பிளாக் பான்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளாக் பான்தர்
Black Panther
200px
இயக்கம்ரையன் கூக்ளர்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுRachel Morrison
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 29, 2018 (2018-01-29)(டால்பி திரையரங்கம்)
பெப்ரவரி 16, 2018 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்134 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$1.347 மில்லியன்[4]

பிளாக் பாந்தர் (Black Panther) என்பது அதே பெயரில் உள்ள மார்வெல் காமிக்ஸின் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு 2018 அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸால் விநியோகிக்கபட்ட இப்படம், மார்வெல் சினிமா யுனிவர்ஸின் (MCU) பதினெட்டாம் படம் ஆகும். இப்படத்தை ரியான் கூக்லர் இயக்கினார். இவரே ஜோ ராபர்ட் கோலுடன் சேர்ந்து திரைக்கதையும் எழுதினார். இப்படத்தில் சாட்விக் போஸ்மேன், மைக்கேல் பி. ஜோர்டான், லுபிட்டா யாங்க் , டானை குரைரா, மார்டின் பிறீமன், டேனியல் கலூயா, லெட்டீசியா ரைட், வின்ஸ்டன் டியூக், அங்கேலா பாஸ்ஸெட், பாரஸ்ட் விடேக்கர், மற்றும் ஆண்டி சேர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல் அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர்.

பிளாக் பான்தர் படம் பல விருதுகளைப் பெற்றது . சிறந்த திரைப்படம் , சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவு உட்பட 91 வது அகாடமி விருதுகளில் ஏழு பரிந்துரைகள் கிடைத்தன. பிளாக் பாந்தர் சிறந்த படம் என்று பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ படம், அத்துடன் அகாதமி விருதை வென்ற முதல் மார்வல் படம் ஆகும். இத்திரைப்படம் 76 வது கோல்டன் குளோப் விருதுகளில் மூன்று பரிந்துரைகள், 25 வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் 24 வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளில் (மூன்று வெற்றி பெற்றது) பன்னிரண்டு பரிந்துரைகளும் பெற்றன.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

திரையிடல் மற்றும் வரவேற்பு[தொகு]

பிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல், 2D, 3D, IMAX மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில், அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[5] இத்திரைப்படம் இயக்கம், திரைக்கதை, நடிப்பு (குறிப்பாக போஸ்மேன், ஜோர்டான் மற்றும் ரைட்), ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடமிருந்து வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர். அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிளாக் பன்தர் பெற்றது. இது உலகளவில் 1.35 பில்லியன் டாலர் வசூலித்து பெரும் சாதனையை செய்தது.

வசூல்[தொகு]

பிளாக் பாந்தர் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் 700.1 மில்லியன் டாலர்கள் மற்றும் பிற நாடுகளில் 646.9 மில்லியன் டாலர்கள் என உலகளாவிய மொத்தமாக $1.347 பில்லியன் வசூலை ஈட்டியது. அதன் திரையரங்கு ஓட்டத்தின் போது, அது மிக அதிக வசூல் செய்த தனி சூப்பர்ஹீரோ வெற்றிப்படமாக அமைந்து, [6] மூன்றாவது அதிகமான வசூல் செய்த எம்.சி.யு. படமாகவும் அமைந்தது. [7] எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. [8] ஒரு கருப்பு இயக்குனர் இயக்கத்தில் மிக அதிக வசூல் ஈட்டிய படமாக இது அமைந்தது. இப்படம் $1 பில்லியனைத் தாண்டிய ஐந்தாவது மார்வெல் ஸ்டுடியோஸ் படம். [9] [10]டெட்லைன் ஹாலிவுட் இப்படத்தின் நிகர லாபத்தை $476.8 மில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. இது 2018ன் அதிக மதிப்புள்ள திரைப்படத்தின் பட்டியலில் பிளாக் பான்தருக்கு இரண்டாம் இடத்தை அளித்தது.

விருதுகள்[தொகு]

பிளாக் பாந்தர் படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் பல விருதுகளை வென்றுக் குவித்தது. பிளாக் பாந்தர் அகாதமி விருதுகளில் சிறந்த படம் என்று பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ படம், அத்துடன் அகாதமி விருதை வென்ற முதல் மார்வல் படம் ஆகும். பிளாக் பந்தர் பரிந்துரைக்கப்பட்ட விருதுகளின் பட்டியல்:

 • சிறந்த படம் உட்பட ஏழு அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்றில் வென்றது.[11]
 • ஒரு அமெரிக்க இசை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.[12]
 • ஒன்பது பிளாக் எண்டர்டெய்ன்மென்ட் டிவி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதிலஇரண்டில் வென்றது .[13]
 • ஒரு பில்போர்டு இசை விருதுக்கு பரிந்த்ரைக்கப்பட்டது.[14]
 • ஒரு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.[15]
 • பன்னிரண்டு விமர்சகர்கள் 'சாய்ஸ் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் மூன்றில் வென்றது.[16]
 • மூன்று தங்க குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[17]
 • எட்டு கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டில் வென்றது.[18]
 • ஏழு எம் டிவி மூவி & டிவி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நான்கில் வெற்றியடைந்தது.[19]
 • பதினாறு NAACP பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பத்தில் வெற்றியடைந்தது.[20]
 • ஐந்து மக்கள் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டில் வென்றது.[21]
 • பதினான்கு சனி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஐந்தில் வென்றது.[22][23]
 • இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவ்விரண்டிலும் வென்றது.[24]
 • பதினோரு டீன் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்றில் வென்றது.[25]
 • எம் டிவி வீடியோ மியூசிக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.[26]

குறிப்புகள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BBFC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; VarietyCoverStory என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DeadlineProfitAnalysis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BOM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. D'Alessandro, Anthony (பிப்ரவரி 20, 2018). "'Black Panther' Goes Wild: At $242M Superhero Owns 2nd Best 4-Day Opening & Defeats 'Last Jedi' – Update". Deadline Hollywood. Archived from the original on பிப்ரவரி 21, 2018. Retrieved பிப்ரவரி 20, 2018.
 6. Tartaglione, Nancy (மார்ச்சு 25, 2018). "'Pacific Rim: Uprising' Tops $150M In Global Bow; 'Black Panther' Now #1 Solo Superhero Movie WW – International Box Office". Deadline Hollywood. Archived from the original on மார்ச்சு 26, 2018. Retrieved மார்ச்சு 26, 2018.
 7. McClintock, Pamela (மார்ச்சு 24, 2018). "Box Office: 'Black Panther' Becomes Top-Grossing Superhero Film of All Time in U.S." The Hollywood Reporter. Archived from the original on சூன் 7, 2018. Retrieved சூன் 7, 2018.
 8. McClintock, Pamela (ஏப்ரல் 30, 2018). "'Avengers: Infinity War' Box Office: What Fueled the Movie's Record Opening". The Hollywood Reporter. Archived from the original on மே 1, 2018. Retrieved மே 1, 2018.
 9. Mendelson, Scott (மார்ச்சு 25, 2018). "Box Office: 'Black Panther' Tops 'Last Jedi' And 'Avengers'". Forbes. Archived from the original on சூன் 18, 2018. Retrieved சூன் 18, 2018.
 10. Easter, Makeda (மார்ச்சு 21, 2018). "'Black Panther' breaks another record, becoming the most tweeted-about film of all time". Los Angeles Times. Archived from the original on அக்டோபர் 22, 2018. Retrieved அக்டோபர் 22, 2018.
 11. https://variety.com/2019/film/news/2019-oscars-winners-list-academy-awards-1203145638/
 12. https://www.hollywoodreporter.com/lists/american-music-awards-full-list-winners-2018-1146665
 13. https://deadline.com/2018/06/bet-awards-full-winners-list-black-panther-ryan-coogler-cardi-b-jamie-foxx-tiffany-haddish-1202416484/
 14. https://www.billboard.com/articles/news/bbma/8343598/billboard-music-awards-2018-nominations-list
 15. https://deadline.com/2019/02/2019-bafta-awards-winners-list-1202553890/
 16. https://variety.com/2019/film/awards/2019-critics-choice-awards-winners-nominees-full-list-1203106702/
 17. https://variety.com/2018/film/news/golden-globe-nominations-2019-1203082075/
 18. https://variety.com/2019/music/news/2019-grammys-winners-list-1203131935/
 19. https://www.hollywoodreporter.com/lists/mtv-movie-tv-awards-2018-winners-complete-list-1110774
 20. https://deadline.com/2019/03/naacp-image-awards-2019-winners-list-1202585472/
 21. https://www.hollywoodreporter.com/lists/2018-peoples-choice-awards-winners-complete-list-winners-1153630
 22. https://variety.com/2018/film/news/saturn-awards-nominations-2018-black-panther-walking-dead-1202727752/
 23. https://deadline.com/2018/06/saturn-awards-winners-black-panther-blade-runner-2049-shape-of-water-get-out-1202418606/
 24. https://variety.com/2019/film/awards/2019-sag-awards-winners-list-1203119846/
 25. https://www.hollywoodreporter.com/lists/teen-choice-awards-2018-full-list-winners-1134169
 26. https://ew.com/music/2018/08/20/mtv-vmas-2018-winners-list/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாக்_பான்தர்&oldid=3042290" இருந்து மீள்விக்கப்பட்டது