பிளேடு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேடு 2
இயக்கம்கில்லெர்மோ டெல் டோரோ
தயாரிப்பு
கதைடேவிட் எஸ். கோயர்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
  • வெச்லி சினைப்சு
  • கிறிசு கிறிஸ்டோபர்சன்
  • ரோன் பெர்ல்மேன்
  • லியோனர் வரேலா
  • நார்மன் ரீடஸ்
  • லூக் கோஸ்
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
படத்தொகுப்புபீட்டர் அமுண்ட்சன்
கலையகம்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுமார்ச்சு 22, 2002 (2002-03-22)
ஓட்டம்117 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$54 மில்லியன்
மொத்த வருவாய்$155 மில்லியன்

பிளேடு 2 அல்லது பிளேட் 2 (ஆங்கில மொழி: Blade 2) என்பது 2002 ஆம் ஆண்டு இயக்குனர் கில்லெர்மோ டெல் டோரோ இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திகில் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் என்டர்பிரைசசு, ஆமென் ரா பிலிம்ஸ் மற்றும் இமேஜினரி போர்சஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க, நியூ லைன் சினிமா என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இந்த திரைப்படத்தில் வெச்லி சினைப்சு,[2] கிறிசு கிறிஸ்டோபர்சன், ரோன் பெர்ல்மேன், லியோனர் வரேலா, நார்மன் ரீடஸ் மற்றும் லூக் கோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 1998 ஆம் ஆண்டு வெளியான பிளேடு திரைப்படத்தின் தொடர்ச்சியாக, மனித காட்டேரி கலப்பினத்தவறான பிளேடு மனிதர்களை காட்டேரிகளிடமிருந்து பாதுகாக்கும் தனது தொடர்ச்சியான முயற்சியை தொடர்கிறார். காட்டேரி மற்றும் மனித இனங்கள் இரண்டையும் உலகளாவில் இனப்படுகொலையில் ஈடுபட விரும்பும் பிறழ்ந்த காட்டேரிகளின் குழுவிற்கு எதிராக கடுமையான போரில் தன்னை அர்பணிக்கின்றார்.

பிளேடு 2 படம் 22 மார்ச் 2002 அன்று வெளியாகி, உலகளவில் $155 மில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்து விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் மூன்றாவது பாகம் 2004 இல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BLADE II (18)". British Board of Film Classification. March 19, 2002. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
  2. Bill Higgins (April 1, 2002). "A party with a bite". Variety. https://variety.com/2002/scene/vpage/a-party-with-a-bite-1117864777/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேடு_2&oldid=3318638" இலிருந்து மீள்விக்கப்பட்டது