மூன் நைட் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன் நைட்
வகை
உருவாக்கம்ஜெரமி இசுலேட்டர்
நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுகிரிகோரி மிடில்டன்[3]
ஓட்டம்40–50 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 30, 2022 (2022-03-30) –
மே 4, 2022 (2022-05-04)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

மூன் நைட் (ஆங்கில மொழி: Moon Knight) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மூன் நைட் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[4][5] ஓடிடி தளத்திற்காக ஜெரமி இசுலேட்டர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ்[6] தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி ஆகும்.[7] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் ஆஸ்கர் ஐசக்[8][9] என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் மூன் நைட் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் ஆவணி 2019 இல் அறிவிக்கப்பட்டது, கார்த்திகை மாதத்தில் ஜெரமி இசுலேட்டர் பணியமர்த்தப்பட்டார். ஐப்பசி 2020 இல் தொடரின் நான்கு அத்தியாயங்களை இயக்குவதற்கு முகமது தியாப்[10] பணியமர்த்தப்பட்டார், ஜஸ்டின் பென்சன்[11] மற்றும் ஆரோன் மூர்ஹெட் ஆகிய இருவரும் தை 2021 இல் தொடரில் இணைந்து மற்ற இரண்டு அத்தியாயங்களையும் இயக்கினர், அந்த நேரத்தில் ஐசக் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு சித்திரை 2021 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக மார்ச் 30, 2022 அன்று திரையிடப்பட்டது, மேலும் மே 4 வரை ஆறு அத்தியாயங்களில் ஓடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஐசக் மற்றும் ஹாக்கின் செயல்திறன் மற்றும் முந்தைய மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசம் மற்றும் தனித்திறமை ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Kim, Matt T.M. (February 24, 2021). "Kevin Feige Shares Updates on Ms. Marvel, Moon Knight, and More Disney Plus Series". IGN. February 24, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 24, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. Ritman, Alex (September 3, 2021). "How Egyptian Filmmaker Mohamed Diab Went From Cairo to Marvel (Via Palestine)". The Hollywood Reporter. September 3, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 3, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. Schaefer, Sandy (January 7, 2021). "Moon Knight Cinematographer Confirms Oscar Isaac's Role in the Disney+ Series". Comic Book Resources. January 7, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 7, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. November 12, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. August 23, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 23, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Marvel pacts with No Equal Duo to develop skein based on superhero Moon Knight". Variety. October 24, 2006. August 24, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 24, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 7. Hood, Cooper (April 23, 2018). "Moon Knight Is In The Future Plans For the MCU". Screen Rant. August 24, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 24, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. Otterson, Joe (October 26, 2020). "Oscar Isaac in Talks to Star in 'Moon Knight' Series at Disney Plus". Variety. October 26, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 26, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. Newby, Richard (October 26, 2020). "'Moon Knight,' Oscar Isaac and an Expanding Marvel Universe". The Hollywood Reporter. October 27, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 27, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. Andreeva, Nellie; Kroll, Justin (October 27, 2020). "'Moon Knight': Mohamed Diab To Direct Marvel's Disney+ Series". Deadline Hollywood. October 27, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 27, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 11. Kit, Borys (January 8, 2021). "Marvel's 'Moon Knight': Indie Auteurs Justin Benson and Aaron Moorhead Board as Directors (Exclusive)". The Hollywood Reporter. January 8, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 8, 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]