அயன்ஹார்டு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயன்ஹார்டு
வகை
உருவாக்கம்சினக்க கோட்ஜ்
நடிப்பு
 • டொமினிக் தோர்ன்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • கேவின் பிகே
 • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
 • விக்டோரியா அலோன்சோ
 • பிராட் விண்டர்பாம்
 • ஜோயி நாகல்ஹவுட்
 • ரையன் கூக்லர்[1]
 • ஜின்சி கூக்லர்
 • செவ் ஓஹானியன்
 • சினக்க கோட்ஜ்
படப்பிடிப்பு தளங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

அயன்ஹார்டு (ஆங்கில மொழி: Ironheart) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் வெளியான மார்வெல் காமிக்சு கதாபாத்தித்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ என்ற ஓடிடி தளத்திற்காக சினக்க கோட்ஜ் என்பவர் உருவாக்குகிறார்.[2][3]

இது மார்வெல் இசுடியோசு தயாரித்த, மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொலைக்காட்சித் தொடரின் ஒரு ஆகும். இது சினக்க கோட்ஜ் என்பவர் தலைமை எழுத்தாளராக பணியாற்றுகிறார். இந்தத் தொடரை புராக்ஸிமிட்டி மீடியா மற்றும் 20வது தொலைக்காட்சியும் தயாரித்துள்ளது.

இந்த தொடரில் நடிகை டொமினிக் தோர்ன்[4] என்பவர் ரிரி வில்லியம்ஸ் மற்றும் அயன்ஹார்ட் ஆக நடிக்க தேர்வு செய்யப்பட்டு, டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டார். அத்துடன் சினக்க கோட்ஜ் ஏப்ரல் 2021 இல் பணியமர்த்தப்பட்டார், பிப்ரவரி 2022 இல் கூடுதல் நடிகர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து சாம் பெய்லி மற்றும் ஏஞ்சலா பார்ன்ஸ் ஆகியோர் ஏப்ரல் 2022 இல் இந்த தொடரை இயக்க பணியமர்த்தப்பட்டனர். இந்த தொடரின் படப்பிடிப்பு ஜூன் தொடக்கத்தில் ஜார்ஜியாவின் அட்லான்டாவில் உள்ள ட்ரிலித் இசுடியோவில் தொடங்கியது, மேலும் சிகாகோவிலும் அக்டோபர் நடுப்பகுதி வரை நீடித்தது.[5]

எக்கோ தொடர் டிஸ்னி+ இல் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.[6] இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Fleming, Mike Jr. (February 1, 2021). "'Black Panther' Helmer Ryan Coogler Stakes His Proximity Media Banner To 5-Year Exclusive Disney Television Deal; Wakanda Series In Works For Disney+". Deadline Hollywood. Archived from the original on February 1, 2021. பார்க்கப்பட்ட நாள் February 1, 2021.
 2. Couch, Aaron; Goldberg, Lesley (April 27, 2021). "Marvel's 'Ironheart' Enlists Chinaka Hodge as Head Writer for Disney+ Series". The Hollywood Reporter. Archived from the original on April 27, 2021. பார்க்கப்பட்ட நாள் April 27, 2021.
 3. Gelman, Vlada (December 10, 2020). "Secret Invasion, Marvel Series Starring Samuel L. Jackson, Coming to Disney+". TVLine. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
 4. Travis, Ben (March 15, 2021). "Marvel's Ironheart Star Dominique Thorne On Being Cast As Riri Williams With 'No Audition At All' – Exclusive". Empir. Archived from the original on March 16, 2021. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
 5. "Production Weekly – Issue 1254 – Thursday, July 8, 2021 / 154 Listings – 34 Pages". Production Weekly. July 7, 2021. Archived from the original on July 8, 2021. பார்க்கப்பட்ட நாள் July 7, 2021.
 6. Vary, Adam B. (July 23, 2022). "Marvel Studios' Phases 5 and 6: Everything We Learned at Comic-Con About the Multiverse Saga". Variety. Archived from the original on July 24, 2022. பார்க்கப்பட்ட நாள் July 24, 2022.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]