ஏஜென்ட் கார்ட்டர் (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜென்ட் கார்ட்டர்
வகை
உருவாக்கம்கிறிஸ்டோபர் மார்கஸ்
இசுடீபன் மெக்பீலி
நடிப்பு
பிண்ணனி இசைகிறிஸ்டோபர் லெனெர்ட்ஸ்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்2
அத்தியாயங்கள்18
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • ஆலன் பைன்
 • ஸ்டான் லீ
 • ஜோ கியூசாடா
 • கேவின் பிகே
 • லூயிஸ் டி'எஸ்போசிடோ
 • ஜெஃப் லோப்
 • கிறிஸ்டோபர் மார்கஸ்
 • ஸ்டீபன் மெக்ஃபீலி
 • கிறிஸ் டிங்கஸ்
 • மைக்கேல் ஃபஸேகாஸ்
 • தாரா பட்டர்ஸ்
 • ஜிம் சோரி
தயாரிப்பாளர்கள்சாரா ஈ. வைட்
படப்பிடிப்பு தளங்கள்லாஸ் ஏஞ்சலஸ்
ஒளிப்பதிவு
தொகுப்பு
 • மார்க் ஹார்ட்செல்
 • கிறிஸ் பெப்பே
 • கிறிஸ்டோபர் குக்
 • டிராய் டகாக்கி
 • டேவிட் சீகல்
 • ஆண்ட்ரூ டூயர்ஃபர்
ஓட்டம்41–43 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைஏபிசி
படவடிவம்720p (HDTV)
ஒளிபரப்பான காலம்சனவரி 6, 2015 (2015-01-06) –
மார்ச்சு 1, 2016 (2016-03-01)
Chronology
தொடர்புடைய தொடர்கள்
வெளியிணைப்புகள்
Official website

ஏஜென்ட் கார்ட்டர் (ஆங்கில மொழி: Agent Carter) என்பது ஏபிசி தொலைக்காட்சிக்காக கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி[3] ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க நாட்டு அதிரடி சாகச மீநாயகத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[4][5][6]

இது பெக்கி கார்ட்டர் என்ற மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் 2011 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்[7] மற்றும் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஏஜென்ட் கார்ட்டர் என்ற மார்வெல் ஒன்-சாட்சு[8] குறும்படத்தில் இவரது கதாப்பாத்திரம் அறியப்படுகின்றது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் உரிமைகள் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களுடன் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தத் தொடரை ஏபிசி ஸ்டுடியோஸ், மார்வெல் தொலைக்காட்சி மற்றும் எஃப்&பி ஃபேஸ்காஸ் & பட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜேம்ஸ் டி'ஆர்சி,[9] சாத் மைக்கேல் முர்ரே மற்றும் என்வர் ஜோகாஜ்[10] ஆகியோருடன் இணைந்து கெய்லி அட்வெல்[11][12]என்பவர் பெக்கி கார்டராக நடித்துள்ளார்.

இந்த தொடரில் கார்ட்டர் என்பவர் 1940களில் அமெரிக்காவில் ஒரு தனிப் பெண்ணின் ரகசிய முகவராக வாழ்க்கையை சமநிலைப்படுத்த போராடுகிறார். இந்த தொடர் குறும்படத்தால் ஈர்க்கப்பட்டு தொடரின் உருவாக்கம் செப்டம்பர் 2013 இல் தொடங்கியது, சனவரி 2014 இல் நடிகை கெய்லி அட்வெல் என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டார். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து பல கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களின் தோற்றத்தை அறிமுகப்படுத்துகிறது,

இந்த தொடரின் எட்டு அத்தியாயங்கள் அடங்கிய முதல்பருவம் சனவரி 6 முதல் பிப்ரவரி 24, 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது, அதே சமயம் 10 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது பருவம் சனவரி 19 முதல் மார்ச் 1, 2016 வரை ஒளிபரப்பப்பட்டது.

தொடரின் பருவங்கள்[தொகு]

பருவங்கள் ஒளிபரப்பு அத்தியாயங்கள்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
பருவம் 1 (2015) சனவரி 6, 2015 (2015-01-06) பெப்ரவரி 24, 2015 (2015-02-24) 8
பருவம் 2 (2016) சனவரி 19, 2016 (2016-01-19) மார்ச்சு 1, 2016 (2016-03-01) 10

மேற்கோள்கள்[தொகு]

 1. Andreeva, Nellie (September 22, 2014). "Shea Whigham To Co-Star On 'Marvel's Agent Carter'" இம் மூலத்தில் இருந்து September 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140924041227/http://deadline.com/2014/09/agent-carter-cast-shea-whigham-marvel-839001/. 
 2. "Christopher Lennertz to Score Marvel's 'Agent Carter' TV Series". Film Music Reporter. September 4, 2014 இம் மூலத்தில் இருந்து September 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140906071419/http://filmmusicreporter.com/2014/09/04/christopher-lennertz-to-score-marvels-agent-carter-tv-series/. 
 3. Weintraub, Steve (March 13, 2014). "Screenwriters Christopher Markus and Stephen McFeely Talk Agent Carter TV Series; Reveal Timeline, Plot and Planned Episode Count". Collider இம் மூலத்தில் இருந்து March 14, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140314015215/http://collider.com/agent-carter-tv-series-christopher-markus-stephen-mcfeely/. 
 4. Andreeva, Nellie (September 18, 2013). "Marvel Developing 'Agent Carter' TV Series" இம் மூலத்தில் இருந்து September 20, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130920002134/http://www.deadline.com/2013/09/marvel-developing-agent-carter-tv-series/. 
 5. Nissim, Mayer (October 2, 2013). "Exclusive: Hayley Atwell: 'I'd definitely do Agent Carter TV show'". Digital Spy இம் மூலத்தில் இருந்து October 5, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005003112/http://www.digitalspy.com/tv/news/a520233/hayley-atwell-id-definitely-do-agent-carter-tv-show.html. 
 6. Strom, Marc (May 10, 2014). "First Details on Marvel's Agent Carter". Marvel.com இம் மூலத்தில் இருந்து May 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140512214616/http://marvel.com/news/tv/2014/5/10/22496/first_details_on_marvels_agent_carter. 
 7. Hibberd, James (May 8, 2014). "ABC renews 'SHIELD' plus orders 'Captain America' spin-off" இம் மூலத்தில் இருந்து May 9, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140509202612/http://insidetv.ew.com/2014/05/08/abc-shield-agent-carter/. 
 8. Burlingame, Russ (June 21, 2014). "Agent Carter One-Shot Composer Likely Headed to the TV Series". Comicbook.com இம் மூலத்தில் இருந்து June 29, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140629173605/http://comicbook.com/blog/2014/06/21/agent-carter-one-shot-composer-likely-headed-to-the-tv-series/. 
 9. Kroll, Justin (September 16, 2014). "James D'Arcy to Co-Star With Hayley Atwell in Marvel's 'Agent Carter' (EXCLUSIVE)" இம் மூலத்தில் இருந்து September 17, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917182159/http://variety.com/2014/film/news/james-darcy-hayley-atwell-marvels-agent-carter-1201306951/. 
 10. Andreeva, Nellie (August 29, 2014). "Enver Gjokaj Cast in ABC Series 'Marvel's Agent Carter'" இம் மூலத்தில் இருந்து September 1, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140901035651/http://deadline.com/2014/08/agent-carter-cast-enver-gjokaj-marvel-series-826611/. 
 11. Goldberg, Lesley (January 17, 2014). "Marvel's 'Agent Carter': Hayley Atwell, Writers, Showrunners Confirmed for ABC Drama" இம் மூலத்தில் இருந்து January 19, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140119041219/http://www.hollywoodreporter.com/live-feed/marvels-agent-carter-hayley-atwell-671839. 
 12. Hughes, Jason (May 16, 2014). "Hayley Atwell Reveals 'Marvel's Agent Carter' Will Have 8-Episode Run on ABC (Video)". The Wrap இம் மூலத்தில் இருந்து May 17, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517165846/http://www.thewrap.com/hayley-atwell-marvel-agent-carter-eight-episodes/. 

வெளி இணைப்புகள்[தொகு]