லோகி (பருவம் 2)
லோகி (பருவம் 2) | |
---|---|
வகை | |
நடிப்பு | |
நாடு | அமெரிக்கா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிஸ்னி+ |
லோகி (பருவம் 2) (ஆங்கில மொழி: Loki (season 2)) என்பது மார்வெல் காமிக்சு கதாபாத்திரமான லோகி என்ற வரைகதை பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அமெரிக்க நாட்டு லோகி என்ற மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடரின் இரண்டாவது பருவம் ஆகும்.[1]
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த பருவத்தை மார்வெல் இசுடியோசு தயாரித்துள்ளது, எரிக் மார்ட்டின் தலைமை எழுத்தாளராக பணியாற்றுகிறார் மற்றும் ஜஸ்டின் பென்சன்[2] மற்றும் ஆரோன் மூர்ஹெட் ஆகியோர் இயக்கும் குழுவை வழிநடத்துகின்றனர்.
நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் என்பவர் திரைப்படத் தொடரில் இருந்து லோகி என்ற தனது பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்,[3][4] இவருடன் முதல் பருவத்தில் நடித்த குகு மபதா-ரா, யூஜின் கோர்டெரோ, ஓவன் வில்சன் மற்றும் சோபியா டி மார்டினோ ஆகியோரும் தங்கள் பாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர். இதன் இரண்டாம் பருவம் நவம்பர் 2020க்குள் உருவாக்கம் முடிவு செய்யப்பட்டு, ஜூலை 2021 இல் உறுதி செய்யப்பட்டது, அதை தொடர்ந்து மார்ட்டின், பென்சன் மற்றும் மூர்ஹெட் ஆகியோர் பிப்ரவரி 2022 இன் இறுதியில் பணியமர்த்தப்பட்டனர். பின்னர் ஜூன் 2022 இல் பைன்வுட் இசுடியோசுவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இரண்டாவது பருவம் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டிஸ்னி+ இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது ஆறு அத்தியாயங்களைக் கொண்டிருக்கும்.[5] இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும்.
நடிகர்கள்[தொகு]
- டாம் ஹிடில்ஸ்டன்[6][7] - லோகி
- குகு மபதா-ரா[8] - ரவோனா ரென்ஸ்லேயர்
- யூஜின் கோர்டெரோ - கேசி/ஹண்டர் கே-5இ
- ஓவன் வில்சன்[9] - மொபியஸ் எம். மொபியஸ்
- சோபியா டி மார்டினோ[10] - சில்வி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Laman, Douglas (November 5, 2020). "Disney+'s Loki Reportedly Renewed for a Second Season". Comic Book Resources. November 5, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 5, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kroll, Justin (February 17, 2022). "'Loki': Justin Benson And Aaron Moorhead Tapped As Season 2 Directors Of Marvel Series". Deadline Hollywood. February 17, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 17, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ramachandran, Naman (July 14, 2021). "'Loki' Will Return for Season 2 at Disney Plus, Marvel Reveals in Season 1 Finale". Variety. July 14, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 14, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Paige, Rachel (July 15, 2021). "'Loki' Will Return for Season 2 on Disney+". Marvel.com. July 15, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vary, Adam B. (July 23, 2022). "Marvel Studios' Phases 5 and 6: Everything We Learned at Comic-Con About the Multiverse Saga". Variety. July 24, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 24, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ellwood, Gregory (April 28, 2022). "Tom Hiddleston: "Lots Of Questions Will Be Answered" In 'Loki' Season 2 [Interview]". The Playlist. April 28, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 28, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McCullough, Hayley (May 18, 2022). "Loki's Entire Main Cast Confirmed for Season 2 Return". Comic Book Resources. May 18, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hood, Cooper (February 2, 2022). "Loki Season 2: Gugu Mbatha-Raw Confirms Renslayer's Return". Screen Rant. February 2, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 2, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jirak, Jamie (February 11, 2022). "Loki Star Owen Wilson Teases Season 2 Filming Start". ComicBook.com. February 12, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 11, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Garbutt, Emily (July 13, 2022). "Loki season 2 leak reveals the return of Sylvie in an unlikely location". Total Film. GamesRadar+. July 14, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 14, 2022 அன்று பார்க்கப்பட்டது.
வெளிப்புற இணைப்புகள்[தொகு]
- டிஸ்னி+ அசல் நிகழ்ச்சிகள்
- அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்
- ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம்
- குற்ற தொலைக்காட்சித் தொடர்கள்
- பரபரப்பூட்டும் தொலைக்காட்சி தொடர்கள்
- அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள்
- சாகசத் தொலைக்காட்சி தொடர்கள்
- மீநாயகன் தொலைக்காட்சி தொடர்கள்
- வெளிவரவிருக்கும் தொலைக்காட்சி தொடர்கள்
- தொலைக்காட்சி பருவங்கள்