மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வகை மீநாயகன்
மூலம்மார்வெல் காமிக்ஸ்
நடிப்பு
 • மார்வெல் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள்
 • மார்வெல் ஸ்டுடியோஸ் தொடர் நடிகர்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
சீசன்கள்
 • மார்வெல் தொலைக்காட்சி
 • 29 (12 தொடர்களில்)
எபிசோடுகள்
 • மார்வெல் தொலைக்காட்சி
 • 386
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • மார்வெல் தொலைக்காட்சி
 • ஆலன் ஃபைன்
 • ஸ்டான் லீ
 • ஜோ கஸ்ஸாடா
 • ஜிம் சோரி
 • ஜெஃப் லோப்
 • மார்வெல் ஸ்டுடியோஸ்
 • கேவின் பிகே
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்
 • மார்வெல் தொலைக்காட்சி
 • வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி
 • நெற்ஃபிளிக்சு
 • ஹுலு
 • மார்வெல் ஸ்டுடியோ
 • டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசை
 • மார்வெல் தொலைக்காட்சி
 • ஏபிசி
 • நெற்ஃபிளிக்சு
 • ஹுலு
 • ஃப்ரீஃபார்ம்
 • மார்வெல் ஸ்டுடியோஸ்
 • டிஸ்னி +
ஒளிபரப்பான காலம்
 • மார்வெல் தொலைக்காட்சி
(செப்டம்பர் 24, 2013 - அக்டோபர் 16, 2020)

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொடர்கள் என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க நாட்டு மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் மார்வெல் தொலைக்காட்சியை உருவாக்கிய பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் முதன்முதலில் தொலைக்காட்சிக்கு விரிவடைந்தது. அத்துடன் ஏபிசி நிறுவனத்துடன் கையொப்பம் செய்யப்பட்டு ஏபிசி ஸ்டுடியோஸ் மூலம் செப்டம்பர் 2013 முதல் அக்டோபர் 2020 வரை 12 தொடர்களை உருவாக்கியது. இவை ஏபிசி மற்றும் ஃப்ரீஃபார்ம் போன்ற தொலைக்காட்சியிலும் நெற்ஃபிளிக்சு மற்றும் ஹுலு போன்ற இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. முக்கிய ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டடுள்ளது. அவை 'மார்வெல் ஹீரோஸ்' தொடர் என குறிப்பிடப்பட்டன. நெற்ஃபிளிக்சு இணையத்துக்காக தயாரிக்கப்பட்ட தொடர் குழுவை "மார்வெல் நைட்ஸ்" தொடர் என்று அழைக்கப்பட்டது. ஃப்ரீஃபார்ம் மற்றும் ஹுலுவுக்காக இளம் வயதுவந்தோரை கவனம் செலுத்தி தொடர்கள் தயாரிக்கப்பட்டன. இது 2019 டிசம்பரில் மார்வெல் தொலைக்காட்சி மூடப்படுவதற்கு முன்னர் 'அட்வென்ச்சர் இன் ஃபியர்' தொடர் குழு என்று அழைக்கப்பட்டது.

திரைப்படங்களுக்குப் பின்னால் உள்ள தயாரிப்பு ஸ்டுடியோவான மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் டிஸ்னி+ என்ற கோரிய நேரத்து ஒளிதம் சேவைக்காக தங்கள் சொந்தத் தொடரைத் தயாரிக்கத் தொடங்கியது, இதில் முதலாவது தொடர் ஜனவரி 2021 இல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து குறைந்தது பதினொரு தொடர்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை படங்களிலிருந்து வரும் துணைக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றது. இவை மார்வெல் தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய பொருள் செலவை கொண்டுள்ளன, மேலும் மார்வெல் தொலைக்காட்சித் தொடர்கள் என்று இல்லாத வகையில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களுடன் ஒன்றோடொன்று இணைகின்றன.

மார்வெல் தொலைக்காட்சி[தொகு]

ஏபிசி தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவம் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[1] 1 22 செப்டம்பர் 24, 2013 - மே 13, 2014 ஏபிசி
2 செப்டம்பர் 23, 2014 - மே 12, 2015
3 செப்டம்பர் 29, 2015 - மே 17, 2016
4 செப்டம்பர் 20, 2016 - மே 16, 2017
5 டிசம்பர் 1, 2017 - மே 18, 2018
6 13 மே 10, 2019 - ஆகஸ்ட் 2, 2019
7 மே 27, 2020 - ஆகஸ்ட் 12, 2020
ஏஜென்ட் கார்ட்டர் 1 8 ஜனவரி 6, 2015 - பிப்ரவரி 24, 2015
2 10 ஜனவரி 19, 2016 - மார்ச் 1, 2016
இன்னஹுமன்ஸ் 1 8 செப்டம்பர் 29, 2017 - நவம்பர் 10, 2017

நெற்ஃபிளிக்சு தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவம் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
டேர்டெவில்[2] 1 13 ஏப்ரல் 10, 2015 நெற்ஃபிளிக்சு
2 மார்ச் 18, 2016
3 அக்டோபர் 19, 2018
ஜெசிகா ஜோன்ஸ்[3] 1 நவம்பர் 20, 2015
2 மார்ச் 8, 2018
3 ஜூன் 14, 2019
லூக் கேஜ் 1 செப்டம்பர் 30, 2016
2 ஜூன் 22, 2018
ஐயன் பிஸ்ட் 1 மார்ச் 17, 2017
2 10 செப்டம்பர் 7, 2018
தி டிபெண்டெர்ஸ் 1 8 ஆகஸ்ட் 18, 2017
தி புனிஷெர் 1 13 நவம்பர் 17, 2017
2 ஜனவரி 18, 2019

இளம் வயதுவந்தோருக்கான தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவம் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
ரன்வேஸ் 1 10 நவம்பர் 21, 2017 - ஜனவரி 9, 2018 ஹுலு
2 13 டிசம்பர் 21, 2018
3 10 டிசம்பர் 13, 2019
கிலோங்க் & டக்ஜ்ர் 1 10 ஜூன் 7, 2018 - ஆகஸ்ட் 2, 2018 ஃப்ரீஃபார்ம்
1 ஏப்ரல் 4, 2019 - மே 30, 2019

பயம் நிறைந்த சாகசத் தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவம் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
ஹெல்ஸ்ட்ரோம் 1 10 அக்டோபர் 16, 2020 ஹுலு

மார்வெல் ஸ்டுடியோஸ்[தொகு]

டிஸ்னி + தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவம் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
வாண்டாவிஷன் 1 6 ஜனவரி 15, 2021 - பிப்ரவரி 19, 2021 டிஸ்னி +
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் 1 6 மார்ச் 19, 2021 - ஏப்ரல் 23, 2021
லோகி 1 6 மே 2021
வாட் இப்...? 1 10
2 10
மிஸ். மார்வெல் 1
ஹவ்க்கி 1
மூன் நைட் 1
ஷீ-ஹல்க் 1
கேலக்ஸி ஹாலிடே ஸ்பெஷல் 1
சீக்ரெட் இன்வாஸின் 1
அயர்ன்ஹார்ட் 1
ஆர்மர் வார்ஸ் 1

மேற்கோள்கள்[தொகு]

 1. Littleton, Cynthia (August 28, 2012). "ABC orders Marvel 'S.H.I.E.L.D' pilot". Variety. மூல முகவரியிலிருந்து August 29, 2012 அன்று பரணிடப்பட்டது.
 2. "Steven S. DeKnight Joins 'Marvel's Daredevil'" (May 24, 2014). மூல முகவரியிலிருந்து May 24, 2014 அன்று பரணிடப்பட்டது.
 3. Couch, Aaron (November 12, 2013). "Melissa Rosenberg to Oversee Marvel's Jessica Jones Series for Netflix". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து June 28, 2014 அன்று பரணிடப்பட்டது.