வின்ஸ்டன் துயூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வின்ஸ்டன் துயூக்
Winston Duke by Gage Skidmore.jpg
பிறப்புநவம்பர் 15, 1986 (1986-11-15) (அகவை 34)
ஆர்கைல், டொபாகோ
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை

வின்ஸ்டன் துயூக் (ஆங்கில மொழி: Winston Duke) (பிறப்பு: நவம்பர் 15, 1986) என்பவர் டொபகோனியன்-அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பான்தர் (2018),[1] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'எம்'பாகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[2]

இவர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (2014-2015), த மெஸ்சேன்ஜ்ர்ஸ் (2015), மாடர்ன் பேமிலி (2016) போன்ற தொடர்களிலும் அஸ் (2019),[3] நைன் டேஸ் (2020), ஸ்பென்சர் கோணபிடென்டில் (2020)[4] போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

துயூக் நவம்பர் 15, 1986 ஆம் ஆண்டு டொபாகோவின்[5][6] ஆர்கைலில் பிறந்தார். அவரது தாயார் கோரா பான்டின்[7] மற்றும் சகோதரிக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். இவர் 2004 இல் நியூயார்க்கின் இரோசெச்டரில் உள்ள பிரைட்டன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[8] புபிபாலோ என்ற பல்கலைக்கழகத்தில் நாடாக இளங்கலையில் பயின்றார். பின்னர் அவர் யேல் இஸ்கூல் ஆப் டிராமாவுக்குச் சென்று அங்கு அவர் நடிப்பில் மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ்சில் 2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Falcone, Dana Rose (October 4, 2017). "PEOPLE's 'Ones to Watch' Talks to Winston Duke About His Breakout Role in Marvel's Upcoming Black Panther". People. http://people.com/movies/winston-duke-black-panther-interview/. 
  2. Kroll, Justin (September 28, 2016). "'Black Panther' Taps 'Person of Interest' Actor Winston Duke to Play M'Baku (EXCLUSIVE)". https://variety.com/2016/film/news/black-panther-mbaku-man-ape-winston-duke-1201873246/. 
  3. Hipes, Patrick (May 8, 2018). "Jordan Peele Unveils Title Of New Movie; Lupita Nyong'o In Talks, Winston Duke & Elisabeth Moss Eyed". Deadline Hollywood.
  4. Kroll, Justin (October 2, 2018). "'Black Panther's' Winston Duke to Star With Mark Wahlberg in Netflix's 'Wonderland' (EXCLUSIVE)". Variety. https://variety.com/2018/film/news/winston-duke-mark-wahlberg-wonderland-1202961360/. 
  5. "Winston Duke".
  6. Desta, Yohana (February 16, 2018). "MEET M'BAKU Black Panther's Winston Duke Is the Star You Should Be Watching". Vanity Fair. https://www.vanityfair.com/hollywood/2018/02/winston-duke-black-panther-mbaku-interview. 
  7. Jacob, Debbie (April 2, 2018). "Hands off Winston Duke". Trinidad & Tobago NewsDay. http://newsday.co.tt/2018/04/02/hands-off-winston-duke/. 
  8. Arnold, Alexis (May 22, 2018). "From Brighton High School to Wakanda: Winston Duke remembers his days in Rochester". 13WHAM ABC Rochester. https://13wham.com/news/local/from-brighton-high-school-to-wakanda-winston-duke-remembers-his-days-in-rochester. 
  9. "Winston Duke, UB Alumnus, Cast in Marvel Film". University at Buffalo.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ஸ்டன்_துயூக்&oldid=3190038" இருந்து மீள்விக்கப்பட்டது