கம்பாரி சோனென்ஃபெல்டு
தயாரிப்பு
  • வால்டர் எஃப். பார்க்சு
  • லாரி மெக்டொனால்டு
திரைக்கதை
  • ராபர்ட் கோர்டன்
  • பாரி ஃபனாரோ
இசைடேனி எல்ப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரெக் கார்டினர்
படத்தொகுப்பு
  • ரிச்சர்ட் பியர்சன்
  • இசுடீவன் வெய்ஸ்பெர்க்
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசூலை 3, 2002 (2002-07-03)
ஓட்டம்88 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்
மொத்த வருவாய்$441.8 மில்லியன்

மென் இன் பிளாக் 2 (Men in Black 2)[1] என்பது 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாரி சோனென்ஃபெல்டு இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டு வெளியான மென் இன் பிளாக் திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதையை அடிப்படையாக கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் உடன் இணைந்து ஆம்ப்ளின் என்டர்டெயின்மென்ட்டு மற்றும் பார்க்சு/மெக்டொனால்ட் புரொடக்சன்சு போன்ற நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

வால்டர் எஃப். பார்க்சு மற்றும் லாரி மெக்டொனால்டு ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் டொமி லீ ஜோன்சு, வில் சிமித், லாரா ஃபிளின் பாயில், ஜானி நாக்ஸ்வில்லே, ரொசாரியோ டாசன், டோனி சல்ஹூப் மற்றும் ரிப் டோன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஏஜென்ட் ஜே மென் இன் பிளாக் நிறுவனத்தில் ஏஜென்ட் கேவைக் கண்டுபிடித்து மீண்டும் நிறுவனத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பூமியில் பாதுகாப்புக்கான சமீபத்திய அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்பது ஏஜென்ட் கே க்கு மட்டுமே தெரியும் என்பதாகும்.

மென் இன் பிளாக் 2 படம் ஜூலை 3, 2002 அன்று கொலம்பியா பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியாகி, விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் $441.8 மில்லியனுக்கு அதிகமாக வசூலித்தது.[2][3] இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து 2012 இல் மென் இன் பிளாக் 3 மற்றும் 2019 இல் மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் ஆகியவை வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்_இன்_பிளாக்_2&oldid=3304520" இருந்து மீள்விக்கப்பட்டது