தி டிபென்டெர்சு (தொலைக்காட்சித் தொடர்)
தி டிபென்டெர்சு | |
---|---|
வகை | |
உருவாக்கம் |
|
நடிப்பு |
|
பிண்ணனி இசை | ஜான் பெசானோ |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 8 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | இவான் பெராஸ்ஸோ |
படப்பிடிப்பு தளங்கள் | நியூயார்க் நகரம் |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு |
|
ஓட்டம் | 44–55 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பான காலம் | ஆகத்து 18, 2017 |
Chronology | |
முன்னர் | அயன் பிஸ்ட் |
தொடர்புடைய தொடர்கள் | மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள் |
தி டிபென்டெர்சு (ஆங்கில மொழி: The Defenders) என்பது நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக டக் பெட்ரீ மற்றும் மார்கோ ராமிரெஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய, அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி நாடக குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் வரைகதை கதாபாத்திரங்களான டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ் மற்றும் அயன் பிஸ்ட் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு மீநாயகன் குழுவாக உருவாக்கப்பட்டுள்ளது.[1]
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[2] அமைக்கப்பட்டுள்ளது. இதன் உரிமைகள் பிற மற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த குறுந்தொடர் என்பது மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடருடன் இணைந்து வழங்கும் பல ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களுக்கான மகாசங்கம நிகழ்வாகும். இது ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் கோடார்ட் டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து மார்வெல் தொலைக்காட்சியும் தயாரித்துள்ளது.
இந்தத் தொடரில் மாட் மர்டாக் மற்றும் டேர்டெவிலாக சார்லி சாக்ஸ்[3][4] என்பவரும், ஜெசிகா ஜோன்ஸாக[5] நடிகை கிரிஸ்டன் ரிட்டரும்,[6] லூக் கேஜாக நடிகர் மைக் கோல்டரும்[7] மற்றும் டேனி ராண்ட் மற்றும் அயர்ன் பிஸ்டாக நடிகர் பின் ஜோன்சு என்பவரும் நடித்துள்ளனர்.
இந்த தொடர் ஜூலை 31, 2017 அன்று நியூயார்க்கில் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 18 அன்று நெற்ஃபிளிக்சு இல் அனைத்து எட்டு அத்தியாயங்களும் வெளியிடப்பட்டன. விமர்சகர்கள் மத்தியில் இந்த மகா சங்கமம் பற்றி பெரும்பாலும் நேர்மறையாயான கருத்து இருந்தது.
கதை[தொகு]
இது டேர்டெவில் தொடரின் இரண்டாவது பருவத்தின் சில மாதங்களுக்குப் பிறகு மற்றும் அயன் பிஸ்டின் தொடரின் முதல் பருவத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ் மற்றும் அயர்ன் பிஸ்ட் ஆகியோர் நியூயார்க் நகரத்தில்[8] அவர்களின் பொதுவான எதிரியாக கை உடன் சண்டையிடுகிறார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stolworthy, Jacob (April 11, 2016). "Daredevil actor Charlie Cox announces filming date for Netflix superhero series The Defenders". The Independent. April 11, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 11, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Blackmon, Joe (April 27, 2014). "Marvel Netflix Series Part of Marvel Cinematic Universe, Available For Binge Watching According To Joe Quesada". ComicBook.com. April 28, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 28, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charlie Cox to Star in Daredevil TV Series for Marvel and Netflix". Variety. May 27, 2014. May 27, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 27, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Stolworthy, Jacob (April 11, 2016). "Daredevil actor Charlie Cox announces filming date for Netflix superhero series The Defenders". The Independent. April 11, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 11, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bucksbaum, Sydney (December 18, 2015). "Jessica Jones: Krysten Ritter Discusses "Conflicting" Finale and 'Defenders' Team-Up". The Hollywood Reporter. December 19, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 19, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (December 4, 2014). "Krysten Ritter Nabs Lead in Marvel's Jessica Jones". Deadline Hollywood. December 7, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Strom, Marc (December 22, 2014). "Mike Colter to Star as Luke Cage in Marvel's A.K.A. Jessica Jones". Marvel.com. December 22, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 22, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Marvel's Netflix Series to Film in New York City". Marvel.com. February 26, 2014. February 26, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 26, 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- நெற்ஃபிளிக்சு அசல் நிகழ்ச்சிகள்
- அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்
- ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்
- 2017 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள்
- நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- மார்வெல் வரைகதை அடிப்படையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- மீநாயகன் தொலைக்காட்சி தொடர்கள்
- தொலைக்காட்சி குறுந்தொடர்கள்