சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சம்
தயாரிப்பு
மூலக்கதைமார்வெல் வரைகதை
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடு2018–தற்போது வரை
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (2 படம்):
$210 மில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (2 படம்):
$1.041 மில்லியன்

சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சம் (Sony's Spider Man Universe) என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது மார்வெல் வரைகதைகளில் தோன்றும் மீநாயகன் கதாப்பாத்திரங்களை பற்றி மார்வெல் மகிழ்கலை மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படங்கள் இசுபைடர் மேன் கதாபாத்திரத்துடன் தொடர்புடைய பல்வேறு மார்வெல் வரைகதை கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படுகிறது. இப் பிரபஞ்சமானது இசுபைடர் மேன் படங்களின் துணை கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி புதிய படங்களை உருவாக்கும் பணிகள் டிசம்பர் 2013 க்குள் தொடங்கின. அதற்காக 2014 ஆம் ஆண்டு சோனி தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2[1] என்ற திரைப்படத்தை பயன்படுத்தி 'வெனம்'[2] என்ற சூப்பர்வில்லன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது. இப்படத்தின் நிதி தோல்விக்குப் பிறகு இந்த படத்தின் அடுத்த பாகங்களை தயாரிக்கும் திட்டத்தை சோனி நிறுவனம் கைவிடப்பட்டு பிப்ரவரி 2015 இல் சோனி நிறுவனத்தின் எதிர்கால ஸ்பைடர் மேன் படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் உடன் இணைத்து தயாரிக்க ஒத்துழைத்து. அந்த கதாபாத்திரத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் ஒருங்கிணைக்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது. இதன் விளைவாக இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019), மற்றும் வரவிருக்கும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021) ஆகியவற்றை உருவாக்கியது.

அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில் சோனி நிறுவனம் வெனம்[3] என்ற படத்தை உருவாக்கியது. அது சோனி படங்கள் பிரபஞ்சத்தின் சொந்த படம் ஆகும். சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்தது மார்வெல் திரைப் பிரபஞ்சம் மற்றும் அவர்களின் தனித்துவமான மார்வெல் சார்ந்த படங்களுக்கு இடையில் இசுபைடர் மேன் கதாபாத்திரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக 2019 ஆம் ஆண்டில் தங்கள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தன.

திரைப்படங்கள்[தொகு]

படம் வெளியீட்டு தேதி இயக்குனர் தயாரிப்பாளர் (கள்) நிலை
வெனம் அக்டோபர் 5, 2018 (2018-10-05) ரூபன் பிளைஷர்[4] அவி ஆராட், மாட் டோல்மாச், அமி பாஸ்கல் வெளியிடப்பட்டது
வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் அக்டோபர் 1, 2021 (2021-10-01) ஆண்டி செர்கிஸ் அவி ஆராட், மாட் டோல்மாச், அமி பாஸ்கல், கெல்லி மார்செல், டோம் ஹார்டி, ஹட்ச் பார்க்கர் வெளியிடப்பட்டது
மோர்பியசு ஏப்ரல் 1, 2022 (2022-04-01)[5] டேனியல் எசுபினோசா[6] அவி ஆராட், மாட் டோல்மாச், லூகாஸ் ஃபாஸ்டர் தயாரிப்பில்

வரவேற்பு[தொகு]

படத்தின் வருவாய்[தொகு]

திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு குறிப்புகள்
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
வெனம் அக்டோபர் 5, 2018 (2018-10-05) $213,515,506 $642,569,645 $856,085,151 188 75 $100 மில்லியன் [7]
வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் அக்டோபர் 1, 2021 (2021-10-01) $169,355,231 $115,600,000 $284,955,231 648 1,311 $110 மில்லியன் [8]
மொத்தம் $38,28,70,737 $75,81,69,645 $1,14,10,40,382 N/A N/A $210 மில்லியன் N/A


மேற்கோள்கள்[தொகு]

  1. "Sony Pictures Entertainment Brings Marvel Studios Into The Amazing World Of Spider-Man". Marvel Comics. February 9, 2015. Archived from the original on February 10, 2015. பார்க்கப்பட்ட நாள் February 10, 2015.
  2. Patten, Dominic (December 13, 2013). "Sony Sets Spider-Man Spinoffs 'Venom,' 'Sinister Six' With New "Franchise Brain Trust"". Deadline Hollywood. Archived from the original on May 20, 2017. பார்க்கப்பட்ட நாள் May 20, 2017.
  3. Kit, Boris (March 4, 2016). "'Spider-Man' Spinoff 'Venom' Revived at Sony (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on May 20, 2017. பார்க்கப்பட்ட நாள் May 21, 2017.
  4. Busch, Anita (May 19, 2017). "Tom Hardy Is 'Venom' In New Sony Marvel Film To Be Directed By Ruben Fleischer". Deadline Hollywood. Archived from the original on May 20, 2017. பார்க்கப்பட்ட நாள் May 21, 2017.
  5. D'Alessandro, Anthony (April 30, 2021). "Sony Marvel Movie 'Morbius' Shifts A Week Later Next Winter". Deadline Hollywood. Archived from the original on May 1, 2021. பார்க்கப்பட்ட நாள் May 1, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  6. Kroll, Justin (June 27, 2017). "Jared Leto to Star in 'Spider-Man' Spinoff 'Morbius' From Director Daniel Espinosa". Variety. Archived from the original on June 27, 2018. பார்க்கப்பட்ட நாள் June 28, 2017.
  7. "Venom (2018)". Box Office Mojo. Archived from the original on September 2, 2020. பார்க்கப்பட்ட நாள் October 16, 2020.
  8. "Venom: Let There Be Carnage". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் October 19, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)