மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெலின் நெற்ஃபிளிக்சு
தொலைக்காட்சி தொடர்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்13 (6 தொடர்களில்)
அத்தியாயங்கள்161
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
ஓட்டம்41–69 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 10, 2015 (2015-04-10) –
சூன் 14, 2019 (2019-06-14)

மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர்கள் (ஆங்கில மொழி: Marvel's Netflix television series) என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமெரிக்க நாட்டு தொலைக்காட்சித் தொடர்களின் தொகுப்பாகும். இந்த தொடர்கள் ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது, அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[2][3] அமைக்கப்பட்டு, உரிமையாளரின் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியை அங்கீகரிக்கின்றன. இந்த மார்வெல் நெற்ஃபிளிக்சு தொடர்களின் குழுவை "மார்வெல் ஸ்ட்ரீட்-லெவல் கிரோஸ்" அல்லது "மார்வெல் நைட்ஸ்" என்று அழைக்கப்படுகின்றது.

2013 இல் மார்வெல் மற்றும் நெற்ஃபிளிக்சு இடையிலான ஒப்பந்தம் நவம்பரில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து டேர்டெவில் (2015–2018),[4][5] ஜெசிகா ஜோன்சு (2015–2019),[6] லூக் கேஜ் (2016–2018)[7] மற்றும் அயன் பிஸ்ட் (2017–2018),[8][9] ஆகிய தனித் தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. அத்துடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தி டிபென்டெர்சு (2017)[10][11] என்ற தொடரும்,டேர்டெவிலில் இருந்து ஒரு வழித்தொடரான[12] தி பனிஷர் (2017–2019)[13] என்ற தொடரும் உருவானது. இந்தத் தொடர்கள் அனைத்தும் நியூயார்க் மாநிலத்தில் படமாக்கப்பட்டன.

இந்தத் தொடரில் மாட் மர்டாக் மற்றும் டேர்டெவிலாக சார்லி சாக்ஸ்,[14] ஜெசிகா ஜோன்சுவாக கிரிஸ்டன் ரிட்டர்,[15] லூக் கேஜாக மைக் கால்டர்,[16] மற்றும் டேனி ராண்ட் மற்றும் அயர்ன் பிஸ்ட் ஆக பின் ஜோன்சு ஆகியோர் நடித்துள்ளனர், இவர்கள் அனைவரும் தி டிபென்டெர்சு ஒன்றாக நடித்துள்ளனர், மேலும் ஜோன் பெர்ந்தல் என்பவர் பனிஷர் மற்றும் பிராங்காக நடித்துள்ள்ளார். அத்துடன் மார்வெலுடன் ஒரு சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொசாரியோ டாசன் உட்பட பல நடிகர்கள் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளனர்.

மார்வெலின் தாய் நிறுவனமான டிஸ்னி[17] தனது சொந்த ஓடிடி தள சேவையான டிஸ்னி+ க்காக பல தொடர்கள் தயாரித்து வருவதால்,நெற்ஃபிளிக்சு இல் இருந்து அனைத்து தொடர்களையும் பிப்ரவரி 2019க்குள் ரத்து செய்யப்பட்டது. ஒப்பந்தப்படி நெற்ஃபிளிக்சில் ஒளிபரப்பான மார்வெல் தொடர்களின் கதாபாத்திரங்களை பயன்படுத்துவதற்கு மார்வெல் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி[தொகு]

அக்டோபர் 2013 வாக்கில், மார்வெல் நிறுவனம் நெற்ஃபிளிக்சு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடித் தளத்திற்கு தொடர்களை தயாரிக்க தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நான்கு[18] நாடகத் தொடர்களும் மற்றும் குறும் தொடர்களும் கோரிய நேரத்து ஒளித சேவைகள் கீழ் தயாரிக்க முன் வந்தது. அதை தொடர்ந்து டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, அயன் பிஸ்ட் மற்றும் லூக் கேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி தொடர்களை நெற்ஃபிளிக்சு வழங்குவதாக டிஸ்னி அடுத்த மாதம் அறிவித்தது.

தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு நிகழ்ச்சி நடத்துபவர்
டேர்டெவில்[19] 1 13 10 ஏப்ரல் 2015 இசுடீவன் எஸ். டெக்நைட்
2 18 மார்ச் 2016 டக் பெட்ரி & மார்கோ ராமிரெஸ்
3 19 அக்டோபர் 2018 எரிக் ஓல்சன்
ஜெசிகா ஜோன்சு[20] 1 13 20 நவம்பர் 2015 மெலிசா ரோசன்பெர்க்
2 8 மார்ச் 2018
3 14 ஜூன் 2019 மெலிசா ரோசன்பெர்க் & இசுகாட் ரெனால்ட்ஸ்
லூக் கேஜ் 1 13 30 செப்டம்பர் 2016 சியோ கோடாரி கோக்கர்
2 22 ஜூன் 2018
அயன் பிஸ்ட் 1 13 17 மார்ச் 2017 இசுகாட் பக்
2 7 செப்டம்பர் 2018 எம். ரேவன் மெட்ஸ்னர்
தி டிபென்டெர்சு[21] 1 8 18 ஆகஸ்ட் 2017 எம். ரேவன் மெட்ஸ்னர்
தி பனிஷர்[22] 1 13 17 நவம்பர் 2017 இசுடீவ் லைட்ஃபூட்
2 18 ஜனவரி 2019

மேற்கோள்கள்[தொகு]

 1. Patten, Dominic (August 12, 2019). "Marvel TV Boss Jeph Loeb On Secret ABC Series, Disney+, 'Legion' End, More Crossovers, 'Ghost Rider' & Hulu Plans". Deadline Hollywood. August 12, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 13, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 2. Cornet, Roth (April 8, 2015). "Daredevil: How the Netflix Series Will Change the Marvel Cinematic Universe". IGN. April 9, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 9, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. Blackmon, Joe (April 27, 2014). "Marvel Netflix Series Part of Marvel Cinematic Universe, Available For Binge Watching According To Joe Quesada". ComicBook.com. April 28, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 28, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Charlie Cox is the Man Without Fear in Marvel's Daredevil". Marvel.com. May 27, 2014. May 28, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 27, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Drew Goddard Joins Daredevil on Netflix". Marvel.com. December 6, 2013. April 8, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 6, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 6. Andreeva, Nellie (November 19, 2014). "Marvel's 'Jessica Jones': Krysten Ritter, Alexandra Daddario, Teresa Palmer, Marin Ireland, Jessica De Gouw Testing For Lead". Deadline Hollywood. November 20, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. Strom, Marc (September 15, 2015). "Alfre Woodard Joins 'Marvel's Luke Cage' for Netflix". Marvel.com. September 16, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 15, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 8. Hibberd, James (February 25, 2016). "Game of Thrones actor Finn Jones to play Iron Fist". Entertainment Weekly. February 25, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 25, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 9. Strom, Marc (March 17, 2016). "Finn Jones to Star in the Netflix Original Series 'Marvel's Iron Fist'". Marvel.com. March 17, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 10. Vejvoda, Jim (March 17, 2016). "Marvel's Iron Fist: Game Of Thrones' Finn Jones Cast In Title Role Of Netflix Series". IGN. February 26, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 11. Strom, Marc (April 15, 2015). "Netflix Original Series 'Marvel's The Defenders' Finds Its Showrunners". Marvel.com. April 15, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 15, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 12. Goldberg, Leslie (January 16, 2016). "Netflix Plotting 'Punisher' Spinoff Starring Jon Bernthal". The Hollywood Reporter. January 16, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. Ausiello, Michael (January 16, 2016). "Punisher Spinoff Starring Jon Bernthal in Development at Netflix". TVLine. January 16, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Marvel TV head: 'Daredevil' starts shooting in July, 'Jessica Jones' next up". HitFix. March 24, 2014. March 25, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 25, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 15. Andreeva, Nellie (December 4, 2014). "Krysten Ritter Nabs Lead in Marvel's 'Jessica Jones'". Deadline Hollywood. December 7, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 16. Walzer, Graham (September 27, 2016). "Mike Colter, Luke Cage, and the "Wu-Tang-ification" of the Marvel Universe". Complex. September 28, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 28, 2016 அன்று பார்க்கப்பட்டது.
 17. Graser, Marc (November 7, 2013). "Why Disney Chose to Put Marvel's New TV Shows on Netflix". Variety. February 20, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 18. Lieberman, David (November 7, 2013). "Disney To Provide Netflix With Four Series Based on Marvel Characters". Deadline Hollywood. April 8, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Steven S. DeKnight Joins 'Marvel's Daredevil'". Marvel.com. May 24, 2014. May 24, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 24, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Marvel TV head: 'Daredevil' starts shooting in July, 'Jessica Jones' next up". HitFix. March 24, 2014. March 25, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 25, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 21. Otterson, Joe (December 12, 2018). "Don't Expect 'The Defenders' on Disney Streaming Service Any Time Soon (Exclusive)". Variety. December 12, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 13, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 22. Patten, Dominic (February 18, 2019). "'The Punisher' & 'Jessica Jones' Canceled By Netflix; Latter's 3rd Season Still To Air". Deadline Hollywood. February 18, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 18, 2019 அன்று பார்க்கப்பட்டது.