பிளேடு 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேடு 3
இயக்கம்டேவிட் எஸ். கோயர்
தயாரிப்பு
கதைடேவிட் எஸ். கோயர்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
படத்தொகுப்பு
  • கான்ராட் இசுமார்ட்
  • ஹோவர்ட் ஈ. இசுமித்
கலையகம்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுதிசம்பர் 8, 2004 (2004-12-08)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்
மொத்த வருவாய்$132 மில்லியன்

பிளேடு 3 அல்லது பிளேட் 3 (ஆங்கில மொழி: Blade 3) என்பது 2004 ஆம் ஆண்டு டேவிட் எஸ். கோயர்[1] என்பவர் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து நியூ லைன் சினிமா, மார்வெல் என்டர்பிரைசசு, ஆமென் ரா பிலிம்ஸ், ஷான் டேனியல் புரொடக்சன்சு லிமிடெட் மற்றும் இமேஜினரி போர்சஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க, நியூ லைன் சினிமா என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.[2]

இந்த திரைப்படத்தில் வெச்லி சினைப்சு,[3] கிறிசு கிறிஸ்டோபர்சன், ஜெசிக்கா பைல்,[4] ரையன் ரெனால்ட்சு,[5] பார்க்கர் போஸி, நடாஷா லியோன், டோமினிக் புருசெல் மற்றும் டிரிபிள் எச் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப் படமானது 2002 ஆம் ஆண்டு வெளியான பிளேடு 2 என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியான மற்றும் இறுதி படமாகும். மனிதர்களுக்கும் காட்டேரிகளுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. இருப்பினும் மனித காட்டேரி கலப்பின பிளேடு மற்றும் ரத்தவெறி கொண்ட தோழர்களை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் உறுதியாக இருக்கும் காட்டேரி தலைவர் டானிகா டாலோஸால் என்பவர் எண்ணற்ற கொலைககளை செய்கிறான். இதனால் பிளேடு காட்டேரி வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து மனிதகுலத்தை தனது சவாலான எதிரியிலிருந்து காப்பற்ற போராடுகிறான்.

பிளேடு 3 படம் 8 திசம்பர் 2004 அன்று வெளியாகி, உலகளவில் $132 மில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்தது. மார்வெல் 2012 இல் கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமையை மீண்டும் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேடு_3&oldid=3574108" இருந்து மீள்விக்கப்பட்டது