கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்
Captain America: The First Avenger
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோ ஜான்ஸ்டன்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைகேப்டன் அமெரிக்கா
படைத்தவர் ஜோ சீமோன்
ஜாக் கிர்பி
திரைக்கதைகிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி
இசைஆலன் சில்வெஸ்ட்ரி
நடிப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 19, 2011 (2011-07-19)(El Capitan Theatre)
சூலை 22, 2011 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்
மொத்த வருவாய்$370.6 மில்லியன்

கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (ஆங்கில மொழி: Captain America: The First Avenger) இது 2011ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கிறிஸ் எவன்ஸ், டாமி லீ ஜோன்ஸ், ஹ்யூகோ வீவிங், செபாஸ்டியன் ஸ்டான், டெரெக் லூக்கா, டோமினிக் கூப்பர், ஸ்டான்லி துச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜூலை 19, 2011ஆம் ஆண்டு வெளியானது.

கதைக்களம் :[தொகு]

நிகழ்காலத்தில் ஆர்டிக் பனிக்கட்டி பகுதிகளில் இருந்து ஸ்டீவ் ரோஜர்ஸ் மீட்கப்படுகிறார். கடந்த காலத்தில் ஜோகன் என்ற ஜெர்மனிய அதிகாரி 1942 ல் டெசராகட் என்ற அதிசக்திவாய்ந்த பொருளை ஜெர்மனிய நார்வே பகுதியில் கைப்பற்றுகிறார். ஸ்டீவ் ரேஜர்ஸ் மெலிந்த சாதாரணமான மனிதராக இருந்தாலும் இராணுவத்தில் பணிபுரிய முயற்சி செய்கிறார். நிறைய முயற்சிகளை கடந்து ஆபிரகாம் என்ற மருத்துவர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஆபிரகாம் அவருடைய சோதனையின் மூலமாக சிறப்பான வலிமைவாய்ந்த மனிதரை உருவாக்கும் சோதனைக்கு ஸ்டீவ் ரோஜர்ஸை அவருடைய நல்ல மனதுக்காக தேர்ந்தெடுக்கிறார். இந்த சோதனை வெற்றியடைந்தாலும் ஹைட்ரா என்ற மோசமான அமைப்பின் சோதனையை தடுக்கும் முயற்சியில் அவருடைய வாழ்க்கையின் முடிவை சந்திக்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வலிமைமிக்க மனிதராக மாறினாலும் அவருடைய லட்சியத்தின்படி இராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படாமல் கேப்டன் அமேரிக்கா என்ற கற்பனை கதாநாயக பாத்திரத்தை நடிக்கவே அனுமதிக்கப்படுகிறார்

இத்தாலியில் யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் அவருடைய நண்பர் பார்னெஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு சிறைப்பகுதிகளில் இருந்து வெளியேற உதவுகிறார். அவருடைய பழைய அடையாள பெயருடனும் புதிய கவசத்துடனும் கேப்டன் அமேரிக்கா என்ற நிஜவாழ்க்கை கதாநாயகராக மாறுகிறார். ஜோகன் ரெட் ஸ்கல் என்ற பெயருடன் தலைவராக பணிபுரியும் மோசமான ஹைட்ரா அமைப்பின் பகுதிகளை இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கிறார். கடைசியாக ஜோகனின் முயற்சியை தடுக்க விமானத்தில் பயணிக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸுடனான மோதலில் டெசராக்ட்-ன் சக்தி வெளிப்பாட்டால் ஜோகன் மறைந்து போகிறார். அந்த விமானத்தினால் உருவாகப்போகும் சேதத்தை தவிர்க்க ஆர்டிக் பகுதியில் மோதுகிறார்.

நெடுங்கால உறக்க நிலையை கடந்து நிகழ்காலத்தில் நினைவு திரும்பும் ஸ்டீவ் ரோஜர்ஸை சந்திக்கும் பாதுகாப்பு அமைப்பை சார்ந்த நிக் ப்யூரி கடந்த 70 ஆண்டுகளாக ஸ்டீவ் ரோஜர்ஸ் உறக்க நிலையில் இருந்ததை சொல்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் நிலைமையை புரிந்துகொள்கிறார்.
மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]